Quickee.lk அறிமுகப்படுத்தும் ‘Quickee Mansion’

களஞ்சியசாலை, வாடிக்கையாளர் அழைப்பு மையம், விநியோக சேவை மையம் கொண்ட செயற்பாட்டுத் தளம்.

தற்போது இலங்கையரின் விருப்பத்திற்குரிய ஒன்லைன் சந்தையான Quickee.lk, அதன் வணிக மற்றும்  விநியோக சேவையை மேலும் விரிவு படுத்தி, அனைத்து செயற்பாடுகளையும்  வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தும் வகையில், Quickee Mansion என்ற பெயரில் புதிய செயற்பாட்டுத்தளத்தை உருவாக்கியுள்ளது. 

கொழும்பு 03 இல் அமைந்துள்ள ‘Quickee Mansion’ ஆனது, அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் உதவி மையத்தை கொண்டுள்ளதுடன், இது வருடத்தின் 365 நாட்களும், காலை 9 மணி முதல் மறுநாள் காலை 3 மணி வரை, நீடித்த சேவையை  வழங்கி வருவதன் மூலம், வாடிக்கையாளரின்  கொள்வனவு கோரிக்கை பெறப்பட்டவுடன் துரிதமாக கொண்டு சேர்க்கும் செயன்முறையை வினைத்திறன்மிக்க வகையில் கையாள்கிறது. அந்தவகையில், Quickee Mansion மூலம், தன் நுகர்வோருக்கு சிறப்பான சேவையை வழங்கி, Convenience Delivered’ (‘செளகரியம் கொண்டு சேர்க்கப்படும்’) எனும் அதன் வாக்குறுதியை உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மையில் மீள ஆரம்பிக்கப்பட்ட Quickee.lk, இலங்கையின் விருப்பத்திற்குரிய ஒன்லைன் சந்தையாக விளங்குவதோடு, இலங்கையில் தற்போதுள்ள, வேறு எந்தவொரு ஒன்லைன் சந்தையும் வழங்காத இணையற்ற பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. பூமியில் உள்ள அதிவேக விலங்கான சிறுத்தையை தனது புதிய இலச்சினையில் இணைத்து, மீள் உருவாக்கப்பட்டுள்ள Quickee.lk ஆனது நாடு முழுவதும் உள்ள எந்தவொரு வீட்டிற்கும் இரவு வேளையில் அல்லது நள்ளிரவுக்கு பிந்திய மணிநேரங்களிலும் தன் துரித சேவையை வழங்கி வருகின்றது.

ஒரு வாடிக்கையாளரின் அனைத்து தெரிவுகளுக்குமான ஒரே ஒன்லைன் சந்தையாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள Quickee.lk, பலதரப்பட்ட பொருட் தெரிவுகள் மட்டுமல்லாது, புதிய தனித்துவமான சேவைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. Quickee Concierge சேவையானது, பணிபுரியும் பெற்றோர் அல்லது பகல் வேளையில் பல்வேறு விடயங்களை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய தனிநபர்களை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய விநியோக சேவையாகும். வேலைப்பளுவுக்கு மத்தியில் ஒரு வாடிக்கையாளர், தனது அனைத்து கொள்வனவுகளையும் தனக்குப்பதிலாக மேற்கொள்ளும் நோக்கில், Quickee.lk வழங்கும் ‘Quickee Concierge’ சேவையை அணுகுவதன் மூலம், தங்களுக்கென்று நேரடியான ஷொப்பிங் உதவியாளரை பெற்றுக்கொள்ள முடியும்.  இங்கு, ஒரு Quickee சாரதி உங்கள் ஷொப்பிங் பட்டியலை பெற்று, உங்கள் சார்பில் பல்வேறு கடைகளுக்குச் சென்று, அவற்றை கொள்வனவு செய்வதுடன், அவற்றை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்.

தனது தனித்துவமான சேவைகளில் இன்னும் ஒன்றாக , நீங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திடீரென ஒரு விருந்துக்கு திட்டமிட்டிருந்தாலோ அல்லது உங்கள் வீட்டுக்கு அவசரமாக மருந்துகளை டெலிவரி செய்ய வேண்டியிருந்தாலோ, Quickee யின் ‘Party SOS’ மற்றும் ‘Emergency SOS’ ஆகிய சேவைகள் மூலம் உங்களுக்கு அவசியமான சேவைகளை கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில், பின்னிரவு வேளையிலும், நள்ளிரவின் பெற்றுக்கொள்ள முடியும்.

Quickee.lk நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) திரு. சமி அக்பர் இது தொடர்பில் தெரிவிக்கையில், “Quickee Mansion இலங்கையில் உள்ள செயற்பாட்டுத்திறன் மிக்க ஒன்லைன் சந்தையாக விளங்குவதுடன், வாடிக்கையாளரின் சௌகரியத்தை முதன்மையாக கொண்டு தன் சேவைகளை வழங்குகிறது.  குறிப்பாக, ஆரம்பம் முதல் இறுதி வரை வாடிக்கையாளரின் எல்லா வகையான தேவைகளையும் அர்ப்பணிப்புடன், தனக்கே உரிய பாணியில் கையாள்கிறது. வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறான சேவைகளை வழங்கும் இலங்கையிலுள்ள பெரும்பாலான ஒன்லைன் சந்தைகளுக்கு பௌதீக ரீதியான இடங்கள் இருப்பதில்லை என்பதுடன், ஒரு சிலவற்றுக்கு வேறு சில நாடுகளிலேயே அவ்வாறான தளங்கள் உள்ளன. ‘One-Stop-Shop for All Needs’ ‘அனைத்து தேவைகளுக்கும் ஒரே நிலையத்தில் தீர்வு’ எனும் எமது சேவை வாக்குறுதிக்கு அமைய, Quickee Mansion அதனை மேலும் யதார்த்தமாக்கியுள்ளது.” என்றார்.

வாடிக்கையாளர்கள், தங்கள் அன்றாட வாழ்க்கையை இலகுவாக்கிக்கொள்வதற்காக  Google Play Store, Apple App Store மூலம் Quickee.lk கையடக்கத் தொலைபேசி செயலியை (App) விரைவாக பதிவிறக்கலாம். Quickee.lk இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலமும், 0117 324 325 எனும் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்வதன் மூலமும், அல்லது 0777 842 533 என்ற எண்ணுக்கு WhatsApp இல் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் அவர்கள் எமது சேவைகளை எவ்வேளையிலும் பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள், மேற்குறிப்பிட்ட தொடர்பிலக்கங்கள் வாயிலாக மட்டுமல்லாது,  அமெரிக்கா : +1 315 232 0426, கனடா: + 1 289 804 0587, இங்கிலாந்து : + 44 203 769 8734 இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் இலங்கையில் உள்ள அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக மலர்கள், கேக்குகள், பரிசுகள் போன்ற பலதரப்பட்ட பொருட்களையும் எமது தளத்தில் இருந்து தெரிவு செய்து ஓடர் செய்யலாம். பொருட்களை பெற்றுக்கொள்ளும் போது பணமாகவோ அல்லது கடன் வரவு அட்டை மூலமாகவோ கட்டணங்களை செலுத்தலாம். மேலும்,  வங்கி பணப்பரிமாற்றம், ஒன்லைன் கட்டண செலுத்துகை, QR கட்டண செலுத்துகை போன்ற பல்வேறு வசதிகளையும் ​​Quickee.lk கொண்டுள்ளது.

Image Captions

Image 01 – EFL Global நிறுவுனரும் தலைவருமான ஹனீப் யூசுப், Quickee Mansion திறப்பு விழாவின் போது…

Image 02 – Quickee Mansion இல் Quickee.lk குழுவினர்…

Quickee.lk பற்றி

Quickee.lk ஆனது 2013 ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததோடு, இது Expolanka Holdings PLC நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாகும். சௌகரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன் சில்லறை வர்த்தகம் மற்றும் விநியோக பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள Quickee.lk ஆனது, இலங்கையின் டிஜிட்டல் வர்த்தகத்தில் ஒரு புத்தாக்கமான மாபெரும் நிறுவனமாக மாற்றமடைந்து, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள இலங்கையர்களுக்கு சேவை செய்யத் தயார் நிலையிலும், அதற்கான பலத்துடனும் உள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *