Orient Finance மாற்று நிதி வணிகப் பிரிவு ஒரு வருடப் பூர்த்தியை கொண்டாடுகிறது

ஜனசக்தி குழுமத்தின் உறுப்பினரும் முன்னணி நிதிச் சேவை வழங்குனருமான Orient Finance PLC, அதன் அர்ப்பணிப்பு மிக்க மாற்று நிதி வணிகப் பிரிவின் (Alternative Finance Business Unit) ஒரு வருட நிறைவைக் கொண்டாடுகிறது. Orient Finance நிறுவனத்தின் மாற்று நிதி வணிகப் பிரிவானது புத்தாக்கமான இஸ்லாமிய நிதித் தீர்வுகளை வழங்குவதன் மூலம் மாற்று நிதியுதவியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகிறது. அனுபவம் வாய்ந்த ஆலோசகரின் வழிகாட்டல் மற்றும் ஷரியா இணக்கப்பாட்டுடன் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

Orient Finance நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கே.எம்.எம். ஜபிர் அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “எமது மாற்று நிதி வணிகப் பிரிவின் முக்கியமான மைல்கல்லை நாம் அடைந்துள்ள இவ்வேளையில், முதல் வருட செயற்பாடுகளில் எமது ஊழியர்கள் மற்றும் எமது வாடிக்கையாளர்கள் வழங்கிய ஆதரவுக்காக நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் . இந்த மிகக் குறுகிய காலத்தில் நாம் அடைந்த வாடிக்கையாளர் உறுதிப்பாடு, நம்பிக்கை மற்றும் பாராட்டு ஆகியன தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். Orient Finance குழுவானது சிறந்த சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளதோடு, அது  தொடர்ச்சியாக புதிய சவால்களை எதிர்கொள்ளவும், நாம் வழங்கும் எமது தயாரிப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் உதவுகிறது. எமது மாற்று நிதிச் சேவைகளின் மூலம், இஸ்லாமிய கொள்கை வழிகாட்டல்களுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்து வருகிறோம்” என்றார்.

மாற்று நிதிச் சேவைக் குழுவினால் ‘இஜாரா’ லீசிங் ஊடாக ரூ. 0.5 பில்லியனை அடைய முடிந்ததோடு, முதல் வருடத்திற்குள் நிறுவனத்தின் மொத்தக் குத்தகையில் சுமார் 5% பங்களிப்பை அது வழங்கியுள்ளது. ‘வகாலா’ தவணை முதலீட்டு திட்டத்தின் ஊடாக ரூ. 0.4 பில்லியனை அடைய முடிந்துள்ளது. Orient Finance தற்போது நாடளாவிய ரீதியில் 31 கிளைகளைக் கொண்டு இயங்குவதுடன் அர்ப்பணிப்புள்ள மாற்று நிதி சேவைகளுக்காக பிரத்தியேக ஊழியர்களுடன் கொழும்பு 07 இல் அமைந்துள்ள Orient Finance தலைமை அலுவலகம், கண்டி கிளை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதான நகரங்களில் இயங்குவதோடு, வாடிக்கையாளர்களுக்கு அதியுயர் சேவையினை வழங்க உறுதிபூண்டுள்ளது. அது மாத்திரமன்றி தங்கக்கடன் ‘வதியாஹ்’, வணிக நிதியுதவிக்கான ‘வகாலா’, வாகனம் மற்றும் சொத்து நிதி சேவைகளுக்கான ‘முஷாரகா’ உள்ளிட்ட பல்வேறு புதிய நிதித் தீர்வுகள் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

ஜனசக்தி  குழுமத்தின் ஒரு அங்கத்தவரான Orient Finance PLC , 40 இற்கும் அதிக ஆண்டுகளாக தன்னை ஒரு புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிதிச் சேவை வழங்குநராக நிலைநிறுத்தியுள்ளமை இவ்வணிகப் பிரிவின் மகத்தான வெற்றிக்கு இன்னொரு காரணமாகும். அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் சேவையுடன் இணைந்து, சரியான நேரத்திலான சலுகைகளை அது அறிமுகப்படுத்துகிறது. Orient Finance PLC ஆனது அதன் நிதித் தீர்வுகளின் வரிசையினை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருவதுடன், சமீபத்தில் அறிமுகப்படுத்திய Orient Minor Savings சிறுவர் சேமிப்புக் கணக்கு இதற்கான சிறந்த சான்றாகும்.

நன்றி.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *