தற்போதைய பொருளாதார சவால்கள் கருதி நுகர்வோருக்கு ஆதரவாக Diva விடமிருந்து புதிய Diriya சலவைத் தூள்

முன்னணி சலவை வர்த்தக நாமமான Diva, இலங்கையின் நுகர்வோரின் இதயங்களோடு எப்போதும் நெருக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் சலவைத் தேவைகளை கட்டுப்படியான விலை மற்றும் உயர்தர சலவை தெரிவுகள் மூலம்  பூர்த்தி செய்கிறது. இவ்வர்த்தகநாமமானது நுகர்வோரின் தேவைகளை தொடர்ச்சியாக அறிந்து வருவதோடு, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நுகர்வோர் எதிர்கொள்ளும் சவால்களையும் புரிந்துகொண்டுள்ளது. இலங்கையர்களுக்கு கைகொடுக்கும் வகையிலும் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியாகவும் ஒரு சிறந்த, தரமான, கட்டுப்படியான விலையுடனான, புதிய சலவைத் தீர்வான, ‘Diva Diriya’  (தீவா திரிய) சலவைத் தூளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. தீவாவிடமிருந்தான திரிய சலவைத் தூள் அறிமுகமானது, தீவாவின் வர்த்தகநாம நோக்கமான ‘தீவா தேத்தட்ட திரியக்’ (தீவா கைகளுக்கு பலம்) என்பதன் கீழ் திட்டமிடப்பட்ட பல்வேறு முயற்சிகளில் ஒன்றாகும்.

புதிய தீவா திரிய சலவைத் தூள் 500 கிராம், 40 கிராம் பொதிகளில் நுகர்வோரின் சலவைத் தேவைகள் மற்றும் அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கட்டுப்படியான விலையில் கிடைக்கிறது. இப்புதிய சலவைத் தூளானது, அழுக்கை அகற்றி, புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்துடன் ஆடைகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்கிறது.

Hemas Manufacturing (Pvt) Ltd நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் டெரிக் அந்தனி இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “நாம் தற்போது கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, வீட்டு உபயோகப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும்போது, கட்டுப்படியான விலை நுகர்வோரிடையே ஒரு முக்கிய காரணியாக உள்ளது. மிகவும் நெருக்கடியான நேரத்தில் எமது நுகர்வோருக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தை தீவா புரிந்துகொண்டுள்ளது. அதற்கமையவே, புதிய தீவா திரிய சலவைத் தூள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கொடுக்கும் பணத்திற்கான பெறுமதியுடன் சிறந்த தரத்தையும் கொண்டுள்ளது. நாம் எமது நுகர்வோருக்கு தொடர்ச்சியாக விசுவாசமாக இருப்போம் என்பதுடன், எதிர்வரும் காலத்திலும் அவர்களது சலவைத் தேவைகளை பூர்த்தி செய்வோம்.” என்றார்.

தீவா எப்போதும் நுகர்வோருக்கு உதவுவதில் கவனம் செலுத்தி வருவதுடன், கட்டுப்படியான விலை மற்றும் உயர்தர சலவைத் தீர்வுகள் மூலம், அன்றாட வேலைகளில் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது. தீவா இலங்கையர்களின் தேவையை மையமாகக் கொண்ட சலவைத் தீர்வுகளை அறிமுகப்படுத்தி, அவர்களை வலுவூட்டி வருகின்றது. எனவே அது பல்வேறு சமூகப் பிரிவைச் சேர்ந்த மக்களால் நுகரப்படும் வீட்டுப் பாவனை வர்த்தகநாமமாக திகழ்கின்றது. கடினமான கால கட்டங்களில் நுகர்வோரின் தேவைகளுக்கு பதிலளிப்பது மற்றும் சரியான நேரத்தில் தீர்வுகளை அறிமுகப்படுத்துவது ஆகியன, சிறந்த தரமான சலவை தயாரிப்புகளுடன் சலவை தொடர்பான இடத்தில் புரட்சியை ஏற்படுத்துவது, இவ்வர்த்தகநாமம் கொண்டுள்ள முக்கிய அம்சமாகும். இவ்வர்த்தகநாமம் அதன் நுகர்வோருக்கு பரந்த அளவிலான தெரிவுகள் மற்றும் பொதி அளவுகளை வழங்கி வருகிறது. தீவா ஒரு உண்மையான இலங்கை வர்த்தக நாமமாகும். இது உள்ளூர் நுகர்வோரின் எண்ணங்களைப் புரிந்துகொள்வதுடன், தீவா பவர் பவுடர் மற்றும் திரவம், தீவா சவர்க்காரம், தீவா ஃப்ரெஷ் சலவைத் தூள் ஆகியவற்றின் தயாரிப்புகளால் அது வலுவூட்டப்படுகின்றது.

Hemas Consumer பற்றி

வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, பல வருடங்களாக வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிநபர் பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட  புத்தாக்கம் கொண்ட குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சந்தையில் சிறந்த, முன்னணியிலுள்ள விருது பெற்ற தயாரிப்புகளை உருவாக்குகின்றமை தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த வகையில், அர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து, சூழலுக்கு நட்புமிக்க உலகத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை அது சென்றடைகிறது.

ENDS

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *