2021 வருடாந்த அறிக்கையை வெளியிட்ட Huawei; திடமான செயல்பாடுகள், எதிர்காலத்திற்கான முதலீடு

Huawei தனது 2021 வருடாந்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. குறித்த அறிக்கைக்கு அமைய, கடந்த வருடம் முழுவதும் நிறுவனம் உறுதியான செயற்பாடுகளை பேணி வந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2021 இல் 636.8 பில்லியன் சீன யுவான் (CNY) வருவாயையும், 75.9% வருடாந்த அதிகரிப்புடன் 113.7 பில்லியன் யுவான் நிகர இலாபத்தையும் Huawei பெற்றுள்ளது. நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் (R&D) செலவு 2021 இல் 142.7 பில்லியன் யுவானை எட்டியுள்ளது. இது அதன் மொத்த வருமானத்தில் 22.4% ஆகும். இதன் மூலம் கடந்த 10 வருடங்களில் அதன் மொத்த R&D இற்கான செலவீனம் 845 பில்லியன் யுவானை அடைந்துள்ளது. அந்த வகையில் தொடர்ந்தும் முன்னோக்கிய பாதையில் பயணித்து வரும் நிறுவனம் R&D முதலீட்டை தொடர்ந்தும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

Huawei இன் சுழற்சித் தலைவர் Guo Ping இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில், “ஒட்டுமொத்தமாக பார்ப்போமானால், எமது செயற்றிறன் எதிர்பார்த்த முன்னறிவிப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. எமது தொலைபேசி வலையமைப்பு தொடர்பான வணிகம் நிலையானதாக அமைந்திருந்தது. நிறுவன ரீதியான எமது வணிகம் உறுதியான வளர்ச்சியை அடைந்துள்ளதுடன், எமது நுகர்வோர் வணிகம் புதிய பிரிவுகளில் விரைவாக விரிவடைந்துள்ளது. அது மாத்திரமன்றி, எமது வலையமைப்புத் தொகுதியின் வளர்ச்சியில் வேகமான பாதையில் நாம் ஈடுபட்டுள்ளோம்.” என்றார்.

Huawei இன் CFO, Meng Wanzhou இதன்போது தெரிவிக்கையில், “2021 இல் வருமானம் குறைவாக இருந்த போதிலும், இலாபம் ஈட்டும் மற்றும் பணப்புழக்கங்களை உருவாக்கும் எமது திறன் அதிகரித்து வருகிறது. அத்துடன் நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதில் நாம் அதிக திறனைக் கொண்டுள்ளோம்.” என்றார். நிறுவனத்தின் முக்கிய வணிகங்களின் மேம்பட்ட இலாபத்தின் காரணமாக இதனை அடைய முடிந்துள்ளது. நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து பணப்புழக்கமானது 2021 இல் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இது 59.7 பில்லியன் யுவானாக பதிவாகியுள்ளது. அதன் பொறுப்பு விகிதமும் 57.8% ஆகக் குறைந்வடைதுள்ளதுடன், அதன் ஒட்டுமொத்த நிதிக் கட்டமைப்பு மீளெழுச்சியை கொண்டதாகவும் மிகவும் நெகிழ்வானதாகவும் மாறியுள்ளது.

2021 ஆம் ஆண்டில், Huawei இன் வலையமைப்பு வணிகமானது 281.5 பில்லியன் யுவான் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன் உலகெங்கிலும் உள்ள வலையமைப்புகள், முன்னணி 5G வலையமைப்புகளை நிறுவ Huawei உதவியுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பின்லாந்து, நெதர்லாந்து, தென் கொரியா, சவூதி அரேபியா உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Huawei யின் உதவியுடன் நிறுவப்பட்ட 5G வலையமைப்புகள் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதாக, மூன்றாம் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

Huawei இன் நுகர்வோர் வணிகமானது, நுகர்வோர் தேவைகள் மற்றும் அவசியங்களை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. அத்துடன், உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு, நிறுவனத்தின் தடையற்ற AI வாழ்க்கை மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய வலையமைப்புத் தொகுதியை ஒரு ஸ்மார்ட்டான, அனைத்தும் இணைக்கப்பட்ட சகாப்தத்தை நோக்கியதாக உருவாக்கியுள்ளது. நுகர்வோர் வணிகமானது 2021 ஆம் ஆண்டில் 243.4 பில்லியன் யுவான் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், ஸ்மார்ட் அணிகலன்கள், ஸ்மார்ட் ஸ்கிரீன்கள்,  True Wireless Stereo (TWS) Earbud, Huawei மொபைல் சேவைகள் (HMS) ஆகியவற்றில் உறுதியான விற்பனை வளர்ச்சியை நிறுவனம் தொடர்ந்து பேணி வந்துள்ளது.

2021 வருடாந்த அறிக்கையில் உள்ள அனைத்து நிதிநிலை அறிக்கைகளும் சர்வதேச Big Four கணக்கியல் நிறுவனமான KPMG இனால் சுயாதீனமாக கணக்காய்வு செய்யப்பட்டுள்ளன. Huawei 2021 வருடாந்த அறிக்கையைப் பதிவிறக்க பின்வரும் இணையத்தளத்திற்கு செல்லவும்: https://www.huawei.com/en/annual-report/2021 

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *