இலங்கையில் முதன்முதறையாக இடம்பெற்ற ICT போட்டியில் சிறந்து விளங்கிய இலங்கை பல்கலைக்கழக திறமையாளர்களை கௌரவித்த Huawei

– பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேருக்கு Huawei ICT போட்டி 2021-2022 இல் விருதுகள்

அண்மையில் Huawei ICT Competition 2021-2022 போட்டியில் சிறந்து விளங்கி, தேசிய ரீதியில் வெற்றி பெற்று ‘Connection-Glory-Future’ எனும் பட்டத்தைப் பெற்ற இலங்கைப் பல்கலைக்கழக திறமையாளர்கள் இருபது பேரை Huawei Sri Lanka மற்றும் Sri Lanka Inventors Commission (SLIC) இணைந்து பாராட்டி கௌரவித்துள்ளது. குறித்த இருபது வெற்றியாளர்களும் ஏழு வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒவ்வொரு பிரிவினதும் முதல் பரிசை மொரட்டுவை மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகங்கள் பெற்றுக் கொண்டன. இவ்விருது வழங்கும் நிகழ்வில், திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் கலாநிதி சீதா அரம்பேபொல, இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் என்.எம்.எஸ். சிறிமுத்து, Huawei Sri Lanka பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) Liang Yi, அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் இருந்து வெற்றி பெற்ற மாணவர்கள் இரண்டு அணிகளாக, பிராந்திய மட்டத்தில் இவ்வாண்டு இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, அதில் வெற்றி பெறுவோர் உலகளாவிய ரீதியில் மாபெரும் பரிசுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்பர். Huawei ICT Competition 2021-2022 போட்டியானது, இலங்கையில் போட்டித்தன்மை வாய்ந்த முதலாவது ICT அறிவுப் போட்டியாகும். இது, உலகளாவிய முன்னணி ICT நிறுவனமான Huawei இனால் நடாத்தப்படும் பிராந்திய மற்றும் உலகளாவிய மட்ட போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்குகிறது. இலங்கையில், Huawei ICT போட்டியானது 29 பல்கலைக்கழகங்களில் இருந்து 247 போட்டியாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இது மாணவர்களின் ICT அறிவு மற்றும் நடைமுறை மற்றும் பயன்பாட்டு திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் ICT துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது.

திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் கலாநிதி சீதா ஆரம்பேபொல இதன்போது கருத்து வெளியிடுகையில், “இந்நவீன யுகத்தில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வியின் ஆரம்ப கட்டங்களிலிருந்தே தகவல் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு முக்கியமானதாகும். ஏனெனில் தகவல் தொழில்நுட்பத் துறையானது, நாம் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுடன் இணைந்துள்ளது. இதன் காரணமாக, எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கான தேவையின் பெரும்பகுதி ICT துறையிலேயே உருவாக்கப்படும்.” என்றார்.

Huawei Sri Lanka பிரதான நிறைவேற்று அதிகாரி Liang Yi தெரிவிக்கையில், “முன்னணி ICT தீர்வு வழங்குநர் எனும் வகையில் Huawei Sri Lanka, இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை எதிர்காலத்தில் உறுதிப்படுத்துவதே எமது முன்னுரிமைகளில் ஒன்றாக காணப்படுகிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் திறமையான ICT துறையாளர்களை இலங்கையின் பல்கலைக்கழகங்கள் உருவாக்கி வரும் அதே வேளையில், குறிப்பிட்ட ICT தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருவதை நாம் அவதானிக்கிறோம். எனவே ICT நிறுவனங்களுக்கு அவர்களின் மாற்றத்திற்கான இலக்குகளைத் தொடர்வதற்கு அவசியமான தகுதிவாய்ந்த திறமையாளர்களை பெறுவதை உறுதி செய்வதற்காக, திறன் அபிவிருத்தி தொடர்பில் நாம் தொடர்ந்தும் முதலீடு செய்ய வேண்டும்.” என்றார்.

Huawei இலங்கையில் நிலைபேறான அறிவு சார்ந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதற்காக, Huawei ICT Competition, Seeds For the Future, ICT Academy போன்ற நீண்டகாலத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில், இலங்கையில் இதுவரை பல திறமையான இளைஞர்கள்ஈ மேம்பட்ட திறன் அபிவிருத்தி பாடநெறிகளால் பயனடைந்துள்ளனர். நாட்டில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தேவையான திறன்களை அவர்களுக்கு Huawei வழங்கியுள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *