இலங்கையின் முதலாவதும் ஒரேயொரு CO2 உறுஞ்சும் ஸ்மார்ட் நிறப்பூச்சான GRAPHENSTONE இனை அறிமுகப்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, GRAPHENSTONE நிறப்பூச்சை வெளியிடுள்ளதன் மூலம், இலங்கையின் முதலாவதும், ஒரேயொரு காபனிரொட்சைட் (CO2) உறுஞ்சும் ப்ரீமியம் ஸ்மார்ட் நிறப்பூச்சு (பெயிண்ட்) மூலம் உள்நாட்டு அலங்கார வண்ணப்பூச்சுத் துறையின் வெளியை மாற்றியமைத்துள்ளது.

GRAPHENSTONE என்பது ஸ்பெயினில் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னணி சூழலியல் ரீதியான நிறப்பூச்சு ஆகும். இது சுண்ணாம்பு மற்றும் காரிய (graphene) தொழில்நுட்பத்தை ஒரு தனித்துவமான சூத்திரத்தில் ஒருங்கிணைக்கிறது. இது GRAPHENSTONE புத்தாக்க தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. சுண்ணாம்பு, ஒரு இயற்கையானதும், முற்றிலும் கைவினைக்குரிய பொருளாகும் என்பதோடு அது, வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகின்ற காரிய (graphene) பொருளால் நிரப்பப்படுகிறது. இங்கு பாரம்பரியம், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் சரியான கலவையானது, அதிக தரம் கொண்ட, நீண்ட ஆயுள் மற்றும் குறைந்த பராமரிப்பு தேவை கொண்ட ப்ரீமியம் வகையிலான, சூழல் நட்புடனான நிறப்பூச்சுகளை உருவாக்க உதவுகிறது. இது கணிசமான சேமிப்பையும் உருவாக்குகிறது.

DIMO குழுமத்தின் சில்லறை வணிகத்தை மேற்பார்வையிடும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித பண்டார இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “DIMO நிறுவனத்தின் மூலோபாய அணுகுமுறையானது, எமது பரவலைடைந்து வரும் தயாரிப்புத் வகைகளில் நிலைபேறான, புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இணைப்பதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது. இலங்கையில் முதலாவதும், ஒரேயொரு ஸ்மார்ட் நிறப்பூச்சை (பெயின்ட்) அறிமுகப்படுத்துவதானது, DIMO வின் வணிக அணுகுமுறையின் மூலம் நிலைபேறானதன்மையை நோக்கிய அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. சூழலுக்கான நிலைபேறானதன்மைக்கு வழி ஏற்படுத்துவதன் மூலம், நாம் சேவை செய்யும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதற்கான எமது தொடர்ச்சியான முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது. உலகில் மிகவும் பசுமை வாய்ந்தது என சான்றளிக்கப்பட்ட வர்த்தக நாமமான GRAPHENSTONE உடன் இணைந்து, இந்த புத்தாக்கமான நிறப்பூச்சுகளை நாம் இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.” என்றார்.

DIMO நிறுவனத்தின் GRAPHENSTONE தயாரிப்புகளானவை, வெளிப்புற மற்றும் உட்புற பூச்சு வகைகளைக் கொண்டுள்ளது. உட்புற (interior) வகைகளின் கீழ், DIMO Ecosphere மற்றும் GrafClean Ag+ ஆகியன உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிப்புற (Exterior) வகைகளின் கீழ், Biosphere இனை DIMO அறிமுகப்படுத்தியுள்ள அதே சமயம், Undercoating பிரிவில், உயர் Ph சுண்ணாம்பு அடிப்படையிலான கலவை கொண்ட Primer Plus அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது காபனிரொட்சைட்டை (CO2) உறுஞ்சும் மைக்ரோ-பிளாஸ்டிக் அற்றதாகும்.

GRAPHENSTONE GrafClean Ag+ ஆனது Low Sheen தோற்றத்தை வழங்கும் ப்ரீமியம் உள்ளக (interior) நிறப்பூச்சாகும். இது வெள்ளி அயனுடன் (Ag+) இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது, இது நுண்ணுயிர் (பக்டீரியா, பூஞ்சை, கொவிட்-19 வைரஸ்) எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது 2 வருடங்கள் வரை மேற்பரப்பு பாதுகாப்பை பேணுகிறது. இது நச்சுத்தன்மையற்ற மூலப்பொருட்களை கொண்டுள்ளதுடன், சுவாசிக்க மிக உகந்தவையாகும். இரசாயன சகிப்புத்தன்மை பிரச்சினை மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு இது உகந்ததாக காணப்படுகின்றது. உட்புற அமைப்புகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், பாலர் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு GRAPHENSTONE மிகவும் உகந்தது என பரிந்துரைக்கப்படுகிறது.

GRAPHENSTONE Ecosphere மற்றும் Biosphere ஆகியன சந்தையில் கிடைக்கக் கூடிய சூழல் மற்றும் இயற்கை நிறப்பூச்சு தேவையை பூர்த்தி செய்கின்ற மிகவும் மேம்பட்ட தீர்வுகளாகும். வெறும் 45 லீற்றர் GRAPHENSTONE நிறப்பூச்சானது, 14.40kg வரையான காபனிரொட்சைட்டை அகற்றுகிறது. இது 250kg எடையுள்ள முழுமையான ஒரு மரத்தால் உறுஞ்சப்படக் கூடிய காபனிரொட்சைட்டுக்கு சமமான அளவாகும். இது வீட்டின் சுவாசத்தை மேம்படுத்தும் அதே வேளையில், சுவர்கள் மற்றும் வீட்டின் அனைத்து இடங்களினதும் கடினத்தன்மை மற்றும் வலிமையையும் அதிகரிக்கிறது. இது உட்புற சூழல்களின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதோடு, பூஞ்சை, பங்கஷ், பக்டீரியா, வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது.

இன்றைய காலகட்டத்திலுள்ள வழக்கமான நிறப்பூச்சுகளுடன் ஒப்பிடுகையில், GRAPHENSTONE ஆனது உயர் வகை Nano Graphene மற்றும் சுண்ணாம்பு தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நுகர்வோருக்கு தனித்துவமான பெறுமதியை அளிப்பதோடு, தீங்கு விளைவிக்கும் இரசாயன வெளிப்பாடுகளிலிருந்து பாதுகாப்பை வழங்கக்கூடிய பல்வேறு அம்சங்களையும் வழங்குகிறது. உயிர்கொல்லி தன்மை அற்ற இது, ஆவியாகும் சேதன உள்ளடக்கம் (VOC) அற்றது என்பதோடு, அதிக நெகிழ்வுத்தன்மை, தீ தடுப்பு, அதிக SRI மதிப்பு (உயர் சூரிய கதிர் திறனை பிரதிபலித்தல்), பூச்சி விரட்டியடித்தல் அம்சத்தை கொண்டுள்ளதுடன், மைக்ரோ பிளாஸ்டிக் அற்ற பண்புகள் இதன் தனித்துவமான அம்சங்களாகும்.

GRAPHENSTONE ஆனது, உலகில் உயர் சான்றளிக்கப்பட்ட சூழலுக்கு உகந்த பசுமை இயல்பை வழங்கும் நிறப்பூச்சு நிறுவனமாகும். இவை சிங்கப்பூர் பசுமை கட்டட சபையினால் (Singapore Green Building Council) சான்றளிக்கப்பட்டவை என்பதுடன், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் ஆஸ்துமா சபையின் Sensitive Choice Certification, Global Green Tag இனது Green Rate சான்றிதழ் மற்றும் Global Green Tag Product Health Declaration™ PHD ஆகியன GRAPHENSTONE இன் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பசுமைச் சான்றிதழ்களில் அடங்குகின்றன.

ENDS

Image Caption

GRAPHENSTONE வழங்கும் இணையற்ற வகையிலான சூழல் நட்பு ஸ்மார்ட் நிறப்பூச்சுகள்

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *