பெண்கள் தங்கள் குடும்பம், சமூகம், நாட்டிற்கு ஆற்றும் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இலங்கையின் பெருமைக்குரிய வர்த்தக நாமமான தீவா, பெண்கள் தமது வீட்டில் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் வழங்கும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு உதவுவதற்காக, தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான பயிற்சி அமர்வுகளை நடத்தும் பொருட்டு, Women in Management (WIM) அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதற்கமைய, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்கொட்டுவவில் ஆரம்பிக்கப்பட்ட ‘Diva Dathata Diriya’ (‘தீவா தேத்தட்ட திரிய’ – தீவா கைகளுக்கு வலு) திட்டத்தின் முதலாவது முயற்சியானது, தேசிய அளவில் ஏனைய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இங்கு இடம்பெற்ற 9 நாள் பயிற்சியின் நிறைவில், பங்கேற்பாளர்களின் பயணத்தை கொண்டாடுவதற்கும் அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்காகவும் Hemas Consumer Brands நிறுவனத்தால் தயாரித்து விற்பனை செய்யப்படும் தீவாவினால் விருது வழங்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் மூலம் பங்கேற்பாளர்களுடன் தொடர்ச்சியாக இணைந்து, அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, இறுதியில், முதலிடத்தை பெறும் 3 பெண் தொழில்முனைவோர், தமது தொழில் முனைவு பயணத்தை துரிதப்படுத்துவதற்கு அவசியமான மூலதன நிதியை பெறுவார்கள். பெண்களை ஆதரிப்பதிலும், அவர்களை வலுவூட்டுவதிலும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் தீவா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.
பெரும்பாலான இலங்கை குடும்பங்களில், குடும்பங்களை உயர்த்துவதற்கான சுமையை வீட்டில் உள்ள பெண்களே சுமக்கின்றனர். பெண்களின் வளர்க்கும் கரங்கள் சமைப்பது, சுத்தம் செய்வது, துணி துவைப்பது, அவர்களின் குடும்பத்தை கவனித்துக் கொள்வது போன்ற விடயங்களை செய்கின்றன. பெண்களின் உதவிக் கரங்கள் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதோடு, குடும்பத்திற்கு உயிரோட்டத்தை ஏற்படுத்தி, சமூகங்களை உருவாக்குகின்றன. மேலும் தொழிலாளர் பணிக்குழாமின் ஒரு பகுதியாக இருக்கும் பெண்கள், தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்குகின்றனர். அவர்கள் உலகின் இதயங்களை வெல்லக் கூடியவர்கள் எனும் உண்மையான நிலை இருந்தபோதிலும், சில பெண்களுக்கு அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு போதுமான நேரம், அறிவு, ஆதரவு கிடைப்பதில்லை. இந்த உண்மையானது, திறமையான தொழில்முனைவோருக்கு ஆதரவுக் கரம் அளிப்பதற்காக, ‘தீவா தேத்தட்ட திரிய’ எனும் ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தை உருவாக்க தூண்டியுள்ளது. ‘தீவா தேத்தட்ட திரிய’ திட்டமானது, தொழில் ஆலோசனை மற்றும் தொழில்முறை திறன்களுடன் பெண்களுக்கு ஆதரவை வழங்கும். பெண்கள் தமது குடும்பங்கள் மற்றும் வணிகங்களை நிர்வகிக்க அவசியமான நிதி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு திறன்களை வழங்கும்; அடி மட்டத்திலிருந்து சமூக முயற்சிகளுக்கு ஆதரவு மற்றும் அதிகமான பெண்களை தொழிலாளர் பணிக்குழுவில் இணைத்து, இறுதியில் தேசத்திற்கு நன்மை பயக்கும் வழிகளை இத்திட்டம் மேற்கொள்ளும்.
Hemas Consumer Brands நிறுவனத்தின் Home Care பிரிவின் தலைவி திருமதி அனுஷ்கா சபாநாயகம் இது தொடர்பில் தெரிவிக்கையில், “தீவாவின் வர்த்தகநாம நோக்கமானது, பெண்களின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கான ஆதாரமாக இருப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாகும். பெண்களுக்கு உதவும் கரமாக இருப்பதன் மூலம், ‘தீவா தேத்தட்ட திரிய’ எனும் ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட முன்முயற்சியின் மூலம் அவர்களின் தொழில் முனைவுப் பயணத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான திறன்களையும் அறிவையும் அவர்களுக்கு வழங்குவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இத்திட்டத்தில் முதல் 3 வெற்றியாளர்களுக்கு அவர்களின் தொழில் முனைவு கனவுகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான நிதியை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் திட்டமானது, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் இலட்சியங்களை நிறைவேற்றும் வகையில் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவது எனும், தீவாவின் வர்த்தகநாம நோக்கத்தின் ஒரு விரிவாக்கமாகும். தீவாவின் சிறந்த தயாரிப்புகள் அதிக செயல்திறனை கொண்டதாகவும், குறைந்த நேரத்தில் சிறந்த பலனை வழங்குவதாகவும் இருப்பதால், பெண்கள் தமது குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ளவும், அவர்களுக்கு விருப்பமான விடயங்களில் ஈடுபடுவதற்கும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கும் அவர்களுக்கு அவசியமான ஓய்வு நேரத்தை வழங்குகிறது.” என்றார்.
ஒரு பிரபல கவிஞர் தனது கவிதையில், “தொட்டிலை ஆட்டும் கை, உலகையும் ஆளுகிறது”, இது பெண்கள் அடுத்த தலைமுறையை வளரச் செய்வதை குறிக்கிறது. இதன் மூலம் நாட்டில் இடம்பெறும் முக்கிய விடயங்களிலும் அது வலுவான செல்வாக்கு செலுத்துவதால் அவை பாராட்டப்பட வேண்டும் என்பதோடு, நேசிக்கப்படவும் வேண்டும். ‘தீவா தேத்தட்ட திரிய’ முன்முயற்சியானது, பெண்களிடம் உள்ள இந்த உள்ளார்ந்த வலிமை மற்றும் ஆற்றலைப் புரிந்துகொண்டு, அதன் மூலம் எதிர்காலத்தை நோக்கிய அவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள அவர்களை ஊக்குவிக்கிறது.
Diva, அதன் 20 வருடங்களுக்கும் மேலான பயணத்தில், சிறந்த சலவை பராமரிப்பு தீர்வுகளை வழங்கி இலங்கையர்களுக்கு ஆதரவளிக்க முடிந்துள்ள அதே நேரத்தில், உள்ளூர் நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் புரிந்து கொள்ளும் ஒரு உள்ளூர் வீட்டு வர்த்தக நாமமாக அது தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
Hemas Consumer Brands பற்றி
வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands ஆனது, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட வர்த்தக நாமங்கள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம் நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பு வகைகளின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிநபர் பராமரிப்புத் தீர்வுகளை வாழ்க்கையில் கொண்டு வர முயற்சிக்கிறது. வளர்ச்சியின் மூலம் ஈர்க்கப்பட்ட புத்தாக்கம் கொண்ட குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சந்தையில் முன்னணியான மற்றும் விருது பெற்ற சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்காக நிறுவனம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்குவதன் மூலமும், நம்பகமான கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலமும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலமும் அது நாடு முழுவதிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது
-END-