Rocell அதன் 75ஆவது கருத்திட்ட மையத்தை திறக்கிறது

மேற்பரப்பை நேர்த்தியா மூடுவதிலும் உயர்தர குளியலறை சாதனங்களை வழங்குவதிலும் உள்ளுர் ஜாம்பவானாக விளங்கும் Rocell, இலங்கையின் கிழக்குக் கடற்கரையின் செழுமையான பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில், அதன் நேர்த்தியான உட்புறங்களை அழகூட்டுவதற்காக, கல்முனையில் தனது புதிய Concept Centre (கருத்திட்ட மையம்) இனை திறக்கிறது. நாடளாவிய ரீதியில் பரந்து விரிந்த காட்சியறை வலையமைப்பு மற்றும் உலகெங்கிலும் உள்ள விநியோகஸ்தர்களின் ஆதரவுடன், Royal Ceramics Lanka நிறுவனத்தின் முதன்மையான தரக்குறியீடான Rocell, உயர்தர தரை ஓடுகள், சுவர் ஓடுகள், குளியலறை உபகரணங்களுக்கான (Floor Tiles, Wall Tiles, Bathware) பெயராக மாறியுள்ளது. அத்துடன் இந்த வர்த்தகக் குறியீடானது, உலகின் சிறந்த வடிவமைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்புக் குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதுடன், அது உலகின் மிகச் சிறந்தவற்றை எமது நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கிறது.

128A, பிரதான வீதி, கல்முனை 12 இல் அமைந்துள்ள புதிய Concept Centre ஆனது, Rocell யின் 75ஆவது காட்சியறையாக திகழ்கிறது. இது Rocell யின் நாடளாவிய ரீதியில் வளர்ந்து வரும் காட்சியறை வலையமைப்பின் ஒரு அங்கமாகும். 4,780 சதுர அடி பரப்பளவில், இரண்டு மாடிகளைக் கொண்ட, தனித்துவமான இடப்பரப்பில், பாரம்பரிய ஷொப்பிங் அனுபவத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 700 இற்கும் மேற்பட்ட வகையான ஓடுகள் (Tiles), சேகரிப்பு அம்சங்கள் கொண்டவைகள் (collections), மேற்பரப்பு அலங்காரங்கள் (surface finishes) மற்றும் 70இற்கும் அதிக தனித்துவமான குழியலறை பெரும் சாதனங்கள் (Bathware Masterpieces) ஆகியவற்றை இது கொண்டுள்ளது.

1990ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது பயணத்தை ஆரம்பித்ததிலிருந்து Royal Ceramics Lanka PLC நிறுவனமானது, தற்போது இலங்கையின் முதன்மையான பெயராகவும், மேற்பரப்புகளை நேர்த்தியாக மூடுகின்ற மற்றும் உயர்தர கழிப்பறை உபகரணங்களில் சமகால வடிவமைப்பு மற்றும் செயற்பாடுகளைக் கொண்ட தயாரிப்புகளை வழங்குவதிலும் சிறந்து விளங்கும் சந்தையின் முன்னணி நிறுவனமாகவும் மாறியுள்ளது. உலகின் சிறந்த தொழில்நுட்பக் குழுக்களுடன் வலுவான கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதன் மூலம், அதன் ஆரம்பம் முதல் இலங்கைக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் Rocell தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *