தேவையுடையோருக்கு அவசரகால நிவாரணம் வழங்க ‘மனிதநேய ஒன்றிணைவு’ திட்டத்தில் Huawei இணைகின்றது

நாட்டின் பொறுப்புள்ள பெருநிறுவனம் எனும் வகையில், ‘மனிதநேய ஒன்றிணைவு’ முயற்சியின் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரகால நிவாரணங்களை வழங்குவதற்கு Huawei Sri Lanka அண்மையில் உறுதியளித்துள்ளது. டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings Pvt Ltd, Hemas Holdings PLC, Execution Partner சர்வோதய சிரமதான சங்கம், சுயாதீன கணக்காய்வு நிறுவனமான PwC Sri Lanka நிறுவனங்களால் இந்த கூட்டுநிறுவன மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோடு, CBL Group, Citi, Sunshine Holdings PLC, Huawei Technologies Lanka Co. ஆகியன இத்திட்டத்தின் பங்குதாரர்களாக இணைந்துள்ளன.

ஒரே எண்ணம் கொண்ட பெருநிறுவன பங்காளிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் ‘மனிதநேய ஒன்றிணைவு’ முயற்சியானது, இலங்கை முழுவதிலும் உள்ள 200,000 இற்கும் அதிகமான பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 25 மாவட்டங்களிலும் அவசரகால நிவாரணம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் 75,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று வரை உதவிகளை பெற்றுள்ளன. உரிய பொருளாதார மீட்சித் திட்டத்தின் மூலம் நாட்டில் நிலைபேறான பலனுள்ள பரிமாற்ற முறை நிறுவப்படும் வரை, இந்த மனிதநேய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டம், அதன் நிவாரண முயற்சிகளை மேற்கொள்ளும்.

Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Liang Yi இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “அண்மைக்காலமாக நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களால், இலங்கையிலுள்ள கணிசமான அளவிலானோர்  பாதிப்படைந்துள்ளமை தொடர்பில் நாம் வருத்தமடைகிறோம். நாடும் அதன் மக்களும் நெருக்கடிக்கு முகம்கொடுத்தவாறு, மிகுந்த நம்பிக்கையையும், மீளெழுச்சியையும் கொண்டுள்ளதையும் நாம் காண்கிறோம். ஒரு உலகளாவிய ICT வழங்குனர் என்ற வகையிலும், பொறுப்புள்ள பெருநிறுவனம் எனும் வகையிலும், இலங்கையில் ICT துறையில் மட்டுமன்றி இலங்கையின் எதிர்காலத்தின் மீதும் அதிக நம்பிக்கையை Huawei வைத்துள்ளது. ‘மனிதநேய ஒன்றிணைவு’ திட்டம் தொடர்பான Dialog நிறுவனம் கொண்டுள்ள உறுதி தொடர்பில் நாம் ஆழமாக ஈர்க்கப்பட்டுள்ளோம். அத்துடன் பல்வேறு தரப்பினரினதும் ஒத்துழைப்புடன், மிகவும் தேவையுடையவர்களுக்கு எமது உதவியை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம். எனவே, தொடரும் சவால்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க, எமது மூலோபாய பங்காளரான டயலொக் ஆசிஆட்டா உடன் கைகோர்க்க Huawei முடிவு செய்துள்ளது. சமூகத்திற்கு அதிகாரமளிப்பதன் மூலம் மக்களின் சிரமங்களை சமாளிப்பது தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்த முடியுமென நாம் நம்புகிறோம்.” என்றார்.

“எமது முயற்சியின் ஒரு பகுதியாக ‘இலங்கையில், இலங்கைக்காக – உங்களுக்காக’ என்பதனை கொண்டுள்ளோம். இலங்கை மக்கள் அப்போது இருந்ததைப் போன்று, இலங்கையில் உள்ள மக்களையும், மீட்சியடையும் தேசத்தையும் உயரத்திற்கு கொண்டு செல்வதே எமது முயற்சியாகும்” என லியாங் யி மேலும் தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழு  பிரதம தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேதா இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த மனிதாபிமானப் பணியின் அனைத்துப் பங்காளிகள் சார்பாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆதரவளிக்கின்ற, இந்த நாடு தழுவிய முயற்சியில் இணைந்தமைக்காக Huawei நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 200,000 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களை ஆதரிப்பதே எமது நோக்கமாகும். அத்துடன், இந்த இலக்கை அடைவதற்காக, ஒரே எண்ணம் கொண்ட பெருநிறுவன கூட்டாளர்களை எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். நாம் ஒன்றாக இணைந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென நாங்கள் எப்போதும் நம்புகிறோம். அத்துடன், 17 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் விருப்பத் தெரிவும், டிஜிட்டல் தோழனுமாகிய நாம், எமது சமூகங்களுக்கு அவர்களுக்கு மிக அதிகமான தேவை உள்ள இந்நேரத்தில் ஆதரவளிப்பது எமது பொறுப்பு என கருதுகிறோம்.

கடந்த காலங்களில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுநோய் பரவல், இயற்கை அனர்த்தங்கள், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் போன்றவற்றின் போது, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு Huawei தொடர்ச்சியாக முன்வந்து உதவியுள்ளது. Huawei நிறுவனத்தினால் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Huawei Seeds for the Future (Huawei எதிர்காலத்திற்கான விதைகள்) திட்டத்தின் மூலம், திறமையான இளைஞர்களுக்கு ICT திறன்கள் தொழில்சார் பயிற்சிகள் போன்ற செயற்பாடுகள் மூலம் இலங்கையில் ICT திறமையாளர்களின் வளர்ச்சியை நிறுவனம் ஊக்குவித்துள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, Huawei இலங்கையில் தனது பயணத்தை தொடர்ந்து வருகின்றது என்பதுடன், உள்நாட்டிலுள்ள பிரதான தொலைத்தொடர்பு சேவை வலையமைப்புகள், அரச நிறுவனங்கள், தொழில்துறை வாடிக்கையாளர்களுடன் விரிவான மற்றும் ஆழமான ஒத்துழைப்பையும் அது கொண்டுள்ளது. இலங்கையில் உயர்மட்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை தொடர்ந்து அபிவிருத்தி செய்வதில் Huawei உறுதியாக உள்ளது.

படம் 02: இடமிருந்து வலமாக – சர்வோதய சிரமதான இயக்கத்தின் தலைவர் டொக்டர். வின்யா ஆரியரத்ன, Huawei Technologies Lanka Pvt Ltd நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Liang Yi, Dialog Axiata PLC குழும பிரதான தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேதா, Huawei Technologies Lanka Pvt Ltd நிறுவனத்தின் சிரேஷ்ட தயாரிப்பு தீர்வு முகாமையாளர் காவிந்த மஞ்சுள

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *