27ஆவது பட்டமளிப்பு விழாவை நடாத்திய Informatics Institute of Technology

பிரிட்டிஷ் உயர் கல்வி மற்றும் உயர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக வளாகத்தின் முன்னோடியான Informatics Institute of Technology (IIT), அதன் 27ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நடாத்தியிருந்தது. இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

பட்டமளிப்பு விழாவில் Bachelor of Engineering (Honours) Software Engineering, Bachelor of Science (Honours) in Computer Science, Bachelor of Science (Honours) in Busines Information Systems, Bachelor of Arts (Honours) in Business Management, Master of Arts in Fashion Business Management, Master of Science in Advanced Software Engineering, Master of Science in Cyber Security and Forensics  போன்ற பல்வேறு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இப்பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் தலைவர் சன்ன டி சில்வா கலந்து கொண்டார். IIT யின் நிர்வாகம் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். இதில் Informatics Group of Companies தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க, Informatics Institute of Technology நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மொஹான் பெனாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அத்துடன், இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் அதன் தலைவருமான Dr. Peter Bonfield இந்நிகழ்வில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் நேரடியாக இணைந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் 407 மாணவர்கள் பட்டம் பெற்றனர். சிறந்த சாதனைகளுக்கான தங்கப் பதக்கம் மற்றும் அனைத்து பிரிவுகளிலும் சிறந்த விழங்கியவர்களுக்கான வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழக விருதுகள் மற்றும் சிறந்த இறுதி ஆண்டு ஆய்வறிக்கைகளுக்கான விருதுகள் ஆகியன Informatics Group of Companies தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.

கல்வியாளர்கள் எப்போதுமே IIT யின் மையப் புள்ளியாக இருந்து வருகின்றனர். இதன் விளைவாக அனைத்து பட்டதாரிகளும் இலங்கையிலும் வெளிநாட்டிலும் அதிக வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடியவர்களாக உள்ளனர். IIT இன் பழைய மாணவர்கள் பலர் தற்போது இலங்கையிலுள்ள பெரு நிறுவனங்களில் முன்னணி பதவிகளை வகிக்கின்றனர் என்பதுடன், மேலும் பலர் முன்னணி சுயதொழிலாளர்களாக மாறியுள்ளனர்.

Informatics Institute of Technology பற்றி:

IIT ஆனது, 1990ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, ICT மற்றும் வணிகத் துறையில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பட்டங்களை வழங்கும் முதலாவது தனியார் உயர்கல்வி நிறுவனமாக அறியப்படுகின்றது. IIT ஆனது ஐக்கிய இராச்சியத்தின் (UK) வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உள்வாரி முதுகலை மற்றும் இளங்கலை பட்டங்களை வழங்குகின்ற, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள வளாகமாகும். உலகத் தரம் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்கி வருவதன் மூலம், பல ஆண்டுகளாக இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளை வலுப்படுத்துவதில் IIT முக்கிய பங்கு வகிக்கிறது. 1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து IIT ஆனது 5,000 பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. அவர்கள் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரந்துபட்டு காணப்படுகின்றனர். இப்பட்டதாரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச பெருநிறுவன மற்றும் அரச நிறுவனங்களில் வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் IT அல்லது வர்த்தக துறைகளில் நிபுணர்களாக மாறியுள்ளனர். பாரிய சந்தைகளைக் கொண்டுள்ள 250 இற்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களை முன்னணியில் திகழச் செய்வதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்னர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *