இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் பெல்வத்தை தலைமையில் இடம்பெற்ற சமையல் கலை நிபுணர்கள் நிகழ்வு

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டுக்காக சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான பெல்வத்தை டெய்ரி (Pelwatte Dairy), இலங்கையின் சமையல் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஒரு மூலக்கல்லாக விளங்கும்  இலங்கையின் சமையல்கலை நிபுணர்களை ஊக்குவிப்பதற்காக அண்மையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

நீர்கொழும்பு Amagi Aria ஹோட்டலில் நடைபெற்ற (Chef Event) சமையல் கலை நிகழ்வானது, Chef’s Guild of Lanka உடன் இணைந்து பெல்வத்தை டெய்ரி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது சமையல் கலை வல்லுநர்கள் தங்களுக்குள் வலையமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான ஒரு  தளமாக மாறிய அதே நேரத்தில், அவர்களின் தொழில்முறை மற்றும் திறன் மேம்பாட்டிற்கு குறிப்பிடும்படியான ஊக்கத்தையும் அளித்தது. இந்நிகழ்வின் மற்றுமொரு பங்குதாரராக Amagi Aria ஹோட்டல் விளங்கியது.

Pelwatte Dairy, நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் சுசந்த இது தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கை நுகர்வோருக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயர்தர பால் பொருட்களை வழங்குவதற்காக நாம் பெல்வத்தை டெய்ரியை உருவாக்கினோம். பெல்வத்தை டெய்ரி நிறுவனம், நாட்டிற்கு பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நிறுவனமாகவும் அறியப்படுகிறது. அந்த வகையில் பெறுமதியான அந்நிய செலாவணியை இலங்கைக்கு கொண்டு வரும் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிப்பதானது, இலங்கை தொடர்பான எமது பெல்வத்தை டெய்ரியின் தூரநோக்குடன் கைகோர்க்கச் செய்கிறது. பல்வேறு புதிய பெல்வத்தை பால் பொருட்களை உள்ளூர் சந்தைக்கு வழங்கி புதுமைப்படுத்தவும், பல்வேறு நுகர்வோர் உணவுப் பொருட்களை வழங்கவும், பல்வேறு பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்படும் பெறுமதியான அந்நியச் செலாவணியை சேமிக்கவும் எமது சமையல் கலை நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றினோம் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எமது பால் பொருட்களை நுகர்வோர் நேரடியாக உட்கொள்வது மட்டுமின்றி, தினசரி உட்கொள்ளும் ஏனைய உணவுப் பொருட்களின் தயாரிப்பிலும் அவற்றை வழக்கமான உள்ளீடுகளாக பயன்படுத்துவதும் முக்கியமாகும். பெல்வத்தை நிறுவனம் நீர்கொழும்பில் நடத்திய இந்த Chef Event ஆனது, 100 சமையல் கலை வல்லுனர்களுக்கான வலையமைப்புத் தளமாக அமைந்ததோடு, அவர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட திறன்களையும் மேம்படுத்தியது. இங்கு தமது பால் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வையும் பெல்வத்தை வழங்கியிருந்தது. இந்நிகழ்வை இலங்கையின் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு நிகழ்வாக பெல்வதை அமைத்திருந்ததோடு, சுற்றுலாவிலிருந்து பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை பெறுவதற்கு உதவும் வழிகாட்டல் நிகழ்வாகவும் இது காணப்பட்டது. தற்போதைய தேசிய நெருக்கடியை சமாளிப்பதில் உள்ளூர் பால் தொழில்துறையின் பங்கு குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. உயர் தரத்திலான சர்வதேச தர மட்டத்தில் அமைந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பால் பொருட்களை மிகக் குறைந்த உள்நாட்டு விலை மட்டங்களில் வழங்குவது, பெல்வத்தையிலிருந்து கிடைக்கப் பெறும் ஒரு நன்மையாக விளங்குகின்றது. அந்த வகையில் இவ்வாறான தொழிற்துறை சார்ந்த நிகழ்வுகளை எதிர்காலத்திலும் முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக பெல்வத்தை டெய்ரி நிறுவனத்தின் சமையல் கலை ஆலோசகர் ரஞ்சன் கருணாநாயக்கவிற்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்றார்.

பெல்வத்தை நிறுவனத்தின் உணவுச் சேவை முகாமையாளர் ராஸிக் டோல் இங்கு கருத்து வெளியிடுகையில், “2006 இல் நிறுவப்பட்ட எமது நிறுவனம் பால் பதப்படுத்துதல், கால்நடை தீவனம், பால் பொருட்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றது. இன்று அது இலங்கையின் முன்னணி பால் பதப்படுத்துதல் மற்றும் பால் உற்பத்தி நிறுவனமாக மாறியுள்ளது. நாம் ISO 22000:2018 சான்றிதழ் பெற்ற ஒரு நிறுவனமாகும். பெல்வத்தை டெய்ரி ஆனது டென்மார்க் தொழில்நுட்பத்தில் செயல்படும் அதி நவீன பால் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். பெல்வத்தை தயாரிப்பு வகைகளில் உள்ள பிரபலமான தயாரிப்புகளாக பெல்வத்தை முழு ஆடைப் பால்மா, பெல்வத்தை வெண்ணெய், பெல்வத்தை யோகர்ட், பெல்வத்தை நெய் ஆகியன விளங்குகின்றன.” என்றார்.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *