இலங்கையின் புதிய நகரத்திற்கு நுழைவதற்கான கதவுகளைத் திறக்கும் Granbell Hotel Colombo

Granbell Hotel Colombo (கிரான்பெல் ஹோட்டல் கொழும்பு) சமீபத்தில் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் விருந்தோம்பலின் கலவையை அனுபவிக்க அனைவரையும் அன்புடன் அது வரவேற்கின்றது. இந்த ஹோட்டல், டோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான Belluna Co. Ltd எனும் முன்னணி ஜப்பானிய நிறுவனத்திற்குச் சொந்தமானதும் அந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றதுமான சொத்தாகும். Granbell Hotel Colombo ஆனது, Belluna.Co.Ltd நிறுவனத்திற்கு சொந்தமானதும் அதனால் நிர்வகிக்கப்படுகின்றதுமான உலகெங்கிலும் உள்ள அதன் வளர்ந்து வரும் சொத்துகளில் மற்றுமொரு சொத்தாகும். இந்த ஹோட்டல் சங்கிலியில், ஜப்பானில் 17, ஹவாயில் 01, மாலைதீவில் 01, இலங்கையில் 02 சொத்துகள் உள்ளன.

ஹோட்டல் திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) மற்றும் Belluna.Co.Ltd நிறுவனத்தின் தலைவர் கியோஷி யசுனோ (Kiyoshi Yasuno) உள்ளிட்ட பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான 70 வருடங்களுக்கும் மேலான நீண்டகால நட்புறவின் அடிப்படையில் இந்த ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 60 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டின் மூலம் 2016இல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜப்பானின் Hazama Ando Corporation  மூலம் இதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, ஜப்பானிய கட்டடக்கலை மற்றும் இலங்கையின் கைவினைத்திறன் ஆகியவற்றை இணைத்து மிக உயர்ந்த நிர்மாணத் தரங்களுக்கு இணங்க இது கட்டி முடிக்கப்பட்டது.

இன்று, இந்த ஹோட்டல் இலங்கையிலுள்ள அதிக எண்ணிக்கையிலானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் மூலம் கொவிட் தொற்றுக்குப் பின்னரான தற்போதைய நிலையில், நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு மேலும் வலுச் சேர்க்கிறது. இந்த ஹோட்டல், உயர்தர ஜப்பானிய சேவைத் தரங்களையும், உரிய கிரமமான செயற்பாடுகள் மூலம் கடுமையான செயற்றிறனுடன் சேவைகள் மேற்கொள்ளப்படுவதனையும் உறுதி செய்கின்றது.

திறந்தவெளி முற்றங்களுடன் நிலைபேண்தகு வடிவமைப்பு கருத்தாழங்களுடன் வடிவமைக்கப்பட்டு, அற்புதமான வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கும், Granbell Hotel Colombo ஆனது, கொழும்பின் மையத்தில் உள்ள கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. ஹோட்டலின் கட்டட உச்சியில் அமைந்துள்ள முடிவிலி வடிவ நீச்சல் தடாகம் மற்றும் ஜிம்னாசியம், ஸ்பா, யோகா, நடன கூடம் மற்றும் நாள் முழுவதும் உணவருந்தக் கூடிய உணவகம் ஆகியன காணப்படுகின்றன. இந்த ஹோட்டல் இலங்கை மற்றும் ஜப்பானிய வடிவமைப்புகளின் கலவையைக் கொண்டுள்ளதோடு, கடற்கரைச் சூழல்கள் மற்றும் அழகிய தோற்றங்களுடன் இணைந்த நேர்த்தியான உட்புற தோற்றங்கள் ஆகியன ஒரு தீவொன்றிற்கான பயண அனுபவத்தை வழங்குகின்றன.

இந்நிகழ்வில் Belluna Co. Ltd நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கியோஷி யசுனோ கருத்துத் தெரிவிக்கையில், “Granbell Hotel Colombo ஆனது, இலங்கைக்கு புதிய நகர தோற்றத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்த விருந்தோம்பல் துறைக்கு புத்துயிரளிப்பதாகவும் உள்ளது. இலங்கையில் கணிசமான முதலீட்டு வாய்ப்புகளை அளிக்க இந்த ஹோட்டல் வாய்ப்பளிப்பதுடன், இது விருந்தோம்பல் தொழில் சந்தையில் உள்ள வாய்ப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தும்” என்றார்.

ஹோட்டலின் ஒவ்வொரு பிரிவினதும் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் இலங்கையர்களாக இருக்கும் அதே வேளையில், ஹோட்டல் ஆனது இரண்டு கலாசாரங்களின் உண்மையான கலவையை வழங்கும் வகையில், அதன் பொது முகாமையாளர் மற்றும் பிரதம சமையல்கலை நிபுணர் ஆகியோர் ஜப்பானிய நிபுணத்துவத்தை கொண்டவர்களாக உள்ளனர்.

Granbell Hotel Colombo ஆனது, ஐரோப்பிய, இந்திய, மத்திய கிழக்கு சந்தைகள் போன்ற முக்கிய சந்தைகளில் அதன் தொழிற்துறையை மேம்படுத்தும் வகையில், நிறுவன வாடிக்கையாளர்கள், பயண முகவர்கள், பயண செயற்பாட்டாளர்கள், ஒன்லைன் பயண ஏற்பாட்டாளர்களுடன் வலுவான உறவுகளை பேணி வருகின்றது. சீன மற்றும் தூர-கிழக்கு சந்தை ஆகியன, எதிர்காலத்தில் அதன் கவனமாக இருக்கின்ற அதே வேளையில், உலகளாவிய விநியோக தொகுதி (GDS) ஆனது, உலகெங்கிலும் உள்ள ஏராளமான பயண முகவர்களுடன் அதனை இணைக்கிறது.

granbellhotel.lk இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அல்லது 011 2 397 397 எனும் இலக்கத்தை அழைப்பதன் மூலம் மேலதிக தகவலை பெறுவதோடு, உண்ண, பருகுவதற்கான முன்பதிவுகள் மற்றும் தங்குவதற்கான சலுகைகளையும் பெறலாம்.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *