பெல்வத்தை: புத்தாக்கம் மற்றும் தரம் ஆகிய கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பெயர்

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனமான பெல்வத்தை, இவ்வருடத்தில் மேலும் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. முழுமையாக 100% உள்நாட்டில் இருந்து பெறப்படும் பாலை மாத்திரம் பயன்படுத்தி, எவ்வித மேலதிக பாதுகாப்பு பொருட்களோ, சுவையூட்டிகளோ, நிறமூட்டிகளோ இன்றி தயாரிக்கப்படும் இப்புதிய தயாரிப்புகள், Pelwatte நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள பால் பொருட்களுக்கு மேலதிகமான உற்பத்திகளாக அமையவுள்ளன. ஒரு உள்ளூர் பால் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், பால் மாவை மாத்திரமல்லாது, புத்தம் புதிய பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிறீம் உள்ளிட்ட ஏனைய பல்வேறு வகையான பால் பொருட்களுக்கான தேவையையும் பூர்த்தி செய்வது அவசியமென Pelwatte எதிர்பார்க்கிறது.

இதன் ஆரம்ப முயற்சிகள் பால் பண்ணை விவசாயிகளிடமிருந்து ஆரம்பமாகின்றன. அவர்கள் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை காரணமாக எதிர்கொண்டுள்ள பல்வேறு இடையூறுகளையும் தாண்டி மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்கள். ஆயினும், ஒரு சில சர்வதேச பால் வர்த்தகநாமங்களில் கூட ஒப்பிட முடியாத தரத்தில் அதனை வழங்கி, நாட்டு மக்கள் சிறந்ததைப் பெறுவதை உறுதி செய்வதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். நாட்டிலுள்ள மக்கள் தங்கள் தேவை தொடர்பில் திருப்தியடைவதையும், பால் பொருட்களிலிருந்து உரிய போசணையை பெறுவதையும் உறுதிசெய்யும் பணியில் இவர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும், இது இந்த இடத்தில் நிறைவடைவதில்லை. Pelwatte நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையாளர் சுனேத் குணதிலக அது தொடர்பில் விளக்குகையில், “எமது தொழில்துறையில் புத்தாக்கம் என்பது அப்பாற்பட்ட வகையில் சிந்திப்பது மட்டுமல்ல, இந்த புத்தாக்க கண்டுபிடிப்பு எமது வாடிக்கையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களால் விரும்பப்படுவதை உறுதி செய்வதாகும். எமக்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு நாம் அதனை மேற்கொள்ளாவிட்டால் நாம் தற்போது இந்த இடத்தில் இருக்க மாட்டோம். இதனால்தான் பெல்வத்தை வெண்ணெய் முதல் ஐஸ்கிறீம் வரை பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் அதன் வெவ்வேறு சுவைகளை எமது தரத்தை சுவை பார்க்கும் வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள் என்று நாம் நம்புகிறோம். Pelwatte அதன் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் மேற்கொண்டு வரும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் காரணமாக ஏனைய வர்த்தகநாமங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. நீங்கள் பெல்வத்தையிலிருந்து ஒரு தயாரிப்பைத் திறக்கும் வேளையில் இதை நீங்கள் உணரலாம். புத்துணர்ச்சி, சுவை, நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றையே பெல்வத்தையுடன் நீங்கள் உணருகிறீர்கள் என்பதுடன் அதற்கு சாட்சியாகவும் உள்ளீர்கள். நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு துளி பாலிலும் பலரின் உழைப்பு உள்ளது என்பதே இதற்கான காரணமாகும்.” என்றார்.

சுவாரஸ்யமான புத்தாக்கமான பால் தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற Pelwatte Dairy, அதன் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. முழுமையாக 100% உள்நாட்டில் பெறப்படும் பாலை மாத்திரம் பயன்படுத்தி, பெல்வத்தை நிறுவனம் புதிய ஸ்ட்ரோபெரி சுவையுடைய செற் யோகர்ட் மற்றும் ஸ்ட்ரோபெரி அருந்தும் தயிர் ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது. சுவையூட்டப்பட்ட தயாரிப்புகளை பெல்வத்தை தயாரிக்கும் முதலாவது முயற்சி இதுவல்ல. நீங்கள் வழக்கமாக பெறப்படுகின்றவையாக இருந்த போதிலும், மேம்படுத்தப்பட்டதாகும். சொக்லேட், ஸ்ட்ரோபெரி, வெனிலா போன்ற ஐஸ்கிறீம் தயாரிப்புகளை இதில் குறிப்பிடலாம். மேலும் மிகவும் சிறப்பான இஞ்சி பிஸ்கட், பலுதா, கொகொனட் வித் கார்டமம், பட்டர்ஸ்கொட்ச், ப்ளூபெரி, புருட் அன் நட் ஆகியவற்றுடன் இது இணைகின்றது. இவை அனைத்தும் இரசிகர்களாகச் செய்யும் சுவை மிக்கதாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நாவூறும் வெவ்வேறு சுவைகளாக இவை அமைகின்றன.

பரந்த சந்தை ஆராய்ச்சியின் அடிப்படையில், வெண்ணெய் காரம் மற்றும் உவர்ப்புத்தன்மையின் சிறந்த உச்ச சுவையை அனுபவிப்பவர்களுக்காக ஒரு புதிய வெண்ணெயை சந்தைக்கு அறிமுகப்படுத்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. பெல்வத்தையின் ஏற்கனவே உள்ள கிரீம் போன்ற, சுவையான வெண்ணெய்க்கு, மிகச் சுவையான மிளகாயைச் சேர்த்து தயாரிக்கப்படும் சில்லி பட்டர், உணவில் ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கும் நுகர்வோருக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அது மாத்திரமன்றி, பெல்வத்தை அதன் நெய் தயாரிப்பை 500 கிராம் தகரத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது பல்வேறு சர்வதேச தரப்படுத்தல் முறைகளை பின்பற்றி உற்பத்தி செய்யப்படுவதால்,  உலகின் சிறந்த உயர்வகை கொழுப்பு பால் பொருட்களில் ஒன்றாக இது அமைகின்றது.

இனிப்போ, காரமோ அனைவருக்குமான சுவையை பெல்வத்தை கொண்டுள்ளது. அதனால்தான் இந்த வர்த்தகநாமத்திற்கு பல அபிமானிகளும் ஆதரவாளர்களும் உள்ளனர். பெல்வத்தையின் தன்னிறைவடைதல் எனும் நோக்கத்தின் பின்னணியில் உள்ள உந்துசக்தியும் இதுவேயாகும். பெல்வத்தை, பால் பொருட்களை மாத்திரமல்லாமல், அனைவரின் வெவ்வேறு இரசனைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம், ஒரு தொழில்துறை முன்னோடியாகவும், ஏனைய வர்த்தகநாமங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறது.

ஒரு நம்பகமான உள்நாட்டு பால் உற்பத்தியாளர் எனும் வகையில் தங்கள் தயாரிப்பின் தரம் மிகவும் உயர்ந்ததாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட அதிக புத்துணர்ச்சியுடனும் இருப்பதை பெல்வத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றது. பெல்வத்தை எப்போதும் பால் பண்ணை நுழைவாயிலில் இருந்து சில்லறை விற்பனை நிலையத்தின் இறாக்கைகளுக்கு 48 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் சென்றடைவதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. இதனை இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தகநாமங்களிடமிருந்து பெற முடியாது. உள்நாட்டில் இருந்து பெறப்பட்டாலும், ஏனைய காரணிகளின் செலவு அதிகரிப்பு காரணமாக விநியோகம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன என்பது ஒரு தெளிவான உண்மையாகும். ஆயினும், இந்த அனைத்து சவால்களுக்கும் மத்தியிலும், தனது தரம் மற்றும் தான் வழங்கும் சேவையில் எந்தவொரு குறையும் ஏற்படாது என்று பெல்வத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *