புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு முன்னோடியாக, ஐக்கிய நூற்றாண்டு முன்னணி அறிமுகப்படுத்தப்பட்டது

75 வருடகால தோல்விகள் ஏற்பட்ட போதிலும், அவற்றில் எவரிடமிருந்தும் பாடம் கற்காத அரசியல் கட்சிகளும், பாரம்பரிய அரசியலும் தற்போது பொதுமக்களை அந்நியப்படுத்தி வருகின்றன. எனவே, இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு நிலையான தீர்விற்கான புதிய தலைமுறை அரசியல் அணுகுமுறையை கடந்த 29 ஆம் திகதி சனிக்கிழமை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அடிமட்டத்திலுள்ள 25  மாவட்டங்களையும் 4 ஆண்டுகளில் ஆய்வு செய்து, மக்களுக்கு கல்வி கற்பித்து, அரசியல் ஆய்வு மையம் மூலம் தலைவர்களை உருவாக்கும் பயணத்தின் உச்சகட்டம் இன்றாகும்.

விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் நவீன தொழிநுட்பத்தை புகுத்தி நாட்டை கட்டியெழுப்பவும், பொருளாதார மாற்றத்தை நோக்கி பயணித்து அதனூடாக பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். உலக நாடுகள் அங்கீகரித்துள்ள உயர் தரங்களுக்கு ஏற்ப கல்வி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதில் உறுதிபூண்டுள்ள நாங்கள், அந்த மாற்றத்தை எங்கள் மூலம் நிரூபிக்க இந்த தருணத்திலிருந்து தயாராக இருக்கிறோம் என  அச்சமின்றி பகிரங்கமாக அறிவிக்கிறோம். எங்கள் சொத்துக்களை தெரியப்படுத்துவதற்கும், கட்சியின் வரவுசெலவுத் திட்டத்தை அறிவிப்பதற்கும், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் நாங்கள் இதன் மூலம் உறுதிபூண்டுள்ளோம்.

இன்று முதல், 100 கிராமங்களில், 5 வகையில் அதாவது, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, தொழில் முனைவோர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம், போதைப்பொருள் தடுப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் நிதி எழுத்தறிவு ஆகிய ஐந்து துறைகளை, இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ளோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட, 100 கிராமங்களில், மேற்கண்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இன்று நீங்கள் மேடையில் கண்ட செயற்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இதற்கு உறுதி பூண்டுள்ளனர்.

எதிர்வரும் தேசியத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் 2048 ஆம் ஆண்டில் நாம் இலக்காகக் கொண்ட 10 கனவுகளை அடைவதற்கும் ஒரு தலைமுறையாக  இணைந்து இலங்கைக்கு சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

நேர்மையான, நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டை நேசிக்கும் அனைவரையும் இன்று முதல் இந்த பாதையில் இணைந்து செயல்பட அழைக்கிறோம்.

இலங்கையர்களுக்கு அதற்கான கட்சி அங்கத்துவம், தொண்டர்களுக்கான சேவை அங்கத்துவம் மற்றும் நிதி உதவி ஆகியவற்றையும் வழங்க முடியும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *