மின் வெட்டு மற்றும் எரிபொருள் இன்மைக்கு Hayleys Solar தீர்வு: ‘Energynet’

இலங்கையில் நிலவும் மின்வெட்டை எதிர்த்துப் போராடுவதற்காக, மின்கல சேமிப்பு வசதியுடன் கூடிய off grid/ hybrid சூரிய மின்கல தொகுதியான ‘Energynet’ யினை Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பிரிவான Hayleys Solar அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சந்தையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான நிபுணத்துவத்துடன், Hayleys Solar நாடு முழுவதும் 75 மெகாவாட் இற்கும் அதிகமான சூரிய மின்கலத் தொகுதிகளை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இது இலங்கையில் ஒரு பொறியியல், கொள்வனவு மற்றும் கட்டுமான (EPC) நிறுவனம் எனும் வகையில், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

On-grid சூரிய மின்கல தீர்வுகளிலுள்ள ஒரு முக்கிய பிரச்சினை யாதெனில், மின்வெட்டு ஏற்படும்போது சூரிய மின்கலத் தொகுதி தானாகவே அணைந்து, பகலில் உருவாக்கக்கூடிய சூரிய சக்தி வீணடிக்கப்படுகிறது. Energynet தீர்வு மூலம், மின்சாரத் தடையின் போது சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினை தடுக்கப்படுகிறது. மின்கலத்தில் சேமிக்கப்படும் சக்தி காரணமாக, இரவு நேர மின்வெட்டுக்கும் இது தீர்வை வழங்குகிறது.

பிரதான கட்டமைப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் தங்கியிருக்காமல், பகலில் இத்தொகுதி மூலம் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தியை சேமிக்கவும் பயன்படுத்தவும் முடியும் என்பதுடன், எல்லா நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை இது உறுதி செய்கிறது. சூரிய மின்கல தொகுதியானது, பகல் நேரத்தில் மின்கலங்களை சார்ஜ் செய்து, மின்சாரத் தடை ஏற்படும் போது அவற்றை வெளியிடுகிறது. Energynet ஆனது, மின் விளக்குகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள் போன்ற பெரும் மின்சக்தி தேவைளை பூர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டது. வாடிக்கையாளர்கள் விரும்பினால், தொகுதியின் அளவீட்டின் அடிப்படையில், வாயுச்சீராக்கிகள் (A/C) மற்றும் நீர்ப் பம்பிகள் போன்ற அதிக மின்சக்தி பயன்பாட்டு உபகரணங்களை இயக்குவதற்கு ஏற்ற வகையில் அவற்றை பயன்டுத்த முடியும்.

Energynet ஆனது, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன், சத்தம் ஏற்படுத்தாத, சூழலுக்கு உகந்த தீர்வாகும். இதற்கு எரிபொருள் அல்லது எரிவாயு தேவைப்படாது என்பதோடு, செயற்பாட்டுக்கான செலவு மற்றும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் தொந்தரவுகள் அற்றதாகும். Energynet ஆனது,  மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு அவசியமான எரிபொருளை பல்வேறு பாத்திரங்களில் சேமித்து வைப்பதால் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.

Energynet தீர்வு ஆனது, இன்வெர்ட்டர்கள் 0.5kW முதல் 5kW வரையிலான single-phase அலகுகள் வரை, சூரிய மின்கல அடுக்கு, மின்கலம், பிரதான கட்டமைப்பு ஆகிய 3 சக்தி மூலங்களில் ஒன்றிலிருந்து செயற்படுத்த முடியும். Energynet மின்கலத் தொகுதி (LiFePO4) ஆனது, 1.2kWh முதல் 10.24kWh வரையிலான, சீனாவை தளமாகக் கொண்ட முன்னணி மின்கல உற்பத்தியாளர்களான BYD/CATL நிறுவன மின்கல அடுக்குகளை கொண்டுள்ளது, இம்மின்கலங்களின் ஆயுட்காலம் 3,000 மின்கல சுழற்சிகளுக்கு (மின்னேற்றம்/ மின்னிறக்கம்) மேற்பட்ட பாவனையைக் கொண்டதாகும். அதாவது, ஒரு நாளைக்கு ஒரு தடவை முழுமையாக பயன்படுத்தினால் சுமார் 8 வருடங்கள் வரையும், ஒரு நாளைக்கு இரண்டு முறை முழுமையாக பயன்படுத்தினால் 4 வருடங்கள் வரையுமான பாவனையை வழங்கும்.

நாட்டின் தற்போதைய சவாலான காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் Hayleys Solar ஆனது, முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து, கடனட்டை மூலம் வட்டியற்ற 12 முதல் 60 மாதங்கள் வரையிலான இலகு தவணை மீள் செலுத்தும் கொள்வனவுத் திட்டங்களை வழங்குகின்றது.

ஏற்கனவே சூரிய மின்கல தொகுதிகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள், Energynet தீர்வை (இன்வெர்ட்டர் மற்றும் மின்கலத்தை மாத்திரம்) தங்களது தொகுதிகளுடன் இணைத்து, பிரதான மின்கட்டமைப்பிலிருந்து அதனை நேரடியாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். சூரிய மின்சக்தி தொடர்பில் புதிய வாடிக்கையாளர்கள் Energynet தீர்வுடன், சூரிய மின்கல தொகுதிகளை நிறுவலாம். அல்லது பிரதான மின்கட்டமைப்பு மூலம் அதனை சார்ஜ் செய்யலாம் என்பதால் Energynet யினை தனியான தீர்வாக (சூரிய மின்கலம் இன்றி) பயன்படுத்தலாம். இவ்வாறான சௌகரியமான தெரிவு காரணமாக, Energynet ஆனது, அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கும் ஒரு சாத்தியமான சிறந்த தீர்வாக அமைகிறது.

Fentons Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக இது தொடர்பில் தெரிவிக்கையில், “நாட்டில் நிலவும் சவாலான சூழ்நிலைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதால், நடைமுறை ரீதியானதும், மாற்று புதுப்பிக்கத்தக்க சக்தி தீர்வுகளை ஊக்குவிப்பதும் மிகவும் அவசியமாகும். திறனான சக்தி தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் ஒரு பொறுப்புள்ள நிறுவனம் எனும் வகையில், நுகர்வோரின் வாழ்க்கை, அவர்களது செயற்பாடுகள் மற்றும் உற்பத்தித்திறனை நிலையாக பேண உதவுவதற்காக Energynet யினை அறிமுகப்படுத்தியுள்ளோம். நிறுவனங்களின் கிளை வலையமைப்புகள், அலுவலகங்கள், கடைத் தொகுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட சந்தைகளுக்கு அவசியமான பல்வேறு மின்சக்தி தேவைகளை, எமது பரந்த அளவிலான தீர்வுகள் பூர்த்தி செய்கின்றன. இந்த தீர்வுகள், மென்பொருள் மற்றும் IT சார்ந்த நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும். அந்நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு Energynet யினை கொள்வனவு செய்ய உதவ முடியும். இதன் மூலம் ஊழியர்கள் மின்சாரத் தடையின்றி வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

Hayleys Solar நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஷேன் பெரேரா தெரிவிக்கையில், “நாம் 200 இற்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த BSc பட்டதாரி பொறியியலாளர்கள் மற்றும் ஆற்றல் மிக்க, விடாமுயற்சி கொண்ட இளம் குழுவினரை கொண்டு உயர் தரத்தை பேணியவாறு செயற்படுகிறோம். நாட்டின் அதிகரித்து வரும் மின்சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட தீர்வுகளை உருவாக்க நாம் முயற்சி செய்து வருகிறோம். தற்போதைய மின்வெட்டு மற்றும் எரிபொருள் கிடைக்காமை போன்றவற்றிற்கு Energynet ஒரு சிறந்த தீர்வாகும். இது மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை தடையின்றி தொடர தேவையான முக்கிய உபகரணங்களை இயக்குவதற்கு வாய்ப்பளிக்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *