வருடத்தின் Dynamic Entrepreneur விருதை வென்ற Celcius Solutions நிர்வாக பணிப்பாளர்

Celcius Solutions (PVT) Ltd நிறுவனத்தின் இணை நிறுவுனரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான கமல் டோல், 2022 ஆம் ஆண்டுக்கான CEO விருதுகளில், வருடத்தின் முனைப்பான தொழில்முனைவோர் (Dynamic Entrepreneur) விருதைப் பெற்றார். CEO Magazine Sri Lanka நாளிதழால் ஆரம்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் CEO Awards விருதுகளானவை, சிறப்பாகச் செயற்படும் தலைவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு, 12 விசேட பிரிவுகளில் அங்கீகாரம் வழங்கும் நிகழ்வாகும். மிகச் சிறப்பாக செயற்படும் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக இவ்விருதுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ்விருது தொடர்பில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட கமல் டோல், “வருடத்தின் முனைப்பான தொழில்முனைபவர் (Dynamic Entrepreneur of the Year) எனும் பட்டத்தை எனக்கு வழங்கியமை தொடர்பில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு சிறந்த தலைவர், அவரது குழுவைப் போன்று சிறந்தவர் என்று சொல்வதைப் போல், Celcius நிறுவன குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்காக நான் இவ்வேளையில் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் இல்லாமல் என்னால் இந்த விருதை அடைய முடியாது என்பதால் இவ்விருது அவர்களின் கடின உழைப்புக்கான சான்றாகும்” என்றார்.

பல வருடங்களாக நீடித்து வரும் தனது தொழில் வாழ்க்கையின் அடித்தளத்தில் நின்ற கமல் டோல், கனிஷ்ட விற்பனை நிர்வாகி (Junior Sales Executive) என தனது பயணத்தை ஆரம்பித்து, பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பல்வேறு மட்டங்களில் பணிபுரிந்து உயரத்தை அடைந்தார். ஆடைகள் மீதான அதீத ஆர்வத்தை உணர்ந்த அவர், தனது பங்காளரும் தற்போதைய நிறுவனத் தலைவருமான சரித் குணதிலக்கவுடன் இணைந்து, உள்நாட்டு மற்றும் பிராந்திய சந்தைகளுக்கான ஆடம்பர கட்டில்கள் தொடர்பான தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற முழுமையான (100%) இலங்கை நிறுவனமான Celcius Solutions (PVT) Ltd. நிறுவனத்தை ஆரம்பித்தார்.

Celcius Solutions (PVT) Ltd. ஆனது, அதன் பல வருட பயணத்தில், தனது சீதுவவில் உள்ள அதிநவீன தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் படுக்கைகள், படுக்கைகளுக்கான துணி, துவாய்கள், விருந்துகள் துணி ஆகியவற்றில் இலங்கையில் நம்பர் 1 வர்த்தகநாமமாக திகழ்கின்றது. அதன் வாடிக்கையாளர்களின் வரிசையில், முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச ஹோட்டல் வலையமைப்புகள் முதல் சிறிய சொகுசு நவநாகரிக ஹோட்டல்கள், முன்னணி தனியார் மருத்துவமனைகள், முக்கியமான அரச நிறுவனங்கள் போன்றன உள்ளடங்குகின்றன. ஒரு முன்னணி ஹோட்டல் விநியோக நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள கூட்டாண்மை மூலம் Celcius நிறுவனம் மாலைதீவில் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளதோடு, நாடு முழுவதும் உள்ள ரிசோர்ட்டுகளுக்கு, Celcius உற்பத்திகளை சந்தைப்படுத்தும் அர்ப்பணிப்புள்ள குழு மூலம் அது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் சொந்த விற்பனைக் காட்சியகங்கள், இலங்கை முழுவதும் உள்ள 200 இற்கும் மேற்பட்ட விற்பனை பங்காளிகள் மற்றும் பல்வேறு ஒன்லைன் விற்பனைக் கூடங்கள் மூலமாகவும் அதன் சில்லறை வர்த்தகத்தை Celcius நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *