முன்னோக்கிய பேஷனை விரும்பும் இளைஞர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சேகரிப்புகளை ஒன்லைனில் வெளியிட்டுள்ள ராஜா ஜுவலர்ஸ்

இலங்கையின் தங்கநகை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ராஜா ஜுவலர்ஸ், இளைஞர்களின் இதயங்களைக் கவரும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியான தயாரிப்புகளுக்கான ஒன்லைன் பிரிவை அண்மையில் வெளியிட்டது. இதன் மூலம், தொழில்துறையில் 95 ஆண்டுகளுக்கும் மேலான நீடித்த பாரம்பரியத்துடனும், பெருமையுடனும் நவீன தலைமுறையின் மாறும் இரசனைகளை வெளிப்படுத்தும், கவர்ச்சியான சேகரிப்பை ராஜா ஜுவலர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

அண்மைய தயாரிப்புகளின் ஒன்லைன் வெளியீடு தொடர்பில் ராஜா ஜுவலர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் அத்துல எலியபுர கருத்துத் தெரிவிக்கையில், “எமது வர்த்தகநாம நெறிமுறையானது, முன்னோக்கிய பேஷனை விரும்பும் இளைஞர்களுக்கு, தனிப்பயனாக்கப்பட்ட, அவர்களது பாணிக்கு ஏற்ற வகையிலான, அன்றாடம் பயன்படுத்தும் நகைகளை மேம்படுத்தி, அவர்களது வாழ்க்கைக்கு பொருந்தும் வகையில் வழங்குவதில் உறுதியாக உள்ளது. எமது வர்த்தகநாமத்தின் தனித்துவம் மற்றும் காலத்தின் போக்கிற்கு ஏற்ற தன்மை ஆகியவற்றின் தனிச்சிறப்பு அம்சங்களின் கலவையை கொண்டு அமைந்த வடிவமைப்புகளை நாம் மிக கவனமாக தயாரித்து வழங்குகின்றோம்.” என்றார்.

இந்த ஒன்லைன் சேகரிப்பின் வெளியீடானது, இளைஞர்களின் அபிலாஷைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதோடு. அவர்களை டிஜிட்டல் வெளியில் இருப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நாகரீகமான நகைகள் மற்றும் சமீபத்திய போக்குடனான வடிவமைப்புகள் மீதான ஆர்வத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. ராஜா ஜுவலர்ஸ் காட்சியறைகளில் கிடைக்கக்கூடிய தெரிவு செய்யப்பட்ட வடிவமைப்புகளில், முதன்மையாக ஒன்லைனில் கிடைக்கும் இந்த தயாரிப்புகளானவை, சர்வதேச அளவில் ஈர்க்கப்பட்ட, சர்வதேச பூர்த்தியில் அமைந்த நவநாகரீக நகைகளை காட்சிப்படுத்துகிறது. தரக் கட்டுப்பாடு, கைவினைத்திறன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலமான ராஜா ஜுவலர்ஸின் சுமார் நூற்றாண்டு கால அர்ப்பணிப்பானது, அதன் நம்பகத்தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது.

15 முதல் 24 வயதுடைய நகரத்தில் வாழும் இளைஞர்களின் விருப்பங்களைத் தழுவியதாக, பாரம்பரிய 22 கரட் தங்க வடிவமைப்புகளுடன் ஒப்பிடும் வகையில், தமது நவீன உணர்திறன்களுடன் எதிரொலிக்கும் நேர்த்தியான மற்றும் எளிமையான 18 கரட் தங்க வடிவமைப்புகளை ராஜா ஜுவலர்ஸ் வழங்குகிறது. பிரத்தியேக தனிப்பயனாக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட நகைகளை வழங்குவதன் மூலம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் இவ்வர்த்தகநாமம் தயாராக உள்ளது.

தற்போது தனிப்பயனாக்கப்பட்ட நகைகளுக்கான பயணத்தில் அடையும் இறுதி இடமாக ராஜா ஜுவலர்ஸ் உள்ளது. நிறுவனம் இளம் தலைமுறையினருக்கு நகைத் துறையை மீள்வரையறை செய்ய தயாராக உள்ளதோடு, அவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஒவ்வொரு நகையின் மூலமாகவும் அவர்களது தனித்துவத்தை வெளிப்படுத்தவும் உதவுகிறது. இந்த மூலோபாய முன்முயற்சியானது, ராஜா ஜுவலர்ஸை தனியே ஒரு நகை வழங்குநராக மட்டுமல்லாமல், புத்தாக்கமான, ஸ்டைலான மற்றும் தனித்துவமான வடிவமைப்புகளுக்கு ஏற்ற வர்த்தகநாமம் என்பதையும் வெளிக்காட்டுகிறது.

ராஜா ஜுவலர்ஸின் பரந்த தயாரிப்புகள் பற்றிய மேலதிக தகவல்களை பெற நுழையுங்கள்: www.rajajewellers.com, Facebook பக்கம்: https://www.facebook.com/Rajajewellers.lk/ அல்லது Instagram பக்கம்: https://www.instagram.com/rajajewellers.lk

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *