நல்லூர் திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் HUTCH

Broadband தரவு இணைய சேவைகளுக்கான நாட்டின் வளர்ந்து வரும் தெரிவான HUTCH, பொருளாதார ரீதியாக சவாலான இவ்வேளையில் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான அதன் முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. HUTCH மேற்கொண்டு வரும் பல சமூக ஆதரவு முயற்சிகளுக்கு மத்தியில், யாழ்ப்பாணத்தின் நல்லூர் மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி HUTCH தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றது.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மிகப்பெரிய இந்து ஆலய திருவிழாவாக நல்லூர்த் திருவிழா விளங்குகின்றது. இம்மகோற்சவத்தில் கலந்துகொள்பவர்களுக்கு அன்னதானம் வழங்கும் புனிதமான பாரம்பரிய நிகழ்வாக அன்னதான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் தற்போது பணவீக்கம் நிலவுகின்றது. குறிப்பாக உணவுத் தட்டுப்பாடானது 80%க்கு மேல் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் போசாக்கான உணவை உண்பதில் மிகவும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். எனவே, HUTCH ஆனது அதன் சமூகத்திற்கான ஆதரவு முயற்சிகளின் ஒரு பகுதியாக, அன்னதான உதவிகளை வழங்குவதன் மூலம் இச்சுமையை ஓரளவு குறைக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. நல்லூர் மைலூரான் அரங்கில் ஓகஸ்ட் 05ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 25ஆம் திகதி வரை 20 நாட்கள் இடம்பெறும் HUTCH அன்னதான நிகழ்வில் பல்லாயிரக் கணக்கானோருக்கு உணவு வழங்கப்படவுள்ளது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த HUTCH Sri Lanka நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. திருக்குமார் நடராசா, “நல்லூர் திருவிழாவில் வழக்கமான தனது வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, வட பிராந்திய மக்களுக்கு சிறந்த உணவை வழங்குவதற்காக இந்நிதியை ஒதுக்க HUTCH தீர்மானித்துள்ளது.” என்றார்.

HUTCH Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசாவின் குடும்பத்தினர், இலங்கையின் வட பதுதியின யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். திருக்குமார் நடராசா இங்கிலாந்தில் கல்வி பயின்றுள்ளதோடு, இலண்டன் இம்பீரியல் கல்லூரி உள்ளிட்ட மூன்று முன்னணி UK பல்கலைக்கழகங்களில் மூன்று பட்டங்களைப் பெற்றுள்ளார். ஹொங்கொங்கில் உள்ள Hutchison Telecom நிறுவன தலைமையகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றியுள்ள அவர், ஆசியாவில் பல்வேறு செயல்பாடுகளுக்கான பதவிகளில் நியமனம் பெற்றுள்ளார்.

HUTCH Sri Lanka ஆனது, CK Hutchison Holdings Limited நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது Global Fortune 500 நிறுவனமாகவும் விளங்குவதோடு, உலகளாவிய தொலைத்தொடர்பு செயல்பாடுகளை ‘3’ அல்லது Three எனும் வர்த்தகக் குறியீட்டின் கீழ் முன்னெடுத்துள்ளது.

END

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நல்லூர் திருவிழாவில் Hutch CEO அதன் பிராந்திய தலைவர் மற்றும் பிரதேச குழுவினருடன் இடமிருந்து: வவுனியா மாவட்டத் தலைவர் – கவிச்செல்வம் விமலதாஸ், வடகிழக்கு பிராந்தியத் தலைவர் – பரிமளராஜா மோதிஷ், Hutch பிரதான நிறைவேற்று அதிகாரி – திருக்குமார் நடராசா, Hutch சந்தைப்படுத்தல் தொடர்பாடல் தலைவர் – ராஜீவ் டேவிட், Hutch IT சிரேஷ்ட நிறைவேற்றதிகாரி – ஆனந்தநடேசன்
Hutch நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா யாழ்ப்பாணம் நல்லூர் மகோற்சவத்தின் போது பக்தர்களிடம் உரையாற்றும் போது…
Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *