புத்தாக்கமான பொறியியல் தீர்வுகள் மூலம் நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் SOLEX

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக Solex Group of Companies (Pvt) Ltd ஆனது, நாட்டின் உயர் மட்ட நீர் இறைக்கும் பம்பி உற்பத்தியாளராக இலங்கையர்களின் மரியாதையையும் விசுவாசத்தையும் பெற்றுள்ளது. கடந்த தசாப்தத்தில் 40% இற்கும் அதிகமான தெளிவான சந்தைப் பங்கைக் கொண்டவாறு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான நீர்ப் பம்பிகளை விற்பனை செய்துள்ளதன் மூலம் இந்த கௌரவத்தை நிறுவனம் பெற்றுள்ளது. நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் சமீபகால பொருளாதார சவால்களை சமாளிக்கும் முயற்சியில் Solex நிறுவனமானது, அரச சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ஆடைகள், கட்டுமானம், விருந்தோம்பல், ஏற்றுமதி உணவு உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப சேவைகள், போன்ற தொழில்துறைகளுக்கும் மற்றும் பாரிய உள்ளூர் மற்றும் பன்னாட்டு கூட்டு நிறுவனங்களுக்கும் சேவை செய்யும் பொருட்டு, குறுகிய காலத்தில் கட்டுப்படியான மற்றும் அத்தியாவசிய உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் தொட்டிகள், டீசல் இறக்கும் பம்பிகள், Fire Pumps, Dehumidifier Dryers மற்றும் வாகன பாகங்கள் போன்ற, ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த பல்வேறு உபகரணங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம், Solex நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையையும் சூழலையும் மேம்படுத்தும் அதே வேளையில் குறிப்பிடத்தக்க வரவு – செலவு இடைவெளியை நிரப்புவதில் பங்களிப்புச் செய்து  வருகின்றது.

அதன் சில முன்னணி உற்பத்திகளில் டீசல் மாற்றும் பம்பிகளும் அடங்குகின்றன. இவை ஏற்றுமதி தரத்தில் கிடைக்கின்றன. அத்துடன் நாடு முழுவதும் தமது உபகரணங்களின் நிறுவல் மற்றும் விநியோக சேவைகளையும் Solex வழங்குகிறது. இத்தயாரிப்புகள் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு பயனளித்துள்ளன. அதன் அம்சங்கள், பவுசர்களில் இருந்து மேல் தொட்டிகளுக்கும், தரைத் தொட்டிகளிலிருந்து மேல் தொட்டிகளுக்கும் டீசலை மிகத் திறம்பட மாற்றி, அன்றாடச் செயல்பாடுகளை சிறப்பாக செயற்படுத்த அனுமதிக்கிறது. அது மாத்திரமன்றி, நாட்டின் சமீபத்திய இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு, ஒரு ISO சான்றிதழ் பெற்ற நிறுவனம் எனும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயர்தர டீசல் சேமிப்பு தொட்டிகள் மற்றும் எரிபொருள் விநியோக உபகரணங்கள் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழில்துறைகள் தொடர்ச்சியாக செயற்படுவதற்கும், அவை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவுவதோடு, பல மில்லியன் அந்நியச் செலாவணியையும் சேமிக்கின்றன. மேற்படி இரண்டு உற்பத்திகளும் ஆடை மற்றும் கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் Solex De-Humidifier உலர்த்திகள் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை தரப்படுத்துகின்றன. இதன் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி தொழில் ஊக்குவிக்கப்படுகின்றது. மரக்கறிகள், பழங்கள், மூலிகைகள், மிளகாய், மிளகு, புகையிலை, கறுவா, மீன் போன்றவற்றை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் சந்தையில் உள்ள ஏனைய உலர்த்திகளுடன் ஒப்பிடும்போது, ​​இத்தயாரிப்பின் தனித்துவமான வடிவமைப்பு 40% இற்கும் அதிகமான மின்சக்தியை சேமிக்கிறது. மேலும், ‘Optional Ozone Generator’ உபகரணமானது, நுண்ணங்கிகளை எதிர்த்துப் போராடுவதோடு, நுண்ணுயிர்கள் மற்றும் தூசி துகள்கள் உணவில் கலப்பதை கட்டுப்படுத்துகின்றன. இதன் மூலம் உணவிலுள்ள போசாக்குகள் பாதுகாக்கப்படுகின்றன. அதற்கமைய, இந்த தயாரிப்பு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை செயற்படுத்தி மில்லியன் கணக்கான டொலர்களை சேமிக்க உதவுகிறது.

Solex Fire Pumps மற்றும் Controllers ஆகியவை, மின்சார மற்றும் டீசல் இயந்திரங்களில் இயங்குவதோடு, இலங்கை தீயணைப்புத் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்டு TUV (மூன்றாம் தரப்பு) இனால் சான்றளிக்கப்பட்டுள்ளன. அவை NFPA 20 தரத்திற்கு இணங்குவதுடன், இது ஹோட்டல் தொழில்துறை மற்றும் பாரிய உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் வழக்கமாக பயன்படுத்தப்படும் தயாரிப்புகளாகும்.

குப்பை சேகரிப்பான்கள், கழிவு நீர் பவுசர்கள், தண்ணீர் பவுசர்கள் உள்ளிட்ட உள்ளூர் தொழில்துறை தயாரிப்புகளின் விரிவான வகைகளை Solex வழங்குகிறது. அது மாத்திரமன்றி, 2023 ஆம் ஆண்டிற்காக கணிசமான எண்ணிக்கையிலான புத்தம் புதிய வெளியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, தொழில்துறைகளை மேம்படுத்துவதையும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள அதே வேளையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் இலக்காகக் கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Solex ஆனது நம்பகமான தீர்வுகளின் வழங்குநராக அங்கீகாரம் பெற்றுள்ளது. சிறந்த தயாரிப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இணையற்ற விற்பனைக்குப் பின்னரான சேவையையும் நிறுவனம் வழங்குவதே இதற்கான காரணமாகும். புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலமாகவும், திறனான மற்றும் கட்டுப்படியான விலையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நம்பகமான உயர்-தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதன் மூலமும், ஒரு பெரு நிறுவனமாக, நெகிழ்ச்சியான வெளிப்பாடுடன் தேசிய அபிவிருத்தியை முன்னெடுக்கும் நடவடிக்கையில் Solex உறுதியாக இருந்து வருகின்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், எமது நாட்டுக்கும், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும் பெறுமதி சேர் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கி வழங்குவதற்கான தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை தீர்வுகளை எளிதாக்கும் நிறுவனம் எனும் வகையில், Solex குழுமம் உறுதியான நிலையில் உள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *