நவீன Huawei Y7P சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, தனது Y தொடரின் புதிய இணைப்பான Huawei Y7P ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகத்தின் சிறப்பம்சம் என்னவெனில், Huawei AppGallery மற்றும் Huawei இன் புதிதாக அறிமுகப்படுத்தப்பப்பட்ட அப்ளிகேஷன் ஸ்டோருடன் (application store) இலங்கையில் அறிமுகப்படுத்த முதல் சாதனம் Huawei Y7P ஆகும்.

மூன்று விவேகமான பின்புற கமெராக்களை இது கொண்டுள்ளது. 48MP பிரதான கமெரா, 8 MP அதிவிசாலமான கோண (Ultra Wide Angle) கமெரா மற்றும் 2MP ஆழமான கமெரா ஆகியன இணைந்து அனைத்து விவரங்களையும் துள்ளியமாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துவதுடன் தொலைவு, விசாலம், மற்றும் தெளிவுடன் படமெடுக்க உதவுகின்றது. இதற்கு மேலதிகமாக, செயற்கை நுண்ணறிவு (AI) அறிவார்ந்த காட்சி அடையாளங்காணும் தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேரத்தில் 500 க்கும் மேற்பட்ட காட்சிகளையும், 21 பிரிவுகளையும் தானாக அடையாளம் காணமுடிவதுடன், படங்களை அதற்கேற்ற வகையில் சரிசெய்து மேம்படுத்தலாம்.

மிக நேர்த்தியான துவாரத்துடன் கூடிய 6.39 அங்குல முழுக் காட்சி (FullView) திரையைக் கொண்டுள்ளதுடன், பரந்த காட்சியை முழுமையாக அனுபவிக்கும் வகையில் Huawei Y7P ஸ்மார்ட்போனானது 90.15% என்ற திரை-மேற்பாக விகிதத்தைக் (screen-to-body ratio) கொண்டுள்ளது. Huawei நிறுவனத்தின் புதுமையான மறைவு துளை தொழில்நுட்பம் திரையின் அடியில் உள்ள முன் கெமராவை திறம்பட உள்ளடக்குவதுடன், இதன் மூலம் சிறிய துவாரமே தோன்றுவதால் திரையின் முழுமைத்தன்மையும் பாதுகாக்கப்படுகின்றது. மேலும் குறைந்தபட்ச இடையூறுடன் பூரணமான பாவனையாளர் அனுபவத்தையும் வழங்குகின்றது.

Huawei Y7P ஸ்மார்ட்போனானது Huawei AppGallery மற்றும் அனைத்து அப்ளிகேஷன்களுடனும், Huawei மொபைல் கிளவுட்டுடனும் வசதியாக இணைக்கப்பட்டுள்ள Huawei ID உடன் வருவதுடன், பாவனையாளர்கள் தங்கள் படங்கள், வீடியோக்கள், நாட்காட்டி மற்றும் குறிப்புகளை பிரதியெடுத்து, மீட்டமைக்கவும், Huawei மொபைல் சாதனங்களில் தரவை ஒத்திசைக்க மற்றும் பரிமாற்றவும், அத்துடன் கிளவுட் டிரைவைப் பயன்படுத்தி கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைத்து அணுகவும் வழி செய்கின்றது. அனைத்து விசேட அப்ளிகேஷன்களும் தரவிறக்கம் செய்து பயன்படுத்த பாதுகாப்பானது என்பதனை Huawei AppGallery உறுதி செய்வதுடன், Huawei Video, Huawei Themes, Huawei Screen Magazine மற்றும் Huawei Browser என பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

Huawei Y7P, Nano-texture தொழில்நுட்பத்துடன் இணைந்த கணிக்க முடியாத ஒளியிலிருந்து உத்வேகம் பெற்றதென்பதுடன், ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒளி முறிவுடன் ஒரு மிரட்டலான 2.5 பரிமாண விளைவைக் காட்சிப்படுத்துகின்றது. மேலும் இது Aurora Blue மற்றும் Midnight Black ஆகிய இரண்டு பிரத்தியேக Huawei நிறங்களில் கிடைக்கின்றது.

Huawei Y7P, கையடக்க நைட் பயன்முறையுடன் (handheld night mode) வருகிறது, இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தையும், 6 விநாடிகள் என்ற மிக நீண்ட வெளிப்பாடு (exposure) நேரத்தையும் ஒருங்கிணைப்பதுடன், குறைந்த ஒளி கொண்ட சூழலில் ஒவ்வொரு விவரத்தையும் தெளிவாகப் படம்பிடிக்க உத்தரவாதம் அளிக்கிறது.

மேம்பட்ட வசதி மற்றும் பாதுகாப்பிற்காக, Huawei Y7P இன் பின்புறத்தில் கைவிரல் அடையாள சென்சர் பொருத்தப்பட்டுள்ளது. Huawei சுயமாக உருவாக்கிய முழு காட்சிகள் விரைவுபடுத்தும் என்ஜினானது (full scenarios accelerating engine) பல்வேறு மேம்படுத்தல்களைச் செய்வதுடன், தடையின்றிய சீரான அனுபவத்தைத் தருகிறது. இந்த விரைவுபடுத்தல் என்ஜினின் ஊடாக, 19% மேம்பட்ட அப்ளிகேஷன் திறப்புகளும், 27% மேம்பட்ட சீரான தடையின்றிய செயற்பாடும் சாத்தியமாகியுள்ளது. மேலும் ஸ்மார்ட் மெமரி எஞ்சின் செயற்பாட்டுக்கு கிடைக்கக்கூடிய நினைவகத்தை மேம்படுத்துவதால், முக்கிய பணிகளை சிறப்பாக தடையின்றி ஆற்ற முடிகின்றது.

Huawei Y7P, 4000mAh சக்திவாய்ந்த மின்கலத்தைக் கொண்டுள்ளமையானது, 22 மணித்தியாலங்கள் வீடியோக்களை பார்வையிடுவதையோ, 111 மணித்தியாலங்கள் பாடல்களை கேட்பதனையோ அல்லது 20 மணித்தியாலங்கள் இணையப் பாவனையை மேற்கொள்வதனையோ உறுதிசெய்வதுடன், power bank ஐ உடன் வைத்திருக்க வேண்டிய தேவையை இல்லாமல் செய்கின்றது. இந்த போனின் கருத்தியல் ரீதியான மின்னேற்றல் நேரம் 2.5 மணித்தியாலங்களாகும்.

இதன் 64GB ROM பாவனையாளர்கள் தங்கள் மறக்க முடியாத படங்கள், வீடியோக்கள் மற்றும் அப்ளிகேஷன்களை எளிதாக வைத்திருக்க அனுமதிக்கிறது. மேலும், 4GB RAM பல அப்ளிகேஷன்கள் ஒரே நேரத்தில் இயங்குவதனையும், கேம்களை தடையின்றி, வினைத்திறனுடன் விளையாடக் கூடியமையையும் உறுதி செய்கின்றது.

Huawei Y7P, EMUI 9.1 ஐக் கொண்டுள்ளதுடன், இது முழுமையான அனுபவத்தைத் தருவதுடன், புதுமையான செயற்பாடு மற்றும் விவேகமான வாழ்வுக்கு பங்களிப்பு செய்யும் தொழில்நுட்ப அமைப்பின் வேகத்தையும் மேற்படுத்துகின்றது. EROFS கோப்பு வாசிப்பு முறையுடன், வாசிப்பு வேகம் 20% அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அமைப்பானது 1000 படங்கள் அல்லது 500 பாடல்கள் வரையான மேலதிக தனிப்பட்ட தேக்கத்திறனை வழங்குகின்றது.

பல புத்தாக்க அம்சங்களைக் கொண்டு வரும் Huawei Y7P ஸ்மார்ட்போனினால் வலையமைப்பு தொடர்பின்றி தானாகவே 28012 வகையான குறிச்சொற்களை அடையாளம் காண முடிவதுடன், அங்கு பாவனையாளர்கள் கெலரியைத் திறந்து மக்கள் போன்ற குறிச்சொல்லைத் தேட முடியுமென்பதுடன், இதன்போது மக்கள் தொடர்பான அனைத்து படங்களும் உடனடியாக காண்பிக்கப்படும்.

Huawei Y7P, நாடெங்கிலும் உள்ள சிங்கர் விற்பனை நிலையங்களில் ரூபா. 31,999 என்ற அறிமுக விலையில் கிடைக்கின்றது. 2020 ஆம் ஆண்டில், Brand Finance இன் மிகவும் பெறுமதி வாய்ந்த உலகளாவிய 500 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் 10 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டது. BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தக நாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes Worldஇன் உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. 2018 ஆம் ஆண்டு Interbrand இன் உலகளாவிய வர்த்தக நாமங்கள் பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *