திறனான மின்சார பயன்பாடு கொண்ட TKE “Enta Villa” மூலம் வீட்டு மின்னுயர்த்தி தொழில்துறையை உயர்த்தும் DIMO

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, TKE இன் புரட்சிகரமான வீட்டு மின்னுயர்த்தி தீர்வுகளான “Enta Villa” மூலம் நாட்டின் குடியிருப்புகளின் தரத்தை உயரத்திற்கு கொண்டு செல்கிறது.

ஜேர்மனியில் உள்ள மின்னுயர்த்தி மற்றும் மின்சார நகரும் படிக்கட்டுகள் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான TKE இற்கான நிறுவல் மற்றும் சேவை வழங்குநராக, இலங்கை மற்றும் மாலைதீவின் ஒரே விநியோகஸ்தர் என 2018 ஆம் ஆண்டில் DIMO நியமிக்கப்பட்டது. இன்று DIMO இலங்கை மற்றும் மாலைதீவில் பல முக்கிய திட்டங்களை நிறைவு செய்துள்ள அதே நேரத்தில், 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த உலகளாவிய விநியோகஸ்தராக TKE இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 09 இல் உள்ள கார்கில்ஸ், கட்டுபெத்த, பண்டாரவளை, கண்டி, குருணாகலிலுள்ள Softlogic Mall போன்ற பல்பொருள் அங்காடிகள் DIMO வினால் பூர்த்தி செய்யப்பட்ட சில முக்கிய திட்டங்களில் உள்ளடங்குகின்றன. பல்கலைக்கழகங்களுக்கு குறிப்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் கணனி விஞ்ஞானப் பீடம் மற்றும் களனி மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றிற்கான திட்டங்களையும் நிறுவனம் நிறைவு செய்துள்ளது. விருந்தோம்பல் துறையில், வெலிகம Barberyn Beach Ayurveda Resort மற்றும் Radisson Blu Talpe ஆகியவற்றிற்கு DIMO சேவைகளை வழங்கியுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் புறப்பாட்டுப் பகுதி மற்றும் மாலைதீவு வெலனா சர்வதேச விமான நிலையத் திட்டங்கள் ஆகியன TKE மின்னுயர்த்தி தீர்வுகள் மூலம் நிறைவு செய்யப்பட்ட DIMO வின் இரண்டு முக்கிய திட்டங்களாகும்.

TKE வீட்டு மின்னுயரத்தி தீர்வுகளின் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், அதன் அதிநவீன மின்சக்தி-திறன் கொண்ட தொழில்நுட்பமாகும். இது Enta Villa மின்னுயர்த்திகளை வீட்டு மின் சாதனங்களுக்கு சமமான மின்சார அளவைப் பயன்படுத்த உதவுகிறது. TKE வீட்டு மின்னுயரத்திகள் மிக இறுக்கமான சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

என்டா வில்லா ஐந்து தனித்துவமான காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. TKE வீட்டு மின்தூக்கிகளை நிறுவுவதன் மூலம், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் மேம்பட்ட நகரும் வசதியை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல், சொத்தின் பெறுமதி மற்றும் குறிப்பிடும்படியான பலன்களைம் அனுபவிக்கிறார்கள்.

இலங்கையில் வீட்டு மின்தூக்கிப் பிரிவில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய, குழுமத்தின் மின்னுயர்த்தி மற்றும் மின்சார படிக்கட்டுகள் வணிகத்தை மேற்பார்வையிடும் DIMO வின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல தெரிவிக்கையில், “நாட்டில் உள்ள வீட்டு மின்தூக்கிப் பிரிவில் தற்போதும் கணிசமான வளர்ச்சியை நாம் காண்கிறோம். எதிர்வரும் வருடங்களில். இந்த மின்தூக்கிகள் சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் நடமாடுவதில் பிரச்சினை உள்ள நபர்களுக்கு அதிக பயனளிக்கும். எமது சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஊக்கமளிக்கும் ஒரு நிறுவனம் எனும் வகையில், Enta Villa போன்ற மின்சாரத்-திறனுள்ள தீர்வுகளை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை DIMO நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்றார்

வாடிக்கையாளர்களுக்கு ஏழு வகையான ஸ்டைலான முன்கூட்டிய-பொறியியல் வடிவமைப்புகள் உள்ளிட்ட, மின்னுயர்த்தி அறையின் உட்புற அலங்காரங்களுக்கான தெரிவுகளும் உள்ளன. அது மாத்திரமன்றி உண்மையான ஒப்பற்ற அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கண்ணாடிக் கதவுகளுடன் கூடிய வெளிப்புறம் முழுமையாக தென்படக் கூடிய அறை வடிவமைப்பிற்கான தெரிவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிக மின்னுயர்த்தி சேவையில் தமது விரிவான நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, வீட்டு மின் தூக்கி வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற சேவைத் தரத்தை வழங்க DIMO உறுதிபூண்டுள்ளது. அவர்களது வருடம் முழுவதும், தினசரி 24 மணி நேர  வாடிக்கையாளர் அழைப்பு சேவையுடன் (24x7x365), வீட்டு உரிமையாளர்களுக்கு நம்பிக்கையையும் மன அமைதியையும் வழங்கி, பாதுகாப்பான மற்றும் வசதியான நகரும் அனுபவத்தை DIMO உறுதி செய்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *