இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் Huawei

Huawei யின் Digital Power Technologies, அடுத்த தலைமுறை Wi-Fi 6 Series தயாரிப்புகளை உள்ளடக்கிய பெரு நிறுவன தீர்வுகள், சேமிப்பக தீர்வுகள் மற்றும் nova 8i ஆகியன அறிமுகம்

Huawei அண்மையில், Huawei Digital Power ஊடாக Luna2000, அடுத்த தலைமுறை Wi-Fi 6 தொடர் தயாரிப்புகள், சேமிப்பக தீர்வுகள், புதிய IdeaHubs சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் தயாரிப்புகளை உள்ளடக்கிய பெரு நிறுவன வணிகத்திற்கான டிஜிட்டல் தீர்வுகள் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. அது மாத்திரமன்றி nova 8i Smartphone, HUAWEI WATCH GT 3, மடிகணனிகள் மற்றும் கணனத் திரைகள் உள்ளிட்ட நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தக் கூடிய இவ்வாறான பொருட்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது. சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின் உற்பத்தி திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் Huawei Sri Lanka நிர்வாகிகளின் பங்கேற்புடன் கொழும்பு Hilton ஹோட்டலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வுடன் இணைந்ததாக, ஸ்மார்ட் அலுவலகத்திற்கான உற்பத்தித்திறன் கருவியான Huawei யின் 65 அங்குல மற்றும் 86 அங்குல சமீபத்திய IdeaHub Pro & IdeaHub S ஆகியனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவை நுண்ணறிவுடனான எழுதுதல், உச்ச தெளிவுத்திறன் (HD) உடனான வீடியோ கலந்துரையாடல் மற்றும் வயர்லெஸ் வழியிலான பகிர்தல் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. மின்னல் வேகம் மற்றும் மிக நிலையான கவரேஜ், ரோமிங் மற்றும் அனுபவத்துடன் கூடிய புதுமையான AirEngine Wi-Fi 6 தயாரிப்புகள் போன்ற நிறுவன வணிகத் தீர்வுகளானவை, அனைத்து மட்டத்திலான நிறுவனங்களும் ‘100 Mbps@everywhere’ (எங்கும் 100Mbps வேகம்) எனும் அளவில் தொடர்ச்சியான வலையமைப்பு இணைப்பு மற்றும் Huawei OceanStor யினை அடைய உதவுகின்றன. Dorado V6 all-flash சேமிப்பகமானது, சேமிப்பக செயல்திறன் மற்றும் நிறுவனங்களின் முக்கியமான சேவைகளுக்கான நம்பகத்தன்மை போன்றவற்றில் புதிய வரையறைகளை அமைப்பதுடன், ஒரு அவசியமான தரவுச் சேவை அனுபவத்தை வழங்குகிறது.

தயாரிப்பு வெளியீட்டின் மற்றுமொரு சிறப்பம்சமாக, டிஜிட்டல் சக்தி தொடர்பில் Huawei கொண்டுள்ள புதிய அர்ப்பணிப்பு மற்றும் நிலைபேறான வளர்ச்சியில் அது கொண்டுள்ள இலட்சியத்தை குறிப்பிடலாம்.

இந்நிகழ்வில் Huawei Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி Liang Yi கருத்து வெளியிடுகையில், “சூரிய சக்தியானது மலிவான சக்தி மூலங்களில் ஒன்றாகும் என்பதுடன், இலங்கை வலுவான சூரிய வளத்தை கொண்டுள்ளது. Huawei யின் டிஜிட்டல் சக்தி தொழில்நுட்பங்களின் உதவி மற்றும் அறிமுகத்துடன், இந்த புதிய சக்திகளின் செயல்திறனையும் பாதுகாப்பையும் நாம் அதிகரிக்க முடியும். இன்று, நாம் எமது புதிய டிஜிட்டல் தீர்வுகளை இங்கு கொண்டு வந்துள்ளோம். தொழில்துறை மற்றும் எமது பங்காளிகளுக்கு சரியான நேரத்தில் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து, சக்தி தொடர்பான செயல்திறனில் அவர்கள் வெற்றியை அடைவதற்காக, டிஜிட்டல் மயமாக்கலை இதன் மூலம் விரைவுபடுத்த முடியும்.” என்றார்.

நாட்டின் சூரிய சக்தி வளம் தொடர்பிலும், அதன் உயர் திறன்கள் தொடர்பிலும் விளக்கி, இத்தொழில்துறையில் ‘இலங்கையின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக’ இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி குஷான் ஜயசூரிய கருத்து தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு தொழில்துறையாளர் எனும் வகையில், நாம் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வரையறுக்கப்பட்ட சக்தி மூலங்களுடன், புதுப்பிக்கத்தக்க சக்திகள் போட்டியிடுவதை உறுதிசெய்யும் வகையில் தொடர்ச்சியாக அதன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

Huawei யின் சமீபத்திய டிஜிட்டல் சக்தி தயாரிப்பான SMART Energy Storage System யிடமிருந்தான Huawei யின் Luna2000 தயாரிப்பு இதன்போது வெளியிடப்படட்டது. இது நாட்டின் நிலைபேறான சக்தி இலக்குகளை அடைய உதவும் என்பதுடன், ஒரு நிலையான மின் உற்பத்தி கட்டமைப்பை பேண உதவுதல் மற்றும் இரவு நேர உச்ச தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். Huawei, தொழில்துறையில் முன்னணி பாதுகாப்பைக் கொண்ட, முதலாவது ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஸ்மார்ட் PV தீர்வு வழங்கும் நிறுவனம் என்பதில் பெருமை கொள்கிறது. அத்துடன், நிலைபேறான சூழல் தொகுதியை உருவாக்க இலங்கையின் சக்தி துறையுடன் அது கைகோர்த்துள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *