விவசாயிகளின் திறன்களைக் கட்டியெழுப்புவதற்கான பயிற்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ள பெல்வத்தை

பல்வேறு வகையான பால் உற்பத்திகளை உற்பத்தி செய்து, நாட்டுக்காக பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான Pelwatte Dairy, இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான விவசாய அறிவை உள்ளடக்கிய விவசாயிகளுக்கான பயிற்சி அமர்வுகளை வழங்கி அதில் முன்னோடி எனும் பெயரை பெற்றுள்ளது.

பெல்வத்தை டெய்ரி நிறுவனத்தின் பால் விவசாயிகளின் விநியோகச் சங்கிலியை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்த செயலமர்வுகள், தொழில்துறையில் நவீன, உலகளாவிய சிறந்த நடைமுறைகளை வழங்கியதோடு, இது பால் விவசாயிகளின் பணி அறிவை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெல்வத்தை நிறுவனத்தின் தலைவர் ஆரியசீல விக்ரமநாயக்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “பெல்வத்தை தனது செயற்பாட்டின் மூலக்கல்லாக, அதன் பால் விவசாயிகளை கருதுகிறது. நாம் பெல்வத்தை டெய்ரி நிறுவனத்தை இன்று தொழில்துறையில் முன்னணிக்கு கொண்டு வந்துள்ளோம். அதற்காக எமது கடின உழைப்பாளிகளின் வலையமைப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். Pelwatte Dairy நிறுவனத்தின் உற்பத்திச் செயல்முறையின் ஒரு முக்கிய அம்சம் யாதெனில், உற்பத்தியின் பல்வேறு நிலைகளில், எமது விவசாயிகளின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலான ஈடுபாடு ஆகும். எனவே, அவர்களின் திறன்களை வளர்ப்பது அவர்களின் நல்வாழ்வுக்கு மட்டுமல்லாது, இலங்கையின் பால் துறைக்கும் ஒரு அத்தியாவசியமான அம்சமாகும். இத்தொழில்துறைக்குள் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன சேர்ந்துள்ளன. பால் தொழில்துறையின் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் மற்றும் குறிப்பாக கால்நடை முகாமைத்துவம் ஆகியன இத்துறையில் இன்றைய உலகளாவிய போக்குகளாக காணப்படுகின்றன. அவற்றை தங்கள் பண்ணை நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பதை இலங்கை பால் பண்ணையாளர்கள் செய்ய வேண்டிய விடயமாகும். நவீனமயமாக்கலானது, இலாபத்தையும் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதோடு கால்நடை முகாமைத்துவத்தில் காணப்படும் திறமையின்மையை குறைக்கிறது. இலத்திரனியல் குறி வழங்குதல் மூலம் கால்நடைகளை தனித்தனியாக அடையாளம் கண்டு, அவற்றின் ஆரோக்கியத்தை கண்காணித்தல் மற்றும் அதன் மூலம் நோய்களுக்கு மிகவும் திறனான வகையிலான சிகிச்சை அளித்தல், தீவன அளவை உரிய அளவில் வழங்குதல் போன்றன நவீனமயமாக்கல் முயற்சிகளால் எமது விவசாயிகள் பெறும் சில நன்மைகளாகும்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “ஆரம்பத்தில் நாம் 120 முதல் 150 விவசாயிகளுடன் ஒரு மாதத்தில் நான்கு பட்டறைகளை மேற்கொள்ளவுள்ளோம். இந்த செயலமர்வுகள் விவசாயத்தின் சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் பற்றிய அவர்களின் அறிவை மேலும் மேம்படுத்த வாய்ப்பு வழங்கும். இதன் மூலம் நவீன விவசாய தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். மிக முக்கியமாக, அவர்களின் பயிற்சியில் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். இது இலங்கையின் பால் துறையில் முதன் முறையாக இடம்பெறும் ஒரு விடயமாகும். இப்பயிற்சியின் போது அவர்களுக்கு வழங்கப்படும் நவீன தொழில்நுட்ப அறிவுகளில், பரிவர்த்தனை ரீதியான பசு முகாமைத்துவமும் அடங்குகின்றது. இங்கு பசுக்கள் வயதாகும்போது அவற்றை பராமரிப்பதை கற்றுத் தரப்படுகின்றது. அதன்பின், இலாபகரமான பால்வள மேம்பாடு தொடர்பில் அவர்கள் பயிற்சி பெறுவார்கள். இதனுடன் தொடர்புடைய கணக்கியல் அறிவைப் பற்றிய பயிற்சியும் இதில் அடங்குகின்றது. இது வழக்கமான வருமானத்தைத் தாண்டி, அதிக இலாபத்திற்குச் செல்ல அவர்களுக்கு உதவுகின்றது. இப்பயிற்சி அமர்வுகள், பெல்வத்தை பால் விவசாயிகளுடன் சிறந்த பிணைப்புக்கு உதவுகின்ற அதே வேளையில் அவர்களுடனான நிறுவனத்தின் தற்போதைய இறுக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.” என்றார்.

பெல்வத்தை டெய்ரி எதிர்வரும் வாரங்களி, அல்தன் வளவாளர்கள் மற்றும் விவசாயி வலையமைப்பை இணைத்து இப்பயிற்சி அமர்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *