முன்னணி உள்நாட்டு பால் வர்த்தக நாமமான பெல்வத்தை புதிய Chilli Butter தயாரிப்பை வெளியிடுகிறது

– புதிய அளவிலான சிலோன் வெண்ணெய் பொதிகளும் அறிமுகம்

பலவேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, பால் பிரியர்களுக்காக அதன் சமீபத்திய Pelwatte Chilli Butter வகை உற்பத்தியை அறிமுகப்படுத்துகிறது. Chilli Butter (மிளகாய் வெண்ணெய்) சுவை கொண்ட வெண்ணெய், மேலும் மெருகூட்டப்பட்ட பால் உற்பத்தியாக இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். Pelwatte Chilli Butter ஆனது, அதிக கொழுப்புள்ள பால் பொருளாகும். இது உணவு உட்கொள்வதற்கான பசியை அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்க உதவுகிறது. பால் கொழுப்பு, உண்ணக்கூடிய உப்பு, வறுத்த இயற்கை மிளகாய்த் தூள், வறுத்த இயற்கை மிளகாய் துகள்களுடன், பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய பசும்பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு, 200 கிராம் கொண்ட கோப்பைகளில் வெளிவருகிறது.

விரிவான சந்தை ஆராய்ச்சியை அடுத்து, வெண்ணெய் மசாலா மற்றும் அதன் உவர்ப்புத் தன்மையின் சிறந்த கலவையை சுவைக்க விரும்புபவர்களுக்காக, இந்த புதிய வெண்ணெய் உற்பத்திகளை சந்தையில் அறிமுகப்படுத்த பெல்வத்தை நிறுவனம் முடிவு செய்தது. Pelwatte Chilli Butter ஆனது, ஏற்கனவே பெல்வத்தை உற்பத்தி செய்யும் கிரீமான மற்றும் சுவையான வெண்ணெய்க்கு மேலும் சுவையான மிளகாய் மெருகூட்டலை சேர்க்கிறது. இது தமது உணவில் ஒரு மாற்றத்தை விரும்பும் நுகர்வோருக்கு ஒரு முழுமையான மகிழ்ச்சியான அனுபவமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பெல்வத்தை நிறுவனம், தனது புதிய வெண்ணெய் உற்பத்திக்கு மேலதிகமாக தற்போது காணப்படும் Pelwatte Ceylon Butter உற்பத்தியின் புதிய அளவிலான பொதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 3 வெவ்வேறு அளவுகளைக் கொண்ட பொதிகளில், 200 துண்டுகள், 30 துண்டுகள், 8 துண்டுகள் கொண்ட ஸ்மார்டான் பொதிகளில் வருகிறது. Pelwatte Ceylon Butter ஆனது 10g துண்டுகளாக பொதி செய்யப்பட்டு, உயர் சுகாதாரத்துடன், புதிய உள்ளூர் பால் கிரீம்களைப் பயன்படுத்தி சிறிய தொகுதிகளாக தயாரிக்கப்படுகின்றன. 82% ஆன இலங்கையின் தூய பால் கொழுப்பு, 16% இற்கும் குறைவான ஈரப்பதன், 16% இற்கும் குறைவான பால் திண்ம கொழுப்பு, 1.35% இற்கும் குறைவான உப்பு ஆகியனவே Ceylon Butter (சிலோன் வெண்ணெய்) உற்பத்தியின் முதன்மையான மூலப்பொருட்களாகும்.

உணவு மற்றும் குளிர்பானத் தொழில்துறையானது, வீட்டுக்கு எடுத்துச் செல்லுதல், வீட்டுக்கு டெலிவரி செய்தல், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகிய பகுதிகளை நோக்கி பாரிய அளவில் நகர்ந்துள்ளது. வழக்கமான அனைத்து வணிகங்களும் உயர்தர தயாரிப்புகளை அணுகும் வகையில் இருக்க வேண்டும். அவை அற்புதமான சுவையையும், சிறிய முயற்சி மூலமான தயாரிப்புடனும் தயாரிக்கப்பட்டு உணவுகளுடன் இணைந்து சிறப்பாக செல்ல வேண்டும். இவற்றிற்கு Pelwatte Dairy யின் சுவையான, துண்டுகளாக்கப்பட்ட உப்பு சேர்க்கப்பட்ட சிலோன் வெண்ணெய் பொதிகள் சிறந்த தீர்வாகும்.

இனிப்பாக இருந்தாலும், உறைப்பாக இருந்தாலும், பெல்வத்தை அனைவருக்கும் ஏதோ ஒரு வகை சுவையை வழங்குகிறது. அதனால்தான் இந்த வர்த்தகநாமத்திற்கு அதிகளவான அபிமானிகள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளனர். பெல்வத்தையின் தன்னிறைவுக்கான நோக்கத்தின் பின்னணியில் உள்ள உந்துசக்தியும் இதுவேதான். பெல்வத்தை என்பது தனியே பால் பொருட்களை பற்றியது அல்ல என்பதோடு, அனைவரின் சுவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம், ஒரு தொழில்துறை முன்னோடியாகவும், ஏனைய வர்த்தகநாமங்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாகவும் திகழ்கிறது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *