Panasonic இலங்கையில் தனது விநியோகத்தை விரிவுபடுத்த சிங்கர் உடன் கைக்கோர்த்துள்ளது

இலங்கையின் மிகப் பெரிய நுகர்வோர் சில்லறை விற்பனையாளரான சிங்கர் நிறுவனமானது பிரபல ஜப்பானிய வர்த்தக நாமமான Panasonic உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் Panasonic தயாரிப்புக்களான மின்சார மற்றும் வீட்டுப்பாவனை தயாரிப்புக்கள் உள்ளிட்ட குளிரூட்டிகள், தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், தனிநபர் பராமரிப்பு, ஆடியோ, மின்விசிறிகள், மைக்ரோ அவன்கள், சுடுநீர் சவர் மற்றும் தூசி அகற்றி (வெக்கும் கிளினர்) போன்றவற்றை நாடளாவிய ரீதியில் உள்ள சிங்கர் காட்சியறைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

Panasonic நிறுவனத்துடனான கூட்டிணைவு குறித்து சிங்கர் இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,

“Panasonic உடன் விரிவான கூட்டாண்மை உடன்படிக்கை செய்துகொண்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் நுகர்வோருக்கு சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த உலகளாவிய பொருட்கொள்வனவு அனுபவத்தை வழங்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு சிங்கரின் நம்பிக்கையுடன் சிறப்பாக உள்ளது. Panasonic உடன் கூட்டிணைவதன் முக்கியத்துவம் என்னவென்றால், நுகர்வோருக்கு முழு அளவிலான Panasonic தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். அது அவர்களின் வர்த்தக நாம பிரசன்னத்தை மேம்படுத்த உதவும்

இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான Panasonic இன் தலைமை நிறைவேற்று அதிகாரி மனிஷ் ஷர்மா சிங்கர் உடனான இந்த கூட்டிணைவு குறித்து கருத்து தெரிவிக்கையில்,

சிங்கர் உடனான கூட்டிணைவு குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் தயாரிப்புகள் வசதி, சௌகரியம், நீடித்து நிலைப்பு மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றுடன் நுகர்வோருக்கு ‘சிறந்த வாழ்க்கை’ மற்றும் சிறந்த உலகளாவிய பொருட் கொள்வனவு அனுபவத்தை வழங்குகிறது. இந்த பங்காளித்துவத்தின் ஊடாக, இலங்கையில் எமது வர்த்தக நாம பிரசன்னத்தை வலுப்படுத்தவும், எமது புவியியல் எல்லையை விரிவுப்படுத்தவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

சிங்கர் 140 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன் நாடு முழுவதும் 430 சில்லறை விற்பனை நிலையங்களுடன் விநியோக வலையமைப்பை கொண்டுள்ளது. நம்பகமான உத்தரவாதம் மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவையுடன் இலங்கை முழுவதும் ஈடு இணையற்ற பிரசன்னத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. Panasonic வர்த்தக நாமம் 1955 ஆம் ஆண்டுக்கு முந்தையது மற்றும் அப்போது ஆடியோ ஸ்பீக்கர்களுக்கு நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமமாக இருந்தது. Panasonic ஒரு சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த உலகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கும் உலகெங்கிலும் உள்ள மக்களின் மகிழ்ச்சிக்கும் தொடர்ந்து பங்களிக்கிறது.

இந்த கூட்டிணைவின் மூலம், வாடிக்கையாளர்கள் இப்போது சிங்கர் உத்தரவாதத்தின் ஆதரவுடன் Panasonic தயாரிப்புகளை வாங்குவதற்கு மிகவும் வசதியாக  நாடு முழுவதும் உள்ள விற்பனை நிலையங்களின் வலையமைப்பு காணப்படுகிறது. அத்தோடு அதிநவீன e-commerce தளமான Singer.lk மூலம் Panasonic தயாரிப்புகளை வாங்க முடியும் என்பதுடன் விற்பனைக்குப் பின்னரான சேவையையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *