கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் கைத்தொழில் மையத்தின் (Industrial Hub) சமீபத்திய முயற்சியான Premier Herrero (Pvt) Ltd தனது அங்குரார்ப்பண தொழிற்சாலையை பன்னல, சந்தலங்காவவில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. Premier Herrero (Pvt) Ltd நிறுவனமானது, ‘Guardian’ என்ற வர்த்தகநாமத்தின் கீழ் கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு விசேட நிறுவனமாகச் செயல்படும். ‘Guardian’ கம்பி வலை வேலி (Chain Link Fencing) ஏற்கனவே சந்தையில் நன்கு நிலைபெற்றுள்ள ஒரு வர்த்தகநாமமாகும். Premier Herrero (Pvt) Ltd, அதே வர்த்தகநாமத்தில் தனது சொந்த கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி வரிசையை தொடர்ந்து விரிவுபடுத்தும்.
தொழிற்சாலையை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுடன் ஒட்டியதாக, நிறுவனம் தனது முதல் தயாரிப்பான ‘Guardian’ கல்வனைசு செய்யப்பட்ட முட்கம்பியை (Hot Dipped Galvanised Barbed Wire) அறிமுகப்படுத்தியுள்ளது. இது துருப்பிடிப்பை எதிர்க்கும் பண்பைக் கொண்டுள்ளதுடன், சீரான வகுப்பு D துத்தநாக பூச்சு, சீரான கம்பி தடிமன் மற்றும் முட்கம்பிகளுக்கு இடையே சீரான தூர இடைவெளி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதன் தனித்துவமான பாதுகாப்பான பொதியிடல் மற்றும் பாதுகாப்பாக கையாளுதல் மற்றும் பாதுகாப்பாக பொருத்துவதற்கு வழிவகுக்கின்றன.
கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் குழும பணிப்பாளரும் / பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான திரு. எஸ்.சி. வீரசேகர அவர்கள், புதிய முயற்சி குறித்து கருத்துத் தெரிவிக்கையில்: “Premier Herrero (Pvt) Ltd என்பது கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் கைத்தொழில் மையத்தின் (Industrial Hub) சமீபத்திய முயற்சியாகும். இது கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றும். நாங்கள் பரந்த அளவிலான உயர்தர கட்டுமானப் பொருட்களை சந்தையில் வழங்குவதற்கும், எங்கள் வர்த்தகநாமத்தை தொழில்துறை முன்னிலையாளராக ஸ்தாபிப்பதற்கும் நாங்கள் ஆவலுடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
கெப்பிட்டல் மஹாராஜா குழுத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான – திரு. சஷி ராஜமகேந்திரன், கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளரும் / பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான – திரு. எஸ்.சி.வீரசேகர, Premier Herrero (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான – திரு. பிரியந்த ஜயசிங்க மற்றும் Premier Herrero (Pvt) Ltd நிறுவனத்தின் தொழிற்சாலைப் பணிப்பாளரான – திரு. ஷபீர் அஹமட் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். அத்துடன், S-lon Lanka தனியார் நிறுவனத்தின் சார்பில் தொழிற்சாலைப் பணிப்பாளரான – திரு. சுமேத மெதவெல, ஆளணி மற்றும் நிர்வாகப் பணிப்பாளரான திரு. தம்மிக்க முதன்நாயக்க மற்றும் தர நிர்ணய பணிப்பாளரான – திரு. பிரியசாந்த பெர்னாண்டோ ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.