DIMO மற்றும் BOSCH இடையேயான மாறாத ஆறு தசாப்த பந்தம் தொடர்கிறது

இலங்கையில் ‘Certified BOSCH Diesel Service Workshop’ (சான்றளிக்கப்பட்ட BOSCH டீசல் சேவை மையம்) எனும் தனது வலுவான நிலையை உறுதிப்படுத்துவதன் மூலம் BOSCH உடனான தனது நீண்டகால ஒத்துழைப்பை DIMO Diesel Lab மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த இரு நிறுவனங்களின் கூட்டாண்மை தொடர்பான உத்தியோகபூர்வ பங்காளித்துவ புதுப்பித்தல் நிகழ்வு, DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே மற்றும் Robert Bosch Lanka (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட BOSCH மற்றும் DIMO நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து அண்மையில் DIMO தலைமையகத்தில் நடைபெற்றது. Diesel Fuel Injection உபகரணங்கள் தொடர்பான சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் BOSCH நிறுவனத்துடனான வளர்ச்சியைக் கொண்ட சரியான பங்காளி எனும் வகையில், DIMO நிறுவனத்தின் ஆறு தசாப்தங்களாக அழியாத பந்தத்தை இந்த கூட்டாண்மை குறித்து நிற்கிறது.

DIMO நிறுவனத்தின் டீசல் ஆய்வுகூடமானது, BOSCH நிறுவனத்தின் அனைத்து டீசல் பம்ப் தொடர்பான பழுது பார்த்தல் மற்றும் சேவை வழங்கல்களை மேற்கொள்கின்றது. அத்துடன் இது முழுமையான உயர் தொழில்நுட்ப சோதனை உபகரணங்களை கொண்டுள்ளதோடு, அவை BOSCH நிறுவனத்தின் பயிற்சிகளைப் பெற்ற, உயர் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த டீசல் நிபுணர்களால் திறமையாக இயக்கப்படுகின்றன. கொழும்பு தவிர்ந்த, அநுராதபுரம் மற்றும் சியம்பலாபே ஆகிய இடங்களில் தனது கிளைகளை DIMO Diesel Lab வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இதன் மூலம் தமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு அருகிலேயே உலகத் தரம் வாய்ந்த டீசல் பழுதுபார்க்கும் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளைப் பெறுவதற்கான வசதியை நிறுவனம் வழங்குகிறது. இது டீசல் பம்ப் தொடர்பான பழுது பார்த்தல் மற்றும் வாகனங்கள், கப்பல்கள், மீன்பிடிப் படகுகள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் கட்டுமான இயந்திரங்களுக்கான சேவைகளை வழங்குகிறது.

DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், DIMO நிறுவனத்தின் சேவைகள் துறையையும் மேற்பார்வையிடுபவருமான விஜித பண்டார இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “எரிபொருள் விலை அதிகரிப்புடன், தொழில்துறையினர் தமது இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் ஆயுட்காலம், காலத்துடனான முதலீடுகளில் அதிக வருமானத்தைப் பெறுவதனை நோக்காகக் கொண்டு, எரிபொருள் திறன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. DIMO Diesel Lab வழங்கும் பல்வேறு சேவைகள் மூலம், தொழில்துறையினர் தமது டீசல் பம்ப்களை சரியான நேரத்தில் பழுதுபார்த்து அதற்கான சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது இந்த இலக்குகளை அடைய முடியும்.” என்றார்.

ஆறு தசாப்த கால நம்பிக்கையின் அடித்தளத்துடன் கட்டமைக்கப்பட்ட BOSCH நிறுவனத்துடனான DIMO நிறுவனத்தின் பங்காளித்துவமானது, இலங்கையில் BOSCH சேவை வலையமைப்பின் முக்கிய பங்காளி எனும் வகையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெகிழ்ச்சியான சேவைகளை தொடர்ச்சியாக வழங்க உதவியுள்ளது.

BOSCH ஆனது, உலகளாவிய ரீதியில் தன்னியக்க வாகன மற்றும் இயந்திரங்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளை வழங்குகின்ற முன்னணி சேவை வழங்குனர்களில் ஒன்றாகும். Robert Bosch Lanka (Pvt) Ltd ஆனது இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறுவப்பட்டதோடு, அது Robert Bosch GmbH நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாகும்.

ENDS        

Image Captions:

Image 1. பங்காளித்துவ புதுப்பித்தல் நிகழ்வில், DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே மற்றும் Robert Bosch Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர்…

Image 2. கூட்டாண்மை புதுப்பித்தல் நிகழ்வில் DIMO மற்றும் BOSCH நிறுவனங்களின் பிரதிநிதிகள்…

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *