இலங்கையில் 5 வருட நிறைவு; இலங்கை தொடர்பான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் vivo

முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, புதிய மைல்கற்களை எட்டும் வகையில் தொடர்ச்சியாக தனக்கு ஆதரவளித்து உதவிய அனைத்து பங்காளிகள், பணியாளர்கள், வழங்குநர்கள், விநியோகஸ்தர்கள், ஊடகங்கள் மற்றும் நுகர்வோருக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதன் மூலம், இலங்கையில் தனது 5ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. குறிப்பாக சவாலான காலங்களில் vivo வர்த்தகநாமத்தை இலங்கை சமூகத்தின் ஒரு அங்கமாக கருதியமை தொடர்பில் அது நன்றி தெரிவிக்கிறது.

vivo இலங்கையில் தனது மகத்தான பயணத்தை 2017 இல் ஆரம்பித்ததோடு, தனது புத்தாக்கமான ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகள் மூலம் கடந்த 5 வருடங்களில் தனக்கென ஒரு இடத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. சரியான விடயங்களை சரியான வழியில் செய்யும் Benfen தத்துவம் மற்றும் அதன் நுகர்வோரை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம் வழிநடத்தப்பட்டு, உலகளாவிய கண்டுபிடிப்புகளை பிராந்தியத்தில் கொண்டு வர vivo பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

vivo ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், நுகர்வோருடன் வலுவான உறவுகளை வளர்த்தல் மற்றும் தனது தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம் மதிப்பு சேர்த்தல் மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்கும் தயாரிப்புகளுடன் ஸ்மார்ட்போன் சந்தையை வளப்படுத்துதல் ஆகிய குறிக்கோள்கள் மூலம் இயங்கி வருகிறது. இலங்கை ஸ்மார்ட்போன் சந்தையில் vivo அறிமுகமானதில் இருந்து, ஒரு சிறந்த மற்றும் நம்பகமான வர்த்தக நாமமாக அது பிரபலமடைந்துள்ளது. விற்பனை மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்யும் வகையில் 2,500 இற்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களின் வலுவான வலையமைப்பின் மூலம் அது உறுதியடைந்துள்ளது. பிராந்திய சந்தையில் மேலும் ஊடுருவி, இலங்கை நுகர்வோருக்கு விதிவிலக்கான சேவையை vivo உறுதிசெய்வதோடு, முக்கிய தொழில்துறை முன்னோடிகளுடன் வணிக கூட்டாண்மைகளையும் அது நிறுவியுள்ளது.

ஒவ்வொரு நுகர்வோரினதும் மாறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் vivo Sri Lanka, விலை எல்லைக்குள் கிடைக்கக்கூடிய புத்தாக்கமான அம்சங்கள் மற்றும் சிறந்த வடிவமைப்புகள் மூலம் கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போன்களை வழங்கி வந்துள்ளது. V மற்றும் Y தொடர்களில் உள்ள தயாரிப்புகள் நுகர்வோர் மத்தியில் பெரும் ஆதரவையும் பாராட்டையும் பிரபலத்தையும் பெற்றுள்ளன. ஆயினும் கையடக்கத் தொலைபேசி புகைப்படவியலில் V தொடரானது, எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட கெமரா அம்சங்களின் ஒருங்கிணைப்புடன் ஒரு அளவுகோலை அமைத்துள்ளது. அத்துடன் கட்டுப்படியான விலைக்குள், பலதரப்பட்ட அம்சங்கள் மற்றும் உயர்நிலை செயற்றிறனையும் கொண்ட ஸ்மார்ட்போனைத் தேடும் இளைய தலைமுறையினருக்கு Y தொடரானது சரியான தெரிவாக பிரபலமடைந்துள்ளது.

vivo Sri Lanka நிறுவனத்தின் 5ஆவது வருட நிறைவை நினைவுகூரும் வகையில், vivo Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Kevin Jiang கருத்து வெளியிடுகையில், “5 வருடங்களாக இலங்கையில் எமது பயணம் பல்வேறு மைல்கற்களை அடைந்த ஒரு வர்த்தக நாமம் எனும் உற்சாகத்தையும் நிறைவையும் அளித்துள்ளது. எமது புத்தாக்க கண்டுபிடிப்பு அடிப்படையிலான அணுகுமுறை காரணமாக, எம்மால் பல சவால்களை சமாளிக்கவும், பல பயனர்களுக்கு பயனளிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை நாட்டில் அறிமுகப்படுத்தவும் முடிந்துள்ளது. அத்துடன், எமது முயற்சிகளில் எப்பொழுதும் எமக்கு விசுவாசத்துடன் ஆதரவளித்து வரும் எமது நுகர்வோரிடமிருந்து நாம் அன்பையும் பாராட்டையும் பெற்று வந்துள்ளோம். இலங்கையில் vivo நிறுவனத்தின் மகத்தான வெற்றியானது, அர்ப்பணிப்புள்ள எமது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடகங்கள் மற்றும் பங்காளிகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாகும். அவர்களின் அர்ப்பணிப்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக நாம் இருப்போம். இதன் தொடர்ச்சியாக, எமது சேவைகளை விரிவுபடுத்தவும், சிறந்த தொழில்நுட்பத்தை வழங்கவும், டிஜிட்டல் ஒருங்கிணைப்பை நோக்கி நாட்டை கொண்டு செல்லவும் நாம் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

vivo வின் வர்த்தகநாம மதிப்புகளின் முக்கிய அம்சமானது, சமூகத்திற்குத் மீள கொடுப்பதற்கான அர்ப்பணிப்பாகும். இது, சமூக நன்மைத் திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிலையான ஆதரவிற்கான நன்றியைத் தெரிவிக்கும் வகையிலான கவர்ச்சிகரமான ஊக்குவிப்பு திட்டங்கள் வடிவில் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் சேவை மையங்களில் பிரத்தியேகமானதும் தனித்துவமானதுமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் கிடைக்கப்பெறுவதால், அதன் ஸ்மார்ட்போன் பயன்பாட்டு காலம் முழுவதும் அதன் வாடிக்கையாளர்களுக்கு உதவவும் வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை மேம்படுத்தவும் vivo தொடர்ச்சியாக செயற்பட்டு வருகிறது. இலங்கை சமூகத்திற்கு மேலும் அதன் ஆதரவை வழங்கும் ஒரு தீவிர முயற்சியின் அடிப்படையில், இளைய தலைமுறையினரின் கல்வித் தேவைகளை மேம்படுத்தி, பாடசாலைகளுக்கு அத்தியாவசிய காகிதாதிகள் மற்றும் ஸ்மார்ட்போர்டுகளை நன்கொடையாக அளித்து, #vivocares CSR திட்டத்தை vivo முன்னெடுத்துள்ளது.

இலங்கைக்கு ஏற்ற வகையிலான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு vivo இசைவாக்கமடைந்துள்ளது. சமூகத்தின் நன்மைகளை மையப்படுத்திய திட்டங்களுடன் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் அறிமுகத்தையும் இணைத்து, வாழ்க்கைமுறை மேம்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க பாடுபடும், சமூக உணர்வுள்ள ஒரு வர்த்தக நாமமாக vivo தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் திறனான வாடிக்கையாளர் உதவி தொடர்பான முன்னோடியான முயற்சிகள் மூலம், பிராந்தியத்தில் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானதாக இவ்வர்த்தகநாமம் தனது பயணத்தைத் தொடர்கிறது.

vivo பற்றி

vivo ஆனது, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த சேவைகளை மையமாகக் கொண்டு, வடிவமைப்பு சார்ந்த மதிப்பின் அடிப்படையில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் மனிதர்களுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனித்துவமான படைப்பாற்றல் மூலமான வழிகளில் தொழில்நுட்பத்தையும் நவநாகரிகத்தையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான, புதிய போக்கினை உருவாக்கும் ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதன் மூலம் பாவனையாளர்களை டிஜிட்டல் உலகத்துடன் இணைக்க vivo உறுதிபூண்டுள்ளது. Benfen*, வடிவமைப்பு சார்ந்த மதிப்பு, நுகர்வோர் சார்ந்த நிலை, தொடர்ச்சியான கற்றல் மற்றும் குழு மனப்பான்மை ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளைப் பின்பற்றி, vivo ஒரு முன்னணி, நீண்டகால, உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாறுவதற்கான தனது தொலைநோக்கினை அடைய நிலைபேறான அபிவிருத்தி மூலோபாயத்தை செயல்படுத்தியுள்ளது.

சிறந்த உள்ளூர் திறமையாளர்களை ஒன்றிணைத்து மேம்படுத்தும் அதே வேளையில், vivo வின் தலைமையகம் சீனாவின் Dongguanஇல் அமைந்துள்ளதுடன் Shenzhen, Dongguan, Nanjing, Beijing, Hangzhou, Shanghai, Xi’an ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களை அது கொண்டுள்ளது. இந்த நிலையங்கள் 5G, செயற்கை நுண்ணறிவு, புகைப்படவியல், வடிவமைப்பு மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகள் உள்ளிட்ட அதிநவீன நுகர்வோர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. vivo சீனா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் (வர்த்தகநாம அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி மையங்கள் உட்பட) 7 உற்பத்தி மையங்களை ஸ்தாபித்துள்ளது. இது ஒவ்வொரு வருடமும் 200 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை அது தயாரிக்கின்றது. தற்போதைய நிலையின் பிரகாரம், vivo அதன் விற்பனை வலையமைப்பை 60 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உருவாக்கியுள்ளது, இது உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை தன்வசம் கவர்ந்துள்ளது.

*“Benfen” என்பது சரியான விடயங்களைச் செய்வது மற்றும் விடயத்தை சரியாகச் செய்வது பற்றிய அணுகுமுறையை விபரிக்கும் ஒரு சொல்லாகும் – இது சமூகத்திற்கான மதிப்பை உருவாக்குவதற்கான vivo வின் செயற்பணியின் சிறந்த விளக்கமாகும்.

சமீபத்திய vivo தொடர்பான தகவல்களுக்கு: https://www.vivo.com/en/about-vivo/news

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *