MRI களத்தில் அதிக சந்தை இருப்புடன் இலங்கையின் சுகாதாரத் துறையை மேலும் பலப்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO நிறுவனம், உள்நாட்டு சுகாதாரத் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தும் முயற்சிக்கு அமைய, அதன் நீண்டகால பங்காளியான உலகளாவிய மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான, Siemens Healthineers உடன்  இணைந்து நாட்டின் Magnetic Resonance Imaging (MRI scanners) பிரிவில் மிக உயர்ந்த சந்தை இருப்பைப் பெற்றுள்ளது. இந்த அதிக சந்தை இருப்பின் மூலம் இலங்கையின் சுகாதார நிபுணர்களுக்கு நோயறிதலை மேலும் இலகுவாக்குகிறது.

தனியார் மற்றும் அரச துறைகளை உள்ளடக்கிய MRI பிரிவில், சுமார் 41% சந்தைப் பங்கை DIMO பெற்றுள்ளது. நாடு முழுவதும் DIMO வினால் நிறுவப்பட்ட அனைத்து Siemens Healthineers MRI ஸ்கேனர்களாலும், வருடாந்தம் 56,160 ஸ்கேன்கள் மேற்கொள்ளப்படுகின்றன. DIMO வழங்கும் Siemens Healthineers MRI ஸ்கேனர்கள், சிறந்த புகைப்படத் தரம், செயற்றிறன், வேகமான செயற்பாடு, நோயாளிக்கு உகந்த வசதி ஆகியவற்றை வழங்குவதில் புகழ் பெற்றவையாக விளங்குகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் அதன் அனைத்து நிறுவல்களுக்கும், இணையற்ற 24 மணிநேர விற்பனைக்குப் பிந்தைய சேவையையும் DIMO வழங்குகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை (NHSL), லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலை, நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலை மற்றும் Durdans Hospital, Lanka Hospitals PLC, Nawaloka Hospitals PLC, Northern Central (Pvt) Hospital  உள்ளிட்ட பல்வேறு தனியார் துறை வைத்தியசாலைகள் போன்றவற்றிலும் DIMO வழங்கும் Siemens Healthineers MRI ஸ்கேனர்கள் நிறுவப்பட்டுள்ளன.

DIMO குழுமத்தின் மருத்துவ பொறியியல் வணிகத்தை மேற்பார்வையிடும் DIMO நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “அரசாங்க மற்றும் தனியார் ஆகிய இரு துறை சுகாதார சேவை வழங்குநர்களும் தங்களது சேவைத் தரத்தை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதில் ஆர்வமாக உள்ளனர். நாடு முழுவதும் பொதுச் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் இருந்து அதிக கோரிக்கை வருவதை அவதானிக்கிறோம். உள்ளூர் MRI துறையைப் பொறுத்தவரை, அரசாங்கம் வருடாந்தம் 3 முதல் 4 MRI ஸ்கேனர்களைப் பெற திட்டமிட்டுள்ளதுடன், தனியார் துறையின் வருடாந்த தேவை சுமார் 3 ஸ்கேனர்கள் ஆக அமைகின்றது. நாம் சேவை வழங்கும் அனைத்து சமூகங்களுக்கும் ‘கனவுகள் மற்றும் அபிலாஷைகளை பூர்த்தி செய்தல்’ எனும் DIMO வின் நோக்கத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரப் பாதுகாப்புத் துறையை மேம்படுத்தும் செயற்பாட்டிற்கு உதவ முடிந்ததில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.

DIMO வின் மருத்துவ பொறியியல் வணிகமானது, அதன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்தும் முக்கிய வேறுபாடுகளாக பின்வரும் விடயங்களைக் குறிப்பிடலாம். DIMO வின் சொந்த தொழிற்சாலையில் பயிற்றுவிக்கப்பட்ட உயிரியல் மருத்துவ பொறியியலாளர்களால் அனைத்து மாதிரிகளுக்குமான சேவைகள் கிடைத்தல் மற்றும் மிக முக்கியமாக, தாய் நிறுவனத்தால் வழங்கப்படும் பயிற்சியின் மூலம் அவர்கள் தொடர்ந்தும் அனைத்து சமீபத்திய தொழில்நுட்பங்கள் தொடர்பான அறிவைப் பெற்றிருக்கின்றனர். அத்துடன் இவ்வாறான விடயங்கள் மூலம் தாய் நிறுவனத்தின் நேரடி பிரசன்னம் இல்லாமல் அவர்களால் ஒவ்வொரு ஸ்கேனர்களின் நிறுவலையும் மேற்கொள்ள முடிகின்றது. உலகளாவிய நிபுணத்துவம் உள்நாட்டிலும் கிடைப்பதால், ஏதேனும் சிக்கல்களைச் சரிசெய்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமும் மிகக் குறைவாக இருப்பதால், இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூடுதல் நன்மையுமாகும்.

DIMO சுகாதார தீர்வுகள் பொது முகாமையாளர் பிரியந்த திஸாநாயக்க கருத்து வெளியிடுகையில், “எமது விற்பனைக்குப் பிந்தைய சேவை யுக்தியானது, இந்த இயந்திரங்களின் சீரான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வழக்கமான திருத்த சேவை மற்றும் பராமரிப்பு பணியாளர்களின் வருகையை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. எமது உலகளாவிய பங்குதாரரான Siemens Healthineers, இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதில் மகத்தான ஆதரவை வழங்கி வருகின்றது. அவர்களின் வேகமான 24 மணி நேர உதிரிப் பாகங்கள் அனுப்பும் சேவையானது, இத்தொழில்துறையில் DIMO விற்கு போட்டித்தன்மையை உருவாக்கும் ஒரு காரணியாக விளங்குகிறது. Siemens Healthineers வழங்கும் பயிற்சி மற்றும் மேம்படுத்தல் உதவிகள் மூலம், உள்நாட்டு சுகாதாரத் துறைக்கு உலகத் தரம் வாய்ந்த சேவையை வழங்குவது தொடர்பான அதன் முதன்மையான கவனமாக விளங்குகின்றது. இதன் விளைவாக, குறைந்தபட்சம் ஒரு தசாப்த கால அனுபவத்துடன் கூடிய, தொழிற்சாலையிலிருந்து பயிற்சி பெற்ற அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வல்லுனர்களை DIMO கொண்டுள்ளது.”  என்றார்.

End 

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *