புத்தாக்க தொழில்நுட்பத்திலான (Inotec) பொலிஎதிலீன் (PE) குழாய் உற்பத்தி தொழிற்சாலையை Hayleys Agriculture Holdings Limited திறந்து வைத்துள்ளதன் மூலம் விவசாய நீர்ப்பாசனத்தில் ஒரு புதிய சகாப்தம் உதயமாகியுள்ளது. Lindel கைத்தொழில் வலயமான சபுகஸ்கந்தவிற்குள் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையானது, மேம்பட்ட நீர்ப்பாசன தீர்வுகளை வழங்குவதன் மூலம், இலங்கையின் விவசாய நடைமுறைகளில் புரட்சியை ஏற்படுத்தவுள்ளது.
இவ்விழாவின் பிரதம அதிதிகளாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, Hayleys PLC இன் தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே உள்ளிட்டோர் கலந்து கொண்டதோடு, விவசாயத் துறை நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Hayleys Agriculture Holdings Limited மற்றும் புகழ்பெற்ற PE குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள் உற்பத்தியாளரான தாய்லாந்தின் Kanok Products ஆகியவற்றிற்கு இடையேயான ஒரு மிகப் பாரிய கூட்டாண்மையின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையிலான இந்த நிகழ்வானது, மேம்பட்ட நுண்-நீர்ப்பாசன தொழில்நுட்பத்தில் Kanok இன் நிபுணத்துவத்தை Hayleys Agriculture இன் நோக்குடன் இணைந்து செயற்படுத்துகிறது. நாட்டின் விவசாயத் துறையானது மட்டுப்படுத்தப்பட்ட நீர் வளங்களை எதிர்கொள்வதாலும், இலங்கையில் நிலவும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் வரட்சி நிலைமைகளை எதிர்த்து போராடவும் இக்கூட்டணியின் முக்கியத்துவம் அவசியமாக காணப்படுகிறது. இந்த அழுத்தம் மிக்க சிக்கல்களைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள இந்த ஒத்துழைப்பானது, முறையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கூட்டு முயற்சிகளை உறுதிப்படுத்தி, விவசாயத் துறையில் அற்புதமான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை வழங்க வழியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த உற்பத்தி தொழிற்சாலையானது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயர் அடர்த்தி கொண்ட பொலி எதிலீன் (HDPE) மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட பொலி எதிலீன் (LDPE) குழாய்களை போட்டி விலையில் வழங்குவதன் மூலம் பல்வேறு நன்மைகளை உறுதியளிக்கிறது. உயர்தர ரெசின்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் 16 மி.மீ. முதல் 63 மி.மீ. வரை விட்டம் கொண்ட இந்த குழாய்கள் பல்வேறு விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்து, சொட்டுநீர் மற்றும் தெளிநீர் முறையிலான நீர்ப்பாசன முறைகளுக்கான வசதிகளை வழங்குகிறது.
Hayleys Agriculture ஆனது விவசாய நீர்ப்பாசனத் துறையில் நீண்ட காலமாக சிறந்து விளங்கி வருவதன் மூலம், நம்பிக்கையை வென்றுள்ளது. Hayleys Agriculture இனது விவசாய உபகரணங்கள் பிரிவின் கீழ் நிறுவப்பட்டுள்ள வர்த்தக நாமமான, ‘Inotec Piyasa’ ஆனது, நாட்டின் விவசாயத் துறையில் அசைக்க முடியாத விற்பனைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சேவைகளை வழங்குவதில் நற்பெயரைப் பெற்றுள்ளது.
Hayleys Agro Technica Ltd நிறுவனத்தின் பணிப்பாளரும், Hayleys Agriculture Holdings Limited நிறுவனத்தின் விவசாய உபகரணப் பிரிவின் பொது முகாமையாளருமான சுமித் ஹேரத் இது தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கையின் விவசாய நடைமுறைகளில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்த கூட்டாண்மை ஒரு சான்றாகும். Kanok இன் மேம்பட்ட நுண்-நீர்ப்பாசன தொழில்நுட்பத்துடன் இணைந்து Hayleys Agriculture ஆனது, எமது விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் முன்னணியில் நின்று செயற்படும்.” என்றார்.
இந்த தொழிற்சாலையின் திறந்து வைப்பானது, இலங்கையின் விவசாய உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் குறிப்பிடும்படியான முன்னோக்கி காலடி எடுத்து வைப்பதைக் குறிக்கிறது. Hayleys Agriculture Holdings Limited ஆனது, புத்தாக்கம் மற்றும் தரத்திற்கான அதன் அர்ப்பணிப்பின் மூலம் தூண்டப்பட்டு, விவசாயத் துறையிலும் அதற்கு அப்பாலும், மாற்றியமைக்கும் ஒரு சக்தியாகத் திகழ்கிறது.
END