சிங்கர் முழு அளவிலான Dahua கண்காணிப்பு தொகுதிக்கான தனித்துவமான காட்சியறையை திறந்து வைத்துள்ளது

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டின் முதன்மையான நிறுவனமான சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி, Dahua இன் அதிநவீன கண்காணிப்புத் தொகுதி  தயாரிப்பு வரிசை மற்றும் ஸ்மார்ட் தீர்வுகளைக் கொண்டுள்ள முதன்முதல் முழுமையான, தனித்துவமான Dahua காட்சியறையை அண்மையில் திறந்து வைத்துள்ளது. புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள தனித்துவமான காட்சியறையின் வணிகக் கூட்டாளராக Real Vision Pvt (Ltd) நிறுவனம் சிங்கருடன் கைகோர்த்துள்ளது.

இல. 120, காலி வீதி, கொழும்பு 04 என்ற முகவரியில் அமைந்துள்ள புதிய தனித்துவமான காட்சியறையில், உயர்தர பாதுகாப்பு, கண்காணிப்பு தயாரிப்புகள் மற்றும் ஸ்மார்ட் தீர்வுகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான தெரிவுகளை வழங்கும் Dahua தொழில்நுட்ப தயாரிப்புகள் பரந்த அளவில் கிடைக்கப்பெறுகின்றன. Dahua இன் அதிநவீன தயாரிப்புகளான ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள், செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகள், வயர்லஸ் (கம்பியில்லா) கேமரா தீர்வுகள், வீடியோ வோல் (Video Wall) மற்றும் மத்தியமயமாக்கப்பட்ட தீர்வுகள் போன்றவற்றைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. இத்தனித்துவமான காட்சியறையில் உள்ள Dahua சேவை அணி, தயாரிப்பு தொடர்பான பிரவுசிங், தயாரிப்பு தொடர்பான அறிவு, தயாரிப்பு தொடர்பான பரிந்துரைகள் மற்றும் தொழில்நுட்பரீதியான உதவி ஆகியவற்றின் அடிப்படையில் ஈடுஇணையற்ற வாடிக்கையாளர் உதவி சேவைகளை வழங்குகிறது.

புதிய Dahua தனித்துவமான காட்சியறையைத் திறந்து வைத்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்த சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி இன் குழும தலைமை நிர்வாக அதிகாரியான மகேஷ் விஜேவர்தன அவர்கள் “எங்கள் வணிக கூட்டாளரான Real Vision Pvt (Ltd) உடன் இணைந்து இந்த புத்தாக்கமான தனித்துவமான காட்சியறையின் மூலம் உண்மையான உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். விசாலமான இடவசதி கொண்ட சூழல் மற்றும் பிரத்தியேகமான உதவி சேவை அணி வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமங்களும் இல்லாமல் தயாரிப்புகள் தொடர்பில் அறிந்துகொள்ள உதவுகின்றன. Dahua உடனான சிங்கரின் கூட்டாண்மை இதுவரை மிகவும் பலனளிக்கும் ஒன்றாக அமைந்துள்ள நிலையில், இந்த அறிமுகத்தின் மூலம் அதனுடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.  

சிங்கர் 2019 ஆம் ஆண்டு முதல் உலகப் புகழ்பெற்ற Dahua CCTV மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்ப வர்த்தகநாமத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் ஆக செயற்பட்டு வந்துள்ளது. Dahua மிகவும் குறுகிய காலத்தில் இலங்கையில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் CCTV வர்த்தகநாமமாக மாறியது. ஒன்றரை ஆண்டுகளில் Dahua வர்த்தகநாமத்திற்கான குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கினை சிங்கர் சம்பாதித்துள்ளது. சிங்கரின் வலுவான விநியோக வலையமைப்பு, அதன் நம்பகமான சேவைத் திறனின் பக்கபலத்துடன், Dahua தயாரிப்புகளை இலங்கையில் பரந்த அளவிலான மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவியுள்ளது.

முற்றும்

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *