இலங்கையின் மிகப் பழமையான NBFI – எலாயன்ஸ் பினான்ஸ் சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியிலும் வலுவான செயற்றிறனை வெளியிடுகிறது

எலாயன்ஸ் பினான்ஸ் பிஎல்சி  (ஏஎப்சி) நிறுவனம், தெற்காசியாவில் ‘a holistic sustainability certified value driven financial institution’ (ஒரு முழுமையான நிலைபேறான தன்மை கொண்ட சான்றளிக்கப்பட்ட பெறுமதி சார்ந்த நிதி நிறுவனம்) எனும் மதிப்புமிக்க அங்கீகாரத்தை பெற்ற முதல் நிறுவனமாக திகழ்கின்றது. நாட்டை பாதித்த உள்ளார்ந்த மற்றும் வெளிச்சார்ந்த எதிர்மறையான சூழலுக்கு மத்தியில், நிறுவனம் மீளெழுச்சி கொண்ட வெளிப்படுத்தலுடன் 2022/2023 நிதியாண்டின் முதல் காலாண்டை நிறைவு செய்துள்ளது.

சந்தை வட்டி விகிதங்களின் அதிகரிப்பு, குறைந்த கடன் தேவை, அதிகரித்த எரிபொருள் விலை, விநியோக பற்றாக்குறை போன்ற காரணங்களால் இந்நிதியாண்டின் முதல் காலாண்டில் வணிகச் சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இலங்கை அதன் வெளிநாட்டுக் கடன்களை செலுத்தத் தவறியதன் விளைவாக வெளிநாட்டு தர மதிப்பீட்டு நிறுவனங்களால் நாட்டின் நிதி சார்ந்த தர நிலை குறைக்கப்பட்டது. இலங்கை ரூபாவின் பாரிய வீழ்ச்சி மற்றும் அடிப்படை பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகியன நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பாரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

வெளிப்புற சவால்கள் காணப்பட்டபோதிலும், ஏஎப்சி நிறுவனம் மொத்த வட்டி வருமானத்தில் உறுதியான 54% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ள அதே நேரத்தில், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இக்காலாண்டில் வரிக்குப் பிந்தைய இலாபத்தை அது இரட்டிப்பாக்கியுள்ளது. தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கான modeled Impairment (மாதிரி குறைபாடு) தொடர்பான விதிகளுக்கு மேலதிகமாக முகாமைத்துவ செயற்பாடுகள் மூலம் கணிசமான அளவில் விவேகமான ஏற்பாடுகளை முன்னெடுத்ததன் அடிப்படையில், மேற்படி சிறந்த செயற்றிறனை கம்பனியால் அடைய முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்தின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக நிதிச் செலவில் கணிசமான அதிகரிப்பு மற்றும் செயற்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளன. இத்தொழில்துறை ஒரு பின்னடைவை பதிவு செய்த போதிலும் ஏஎப்சி அதன் கடன் புத்தகத்தை உரிய முறையில் பராமரிக்க முடிந்துள்ளது. தொழில்துறையிலுள்ளவர்களை விட சிறப்பாகச் செயற்பட்டு, நாட்டின் சுதந்திரத்திற்குப் பின் சந்தித்த மிகவும் சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியிலும், ​​நிறுவனம் அதன் மொத்த NPL விகிதத்தை 4.87% ஆக பராமரிக்க முடிந்துள்ளது. அத்துடன் அதன் மூன்று அடிப்படை வணிகத் தத்துவத்தின் வெற்றி மற்றும் நாட்டின் கிராமப்புற பொருளாதாரங்களில் கவனம் செலுத்தியமை ஆகியவற்றின் விளைவாக அதன் தயாரிப்புகள் எதிர்நோக்கிய ஆபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் வைப்பு அடித்தளமானது, நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் 14.6 பில்லியனில் இருந்து 17.8 பில்லியனாக உயர்வடைந்துள்ளது. இது ஏஎப்சி கொண்டுள்ள முதலீட்டாளர்களின் உயர் மட்ட நம்பிக்கையை தெளிவாகக் காண்பிக்கிறது. நிறுவனம் 11.74% எனும் வலுவான முக்கிய மூலதன விகிதத்தையும் 15.24% எனும் மொத்த மூலதன விகிதத்தையும் பேணியவாறு, கட்டுப்பாட்டாளரால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச முக்கிய மூலதன விகிதமான 7% மற்றும் மொத்த மூலதன விகிதம் 11% ஆகியவற்றை கடந்துள்ளது.

மூன்று அடிப்படை வணிகத் தத்துவத்தினால் உண்மையாக ஈர்க்கப்பட்ட ஏஎப்சி, நாடு இதுவரை கண்டிராத மிகக் கடினமான காலப்பகுதியில் பயணிக்கும் நிலையில், ​​நிலைபேறான தன்மையை நோக்கிய அதன் உறுதியான அர்ப்பணிப்பை தொடர்ந்தும் பேணி வருகிறது. ஏஎப்சி அதன் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் அதன் முந்தைய வருடத்தின் வரிக்குப் பின்னரான இலாபத்தில் சமூக மற்றும் சூழல் சார்ந்த நிலைபேறான தன்மை முயற்சிகளுக்கு 8% ஒதுக்கீட்டை மேற்கொண்டு வருகின்றது.

மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நன்கு புரிந்து கொண்டுள்ள ஏஎப்சி, அதன் சமூக தொழில்முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தி தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருவதோடு, பிராந்திய ரீதியான நிலைபேறான தன்மைத் திட்டங்களுக்கு அதன் ஒதுக்கீடுகளை அதிகரித்து வருகின்றது.

பல தசாப்தங்களாக தனது முழுமையான நிலைபேறான தன்மையுடன் இயங்கும் வணிக செயற்பாடு அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமென ஏஎப்சி நம்புகிறது. நிறுவனம் தனது வணிகத்தில் நிலைபேறான தன்மையை ஒருங்கிணைப்பதற்கான அதன் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், உலகளாவிய நற்பெயரைக் கொண்ட ஒரே எண்ணம் கொண்ட அபிவிருத்தி நிதி நிறுவனங்களிடமிருந்து நீண்ட கால சர்வதேச நிதியுதவியை நிறுவனத்தால் பெற முடிந்துள்ளது. நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவடைந்துள்ள நிலையிலும், நிறுவனம் தனது அந்நியச் செலாவணி மீள் செலுத்தல் மற்றும் கடப்பாடுகளை அதன் வெளிநாட்டுக் கடன் பங்குதாரர்களுக்கு உரிய காலப்பகுதியில் உரிய திறைசேரி முகாமைத்துவம் மற்றும் சரியான இடர் நீக்கும் மூலோபாயங்களைக் கடைப்பிடித்து அதனை செலுத்தியுள்ளது. இந்த மூலோபாயங்களின் விளைவாக, நிறுவனத்தின் அடிமட்டமும் சாதகமான வகையில் பயனடைந்துள்ளது.

தற்போது நாட்டில் சவாலான வணிகச் சூழல் நிலை காணப்படுகின்ற போதிலும், பல்வேறு பங்குதாரர் குழுக்களுக்கிடையே நிலையான பெறுமதி உருவாக்கத்தின் நிலைபேறான பயணத்தைத் தொடர ஏஎப்சி எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் நிலைபேறான நிதி மூலம் உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதுடன் இணைந்த, நிறுவனத்தின் இருப்புக்கான அதன் பாரிய நோக்கத்தை அது உணர்ந்து செயற்பட்டு வருகின்றது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *