தனது சிறந்த செயல்திறன் கொண்ட முகவர்களை வருடாந்த முகவர் விருது விழாவில் கௌரவிக்கும் McLarens Lubricants

McLarens Lubricants Ltd நிறுவனமானது, பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான McLarens குழுமத்தின் துணை நிறுவனமும், இலங்கையில் Mobil Lubricants தயாரிப்புகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரும் ஆகும். இந்நிறுவனம் அதன் நாடு முழுவதிலுமுள்ள பதிவுசெய்யப்பட்ட 3,000 முகவர்களில் சிறப்பாகச் செயற்பட்ட முகவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில், அதன் வருடாந்த முகவர் விருதுகள் விழாவை அண்மையில் நடத்தியிருந்தது. 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 74 விருதுகள் வழங்கப்பட்ட இந்த வருடாந்த நிகழ்வில், நாடளாவிய ரீதியில் சிறப்பாகச் செயற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பங்காளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த வருடாந்த விருது வழங்கும் விழா நிகழ்வு மற்றும் இரவு விருந்து நிகழ்வானது, நீர்கொழும்பில் உள்ள ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் ஒரு இரவை கழிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

McLarens Group, குழும முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி ஷெஹாரா டி சில்வா இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், “எமது முகவர்களுடனான வர்த்தகப் பங்காளித்துவத்தைப் பாராட்டுவதற்கும், சிறந்த செயற்றிறன் மிக்க முகவர்களை அங்கீகரித்து விருது வழங்குவதற்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். கடுமையான பொருளாதார வீழ்ச்சி கொண்ட இந்த நேரத்திலும் கூட, 2023 ஆம் ஆண்டில் எமது விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருக்கும் நன்மைகளை வழங்கும் தனித்துவமான முன்னுரிமைத் திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் உள்ள எமது விசுவாசமான பங்குதாரர்கள் அனைவரும் தங்களது வணிகத்தில் வளர்ந்து அதனை நிலைநிறுத்த நாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம்.” என்றார்.

கொவிட் தொற்றுநோய் நிலைமையின் போது குறிப்பாக 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போதைய பொருளாதார வீழ்ச்சி வரை, McLarens நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விநியோகத்தை எவ்வித தங்குதடைகளும் இன்றி, அதன் வர்த்தகத்திற்கு இடையூறு இல்லாமல் தொடர்ந்து பேணி வருகின்றது. ஏப்ரல் 2022 இல், நாணயத்தின் பெறுமதி குறைவடைந்து, உலகளாவிய ரீதியில் Base Oil மற்றும் அதன் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்ததோடு, அனைத்து எஞ்சின் ஒயில் விலைகளும் 100% இற்கும் அதிகமாக உயர்வடைந்தன. இது முகவர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரையும் பாதித்தது. எவ்வாறாயினும், 2022 டிசம்பரில், McLarens ஆனது ExxonMobil Asia Pacific உடன் இணைந்து, இலங்கைச் சந்தையில் வேகமான நுகர்வைக் கொண்ட Mobil தயாரிப்புகளின் விலைகளைக் குறைத்ததன் மூலம், சவாலான காலத்திலும் நுகர்வோருக்கு கட்டுப்படியான விலையில் அவற்றை பெறக் கூடியதாக மாற்றியது. Mobil Lubricants உற்பத்தியாளரான ExxonMobil Asia Pacific ஆனது, சிறிய ரக வர்த்தகம் மற்றும் நுகர்வோர் ஊக்குவிப்புகளை மேம்படுத்துவதில் இலங்கைச் சந்தைக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறது. அந்த வகையில் இலங்கைக்கான அவர்களின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை ஆதரவுக்காக விசேட அங்கீகாரம் வழங்குவது அவசியமாகும்.

Mobil உடன் இணைந்து McLarens Lubricants எப்போதும் எமது பங்குதாரர்களுக்கு தனது ஆதரவை வழங்கி வந்துள்ளதோடு, எஞ்சின் ஒயில் விநியோக பங்குதாரர்களுக்கான தரப்படுத்தல் பாதை மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் சந்தையில் முன்னணியில் இருந்து வருகின்றது. Mobil உற்பத்திகள், 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. அதன் தரம், நீடித்துழைக்கும் தன்மை, ஒப்பற்ற செயற்றிறனின் அடிப்படையில் உலகின் நம்பர் 1 சிந்தடிக் ஒயில் வர்த்தகநாமமாக அது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Lockheed என்பதும் McLarens Lubricants Ltd நிறுவனத்திற்கு உரித்தான் முதன்மையான வர்த்தக நாமமாக உள்ளது. இது இலங்கையில் நம்பர் 1 பிரேக் ஒயில் தயாரிப்பாக விளங்குவதோடு, 80 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் தடம் பதித்துள்ளது.

McLarens Lubricants நிறுவனம் 25 வருடங்களுக்கும் மேலாக உராய்வு நீக்கி எண்ணெய் துறையில் இருந்து வருவதோடு, அதன் தயாரிப்பு வகைகளின் கீழ் Mobil மற்றும் Lockheed போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்கள் காணப்படுகின்றன. இலங்கை மற்றும் மாலைதீவில் Mobil மற்றும் Lockheed தயாரிப்புகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் இந்நிறுவனம் அறியப்படுகிறது. அது வாகனங்கள், கடல் சார் துறை, மின்சக்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளுக்கு அவசியமான உராய்வு நீக்கி எண்ணெய் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *