HUTCH Danumai Miliyanaai வெற்றியாளர்களுக்கு உற்சாகமூட்டும் பணப்பரிசுகள்

நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் கையடக்கத் தொலைபேசி தொடர்பாடல் சேவை தெரிவான HUTCH, அறிவை மேம்படுத்தும் பொது அறிவு கேள்வி பதில் போட்டியான ‘HUTCH Danumai Miliyanaai’ போட்டியின் 27ஆவது பருவத்தின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், கொழும்பில் உள்ள HUTCH தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வெற்றியாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய, இதில் முதலாம் பரிசை அத்துருகிரியவைச் சேர்ந்த கே.எல்.எஸ். குமார பெற்றுக் கொண்டதோடு, 2ஆம் பரிசை சீதுவையைச் சேர்ந்த ஏ.ஏ.எம்.சி. பிரேமலாலும், 3ஆம் பரிசை புத்தலவைச் சேர்ந்த ஜி.எச்.எஸ்.ஏ. சாந்தவும் பெற்றுக் கொண்டனர்.

HUTCH Danumai Miliyanai ஆனது, மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் முன்னணி வழங்குநரும் hSenid hSenid Software International யின் துணை நிறுவனமுமான Beyond M உடன் இணைந்து HUTCH ஏற்பாடு செய்திருந்த போட்டியாகும்.  Beyond M நிறுவனம் குறித்த போட்டிக்கான கேள்வி பதில்களை வழங்கும் தளத்திற்கான சேவை வழங்குநராக செயற்பட்டது. ஆறு மாத காலமாக இடம்பெற்ற இப்போட்டி, வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி, இணையம், Danumai Miliyanayai எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பங்குபற்றும் வகையில் அமைந்திருந்தது.

நாளொன்றுக்கு 5 ரூபாய் எனும் குறைந்த தொகையில், பதிவுசெய்து போட்டியில் எவரும் பங்கேற்க முடியும். போட்டியாளர்கள் இங்கு கேட்கப்படும் போனஸ் கேள்விகளுக்கும் பதிலளிப்பதன் மூலம் தங்கள் புள்ளிகளை அதிகரிக்க முடியும் என்பதுடன், அதற்காக அவர்களுக்கு மேலதிக புள்ளிகளும் வழங்கப்படும்.

HUTCH Danumai Miliyanaai போட்டியானது ஒவ்வொரு போட்டியாளருக்கும் சம வெற்றி வாய்ப்புகளுடன், அதிக வெகுமதிகளை வழங்குகின்றது. போட்டியாளர்கள் WIN என டைப் செய்து 6633 எனும் இலக்கத்திற்கு SMS ஒன்றை அனுப்புவதன் மூலமோ அல்லது play store யில் உள்ள Danumai Miliyanayai எனும் செயலியைப் பதிவிறக்குவதன் மூலமோ போட்டிக்காக பதிவு செய்யலாம். 6 மாதங்களின் முடிவில், 3 வெற்றியாளர்கள் குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதுடன், இங்கு அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் மாத்திரமே குலுக்கலுக்கு தகுதி பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *