இலங்கையில் ஒரேயொரு பிரிட்டிஷ் MSc Digital Marketing Communications பாடநெறியை அறிமுகப்படுத்தும் UCL

இலங்கையின் முன்னணி நாடுகடந்த உயர்கல்வி வழங்குனரான Universal College Lanka (UCL) ஆனது, புகழ்பெற்ற மத்திய லங்காஷயர் (Central Lancashire) பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இலங்கையில் ஒரேயொரு பிரித்தானிய MSc டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் (Digital Marketing Communications) பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் யுகத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் முன்னோக்கிய பாதையை அடிப்படையாகக் கொண்ட இந்த பாடநெறியானது, ஐக்கிய இராச்சியத்தின் (UK) Institute of Direct and Digital Marketing (IDM) மூலம் அங்கீகாரம் பெற்ற மதிப்புமிக்க முதுகலை பட்டத்திற்கு மேலும் மதிப்பு சேர்த்து, உள்ளூர் தொழில் வல்லுநர்களை உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மை கொண்டவர்களாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

UCL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கிஹான் சில்வா இப்பாடநெறியின் அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் ஒரேயொரு பிரித்தானிய MSc டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் பாடநெறியை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் முதன்மையான நாடுகடந்த உயர்கல்வி வழங்குனர் எனும் வகையில், தொழில்துறை முழுவதிலும் உள்ள வணிகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் வெற்றியை உருவாக்குவதில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வகிக்கும் முக்கிய பங்கை UCL புரிந்துகொண்டுள்ளது. தமது இலக்கிற்கு அமைவான பயனர்களுடன் உரிய திறனுடன் தொடர்புறுவதற்கும், வர்த்தகநாமங்களை உருவாக்குவதற்கும், வணிக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் தளங்களின் சக்தியைப் பயன்படுத்தக்கூடிய தொழில் வல்லுநர்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், எமது பாடநெறியான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடலில் MSc வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

UCL இன் பணிப்பாளர் கலாநிதி ஹர்ஷ அலெஸ் கருத்துத் தெரிவிக்கையில், “UCL ஆனது மத்திய லங்காஷயர் பல்கலைக்கழகத்துடன் ஒரு வலுவான மற்றும் தொழில்முறை ரீதியான பங்காளித்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த பிரிட்டிஷ் கல்வியை வழங்குவதில் அது பெருமை கொள்கிறது. கடந்த 7 வருடங்களாக நாடு கடந்த ரீதியில் உயர்கல்வியை வழங்குவதில் UCL முன்னணியில் உள்ளது. இந்த அனுபவம் ஒரு பெரிய படியாக முன்னேறி, ஒரு ஒப்பிட முடியாத முதுகலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்த எமக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியை வழங்குவதிலான எமது வெற்றிகரமான சாதனையை உரிய வகையில் பயன்படுத்தி, மனம் கவரும் வகையில், தாம் தெரிவு செய்த துறைகளில் சிறந்து விளங்குவதற்கான திறன்களையும் அறிவையும் வழங்குவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த திட்டம் வல்லுநர்களை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் சிறந்து விளங்குவதற்காக மேலும் மேம்படுத்தும் என நான் நம்புகிறேன்”. என்றார்.

UCL இல் முதுகலை பாடநெறிகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்த UCL இன் பணிப்பாளர் Steven Enderby, “முதுகலை கல்வியானது, தங்களது கல்வித் தகைமைகளை மேம்படுத்தவும், தொழில் முன்னேற்றம் அடையவும் விரும்பும் ஆர்வமுள்ள நிபுணர்களின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான கருவியாக உள்ளது. அது விஞ்ஞானமாகவோ, வணிகமாகவோ அல்லது ஏனைய துறைகளில் எதுவாக இருந்தாலுமோ, எமது குறிக்கோள் ஒப்பற்ற திறமைகளை வளர்த்து, அந்தந்த தொழில்துறைகளுக்கு குறிப்பிடும்படியான பங்களிப்பை வழங்கும் பட்டதாரிகளை உருவாக்குவதாகும். அந்த வகையில் இந்த மைல்கல்லானது தகுதி, திறமை, இலட்சியம் உள்ளவர்களுக்கு அவர்களுக்கான உள்நாட்டு மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் சேர்க்கும் என நாம் நம்புகிறோம். எனவே, தகுதிவாய்ந்த நிபுணர்களை அவர்களின் தொழில்துறை வாய்ப்புகளை உயர்த்துவதற்கான அடுத்த கட்டத்தை மேற்கொள்வதற்காக அழைப்பு விடுப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். UCL ஆனது, தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்களை பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாக ஆக்குவதன் மூலம், நாட்டிற்குள்ளும், உலகளாவிய ரீதியிலும் அவர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்க உறுதிபூண்டுள்ளது.” என்றார்

UCL இல் MSc டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் பாடநெறியை தொடர்வதற்கான சிறந்த 10 காரணங்களையும் அதன் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுடன் இலங்கையில் உள்ள விவேகமான மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பிரிட்டிஷ் கல்வியை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பு தொடர்பிலும், UCL இன் கல்வி விவகாரங்களுக்கான பீடாதிபதி கலாநிதி தனஞ்சய் குல்கர்னி விளக்கமளித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “Central Lancashire பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும், MSc டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் பாடநெறியானது, பிரயோக ரீதியான உயர் விளக்கம் கொண்ட கல்வித் திட்டத்திற்கான பாலத்தை ஏற்படுத்துவதற்கான எமது உறுதிப்பாட்டை உள்ளடக்கியுள்ளதோடு, இது மாணவர்களுக்கு போட்டித்தன்மையை ஏற்படுத்துகிறது. இப்பாடநெறியின் நோக்கம் மற்றும் அந்நோக்கத்திற்கு பெறுமதி சேர்க்கும் வகையில், பல்வேறு தொழில்துறைகளில் இருந்து மாணவர்களை இதில் ஈர்ப்பதற்கு நாம் விரும்புகிறோம்.” என்றார்.

பிரிட்டிஷ் MSc டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் பாடநெறியானது, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தகவல்தொடர்பாடல் தொடர்பான முழு அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பாடத்திட்டத்தை வழங்குகிறது. இங்கு மூலோபாய டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விடயம் முதல் நுகர்வோர் நடத்தை, நுகர்வோர் உளவியல், நவீன சந்தைப்படுத்தல் மற்றும் நடைமுறை ரீதியான அனுபவம் வரை, மாணவர்கள் விரிவான நிபுணத்துவத்தைப் பெறுகிறார்கள். இந்த பாடநெறியானது மிக இறுக்கமான ஆராய்ச்சி திட்டத்துடன் நிறைவடைவதோடு, இது மாற்றமுறும் விடயங்கள் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்துகிறது.

பிரிட்டிஷ் MSc டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் பாடநெறியானது, டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் தங்கள் நிபுணத்துவத்தை உயர்த்துவதில் ஆர்வமுள்ள தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, பல்தரப்பட்ட தேவை கொண்டவர்களுக்காக வழங்கப்படுகிறது. UCL முன்னாள் மாணவர்கள், இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு கீழ்நிலைப் பிரிவு பட்டங்களைக் கொண்டவர்கள் மற்றும் CIM, SLIM, CIMA, ACCA* போன்ற UK பட்டங்களுக்குச் சமமான தகுதிகளை* கொண்டுள்ள நிபுணர்களை இது வரவேற்கிறது. மேலும், இதனுடன் தொடர்புடைய பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு*, முதுநிலை கற்கைகளில் தேர்ச்சி பெறுவதற்காக தங்கள் திறனை வெளிப்படுத்த, விண்ணப்பிக்குமாறு, ஊக்குவிக்கப்படுகிறார்கள். (*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதிப்புமிக்க தகுதியைப் பெறுகின்றனர். அத்தோடு, உலகளாவிய தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகளை இது  திறக்கிறது. UCL ஆனது, இலங்கையில் ஒரேயொரு பிரிட்டிஷ் MSc டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் பாடநெறியாக, தனது பிரத்தியேக அந்தஸ்து மூலம் தனித்துவம் கொண்டுள்ளதோடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் கல்வியில் தனது நிலையை உறுதிப்படுத்துகிறது.

END

Photo Caption:

(இடமிருந்து வலமாக) சந்தைப்படுத்தல் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் திருமதி கல்ஹாரி மீகொட, பிரதம செயற்பாட்டு அதிகாரி திருமதி எரந்தி தொடம்வல, பிரதம நிறைவேற்று அதிகாரி கிஹான் சில்வா, பணிப்பாளர் கலாநிதி ஹர்ஷ அலெஸ், பணிப்பாளர் ஸ்டீவன் எண்டர்பி, கல்வி விவகாரங்களுக்கான பீடாதிபதி கலாநிதி தனஞ்சய் குல்கர்னி, School of Business தலைவர் கலாநிதி தேவங்கி பெரேரா

UCL பற்றி:

இலங்கையின் முதன்மையான நாடு கடந்த உயர்கல்வி வழங்குநரான Universal College Lanka (UCL) ஆனது, மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை பின்பற்றுவதுடன், பிரபலமான அவுஸ்திரேலியாவின் Monash, கனடாவின் Dalhousie, பிரிட்டனின் Central Lancashire பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மிகவும் இறுக்கமான சர்வதேச தரங்களையும் உயர் தரத்தையும் பேணியவாறு, ஒப்பற்ற அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. அதிக மாணவர் தொடர்பு மற்றும் அவர்களுடனான சிறந்த ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகையிலான சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட வகுப்பறை அளவுகள், நவீன ஆய்வகங்கள், சிறந்த நூலகம், வசதியான படிக்கும் பகுதிகள், மாணவர் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக தனித்துவமான திறந்த மொட்டைமாடி பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன், உயர் தகுதி வாய்ந்த மற்றும் திறமையான விரிவுரையாளர்களை UCL கொண்டுள்ளது. UCL ஆனது மாணவர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும், கல்வியகத்தில் மாணவர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் உட்புற, வெளிப்புற நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள் ஆகிய இரண்டையும் ஒழுங்கமைத்து நடத்துகிறது.

UCL இல் பிரிட்டிஷ் MSc டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் பாடநெறியில் எவ்வாறு சேர்வது என்பது பற்றிய மேலதிக தகவலுக்கு, 077 411 00 00 அல்லது [email protected] ஊடாக தொடர்பு கொள்ளுங்கள். அல்லது 503, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள UCL வளாகத்திற்கு விஜயம் செல்லுங்கள்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *