இலக்கிய மாதத்தில் இலக்கியத்தின் அழகை வெளிச்சம் போட்டுக் காட்ட சந்தஹரித குழுமத்தின் ‘கிரந்தகல்பனா’

இலங்கையில் பசுமை முதலீட்டுத் துறையில் முன்னோடியாளரும், வர்த்தக ரீதியான வனமயமாக்கலில் முன்னணி வகிக்கும் சந்தஹரித பிளாண்டேஷன் லிமிடெட் நிறுவனம், இலக்கிய மாதமான செப்டெம்பரில் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ‘கிரந்தகல்பனா’ எனும் முகநூல் பிரசாரத்தை முன்னெடுத்தது.

செப்டெம்பர் மாதம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இப்பிரசாரம், இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அதன் மூலம் அவர்களின் நாவலை அவர்களின் பேஸ்புக் கணக்கில் பதிவிடுவதன் மூலம் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கி, பெறுமதியான பரிசுகளை வெல்லவும் வாய்ப்பு வழங்கியது.

கொவிட்-19 தொற்றுநோயானது, இலங்கையர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட விடயங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி ஆகியன தங்களுக்குள்ளேயே பல சவால்களை சந்தித்துள்ளன.

Sadaharitha Agarwood ஆனது, உலகளாவிய அகர்பத்தி சந்தையில் இடம்பிடிக்கும் இலங்கையின் வர்த்தக நாமமாகும். வளிமண்டலத்தை ஆழமாக புரிந்து கொண்டு, மக்களின் உறுதியான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூகத்தை வலுவூட்டுவதை மையமாகக் கொண்டு, ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சியாக இப்பிரசாரத்தை அது ஆரம்பித்துள்ளது.

செப்டெம்பர் மாத ஆரம்பத்திலேயே வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வீடியோவை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. குறித்த வீடியோவின் மூலம், படைப்பாற்றல், ஆழமாக அறிந்து ஆராயும் சிந்தனை, அறிவாற்றல், உணர்வு ரீதியான நுண்ணறிவு ஆகியவற்றில் வாசிப்பு ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் விளைவைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான ஈர்ப்பும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வாசிப்பு மாதம் தொடர்பாக இடப்பட்ட பேஸ்புக் இடுகையின் (post) கீழ், தங்களுக்கு விருப்பமான நாவல்கள் மற்றும் புத்தகங்களை பின்னூட்டம் (comment) வழங்கும் ஒரு போட்டியும் அறிவிக்கப்பட்டது. குறித்த பேஸ் பக்கத்தை லைக் செய்து, குறித்த இடுகையையும் லைக் செய்து, அந்த இடுகையைப் பகிர்வதன் மூலம் பங்கேற்பாளர்கள் வாராந்த பரிசை வெல்லும் சுற்றுக்குத் தகுதி பெறுவர்.

இப்பிரசார நடவடிக்கை தொடர்பில் சந்தஹரித குழும நிறுவனங்களின் தலைவர் சதீஸ் நவரத்ன கருத்து தெரிவிக்கையில், “டிஜிட்டல் மயமாக்கல் என்பது இன்று சர்வசாதாரணமான ஒன்றாகக் காணப்படுகின்றது. டிஜிட்டல் மயமாக்கலானது, அனைத்து வயதினரிடையேயும் ஒரே மாதிரியான மட்டத்தில் தாக்கம் செலுத்துகின்றது. அவர்கள் தங்களுடைய நாளின் பெரும்பகுதியை டிஜிட்டல் திரைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே செலவிடுகிறார்கள். தொழில்நுட்பத்தால் இயங்கும் உலகத்தின் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது இன்றியமையாததாகும். அவ்வாறான பயணித்தின்போது, ​​படைப்பாற்றல், சிக்கலைத் தீர்க்கும் திறன், உணர்வு ரீதியான நுண்ணறிவு, ஒத்துழைப்பு ஆகியன மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைவதுடன், நாகரீகத்துடனும், இரக்கத்துடனும், மனிதாபிமானத்துடனும் இருப்பதும் இதில் முக்கியமானதாகும். அப்போதுதான் வாழ்வதற்கு சிறந்த இடமாக உலகம் அமையும்.” என்றார்.

வர்த்தக ரீதியான வனமயமாக்கலில் இலங்கையில் முன்னணி வகிக்கும் நிறுவனம் எனும் வகையில், இலக்கியத்தின் விழுமியங்கள் மற்றும் பண்புகளுடன், எதிர்கால சந்ததியினரையும் இன்றைய தலைமுறையினரையும் உயிர்ப்பிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம். அந்த வகையில், எமது சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சிகளின் கீழ் பல்வேறு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இலக்கியத்தின் பெறுமதி பற்றிய செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமென நாம் நம்புகிறோம். அத்தகைய காரணத்திற்காக எமது நிறுவனம் ஒன்றிணைந்துள்ளமை தொடர்பில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

ஆசியாவில் வர்த்தக ரீதியான வனமயமாக்கல் துறையில் முன்னோடியான சந்தஹரித, ஒரு நிலைபேறானதும் பாதுகாப்பானதுமான முதலீட்டுக்கான வழியை உறுதிப்படுத்தியுள்ளது. பூமிக்கும் மக்களுக்கும் உதவும் வகையிலானதும் அதே வேளையில் அதிக வருமானத்தை ஈட்டித் தரக்கூடியதுமான நிலைபேறான முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில், இலங்கையர்களுக்கு வழிகாட்டி, அவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு தெளிவூட்ட நிறுவனம் விரும்புகிறது. இலங்கையில் அகர்பத்திகளை அறிமுகப்படுத்துவதில் சந்தஹரித குழும தலைவர் சதீஸ் நவரத்ன முன்னோடியாக இருந்து வருகிறார். அவர் இரண்டு தசாப்தகால தொழில்துறை அனுபவத்தைக் கொண்டவர், தற்போது இலங்கையின் அகர்பத்திகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் பணியை முன்னெடுத்துள்ளார். இந்நிறுவனம் 35,000 முதலீட்டாளர்களை கொண்டதாகும். அவர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவதுடன், நாட்டின் காடுகளை பாதுகாப்பதற்கான ஒத்துழைப்பையும் உறுதி செய்து வருகின்றது. சுமார் இரண்டு தசாப்தங்களாக அதன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வளர்த்து வரும் அதே நேரத்தில், யாராலும் வழங்க முடியாத உச்சபட்ச இலாபத்தையும் அது வழங்கி வருகிறது.

சந்தஹரித பேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்ற ‘கிரந்தகல்பனா’ போட்டியில் “Book of imagination” (“கற்பனையின் நூல்”) எனும் நூல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு வாய்ப்புகளை வெளிக்கொணரும் அதே நேரத்தில், இதுபோன்ற திட்டங்களைப் பற்றி மேலும் அறியவும், தம்மைத் தாமே புதுப்பித்த்துக் கொள்ளவும், www.sadaharitha.com எனும் தளத்திற்கு நுழையுங்கள் அல்லது எமது உத்தியோபூர்வ Facebook பக்கத்தை லைக் செய்யவும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *