ஸ்ரீலங்கா சூப்பர் சீரிஸை மீள ஆரம்பித்து, அதிநவீன பந்தய அரங்கை உருவாக்க தயாராகும் SLARDAR

இலங்கையின் முன்னணி மோட்டார் பந்தயக் கழகமான, Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) மற்றும் Asian Motor Racing Club (AMRC) ஆகியன, முதன்மை அனுசரணையாளரான Nippon Paints, உத்தியோகபூர்வ டயர் கூட்டாளரான Maxxis Tyres மற்றும் உராய்வு நீக்கி கூட்டாளரான Mobilஆகியவற்றுடன் இணைந்து ‘Sri Lanka Super Series 2023’ யினை அறிமுகப்படுத்துகின்றது. COVID-19 தொற்றுநோய் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் SLARDAR நடத்தும் பந்தய நிகழ்வுகளில் இதுவே முதன்மையானதாகும். அந்த வகையில் SLARDAR ஆனது இவ்வாண்டு, ‘Sri Lanka Super Series 2023’ நிகழ்வை ஆரம்பித்து, போட்டியாளர்கள் மற்றும் இரசிகர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அதன் நடவடிக்கைகளை மெதுவாக மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.

Asian Motor Racing Club (AMRC) உடன் இணைந்து, SLARDAR ஆனது 2017 இல் மீண்டும் ‘Sri Lanka Super Series’ ஐ அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த சம்பியன்ஷிப் போட்டியானது தனித்துவமானதாகும். ஏனெனில் இதில் சம்பியன்களுக்கு புத்தம் புதிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பரிசாரக வழங்கப்பட்டன. முந்தைய வருடங்களில், Fox Hill Super Cross, Gajaba SC, Gunners SC, Sigiriya Rally Cross, Commando Super Cross, Colombo Super Cross உள்ளிட்ட அனைத்து செம்மண் ட்ரக்குகளையும் உருவாக்கி அறிமுகப்படுத்துவதில் SLARDAR முக்கிய பங்கு வகித்திருந்தது.

அது மாத்திரமன்றி, முறையான வசதிகள் இல்லாத காரணத்தால், இலங்கையில் மோட்டார் வாகன விளையாட்டுகளின் எதிர்காலம் கேள்விக்குறியான ஒரு தருணத்தில், SLARDAR ஆனது, Wijerathne Engineering (பிரைவேட்) லிமிடெட் உடன் இணைந்து ‘Nippon Mahameruwa Racing Arena by SLARDAR’ இனை உருவாக்கியது. கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டிற்கும் ஏற்றதாக இருக்கும் இந்த அரங்கம் உணவகப் பகுதி, நீச்சல் குளம், பயிற்சி மற்றும் விளக்கமளிக்கும் அறைகள், 100 பேருக்கு மேல் தங்கக் கூடிய தங்குமிட வசதி, ATV Track, 4×4 Challenge Track, Outbound Training உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டு அமைந்திருக்கும்.

பந்தய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான சோதனை செய்வதற்கான களமாகவும், சாரதிகள் மற்றும் உடன் பயணிப்பவர்களுக்கான பயிற்சி கொண்ட வசதி மையமாகவும் இந்த அரங்கம் செயற்படும். SLARDAR யினது நம்பகத்தன்மையில் நம்பிக்கை வைத்து, உத்தியோகபூர்வ டயர் பங்குதாரரான Maxxis Tyres உடன் இணைந்து இந்த வசதி மையத்திற்கான முதன்மை அனுசரணையாளராக Nippon Paints முன்வந்துள்ளது. ‘Nippon Mahameruwa Racing Arena by SLARDAR’ பந்தய அரங்கம், வடமேல் மாகாணத்தில் உள்ள ‘நல்ல’, கிரியுல்லவில் அமைக்கப்படவுள்ளது.

ENDS

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *