தொடர்ந்து 17ஆவது முறையாக SLIM-KANTAR PEOPLE’s AWARDS ‘வருடத்தின் சிறந்த மக்கள் வர்த்தகநாமம்’ விருதை வென்றுள்ள சிங்கர் ஸ்ரீ லங்கா

இலங்கையின் நுகர்வோர் பொருட்களுக்கான முன்னணி விற்பனையாளரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் SLIM-KANTAR PEOPLE’s AWARDS 2023 விருது வழங்கும் விழாவில், ‘வருடத்தின் சிறந்த மக்கள் வர்த்தக நாமம்’ (People’s Brand of the Year) எனும் விருதை தொடர்ச்சியாக 17ஆவது முறையாக வென்றுள்ளது. இந்த சாதனையானது, நுகர்வோர் பொருட்கள் துறையில் சிங்கர் நிறுவனத்தின் மேலாதிக்கத்தையும், இலங்கையில் அதன் பரவலான வியாபித்தலையும் எடுத்துக் காட்டுகிறது.

சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இலங்கை மக்களால் எமக்கு வழங்கப்பட்ட இந்த விருது தொடர்பில் நாம் மிகவும் பெருமையடைகிறோம். இந்த விருதை நாம் வென்றுள்ளமையானது, எமது வாடிக்கையாளர்களிடையே எமது வர்த்தகநாமம் ‘இதயத்தில் கொண்டுள்ள பங்கு’ (‘share of heart’) எனும் கொள்கையின் உண்மையான பிரதிபலிப்பாகும். எமது வர்த்தக நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதை நாம் உறுதிபூண்டுள்ளோம். அன்றாடம் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும் முன்னேற்றுவதையும் எளிதாக்கும் வகையில், பல்வேறு வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் ‘அனுபவங்களை மேம்படுத்துதல்’ எனும் அடிப்படையில் அந்நோக்கத்தை நாம் மேற்கொள்கிறோம்.” என்றார்.

சிங்கர் ஸ்ரீ லங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இவ்வேளையில் எமது வாடிக்கையாளர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம். காரணம், அவர்கள் எம் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின்றி இந்த சாதனை சாத்தியமாகியிருக்காது. SLIM-KANTAR விருது விழாவில் தொடர்ச்சியாக 17ஆவது முறையாக ‘வருடத்தின் சிறந்த மக்கள் வர்த்தக நாமம்’ விருதை வென்றமையானது நம்பமுடியாத ஒரு கெளரவமாகும். எமது வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு உயர்மட்ட நுகர்வோர் விற்பனை மையமாக சிங்கர் நிறுவனத்தை மாற்றுவதற்காக அயராது உழைத்த எமது (குழுவினரின்) அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் உழைப்புக்கு இது ஒரு சான்றாகும். சந்தை நிலைமை சாகதமானதாகவோ அல்லது பாதகமானதாகவோ காணப்படுகின்ற நேரங்களிலும் எமது வாடிக்கையாளர்கள் மீது மேலதிக கவனம் செலுத்தி, சிங்கர் நிறுவனம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களிலும் அவர்களை எப்போதும் முன்னணியில் வைப்பதன் பிரதிபலிப்பாகவே இந்தச் சாதனை அமைகின்றது.” என்றார்.

இவ்விருது விழாவில், ‘வருடத்தின் நீடித்த மக்கள் வர்த்தகநாமம்’ (People’s Durables Brand of the Year) விருதையும் சிங்கர் நிறுவனம் வென்றது.

சிங்கர் நிறுவனம் ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில் அதன் முன்மொழிவு மற்றும் சலுகைகளை பல வருடங்களாக தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகின்றது. அதன் மூலம் கடந்த காலத்தில் அது அடைந்த நம்பகமான சிறப்பின் ஊடாக, அது முன்னோக்கிப் பயணிக்கும் அனைத்து விடயங்களிலும் ‘Home at Our Heart’ (இதயத்தில் எமது வீடு) எனும் தாரகமந்திரத்தை அது உருவாக்குகிறது. சிங்கர் நிறுவனத்தின் தற்போதைய வெற்றி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த முன்மொழிவு ஒரு உந்து சக்தியாக விளங்குகிறது. தனது வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் சிங்கர் நிறுவனம் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வகைகளை தொடர்ச்சியாக விரிவுபடுத்துவதே அதற்கான முக்கியகாரணமாகும்.

ENDS

Image caption – விருது வழங்கும் விழாவில் சிங்கர் குழுவினர்

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *