DIMO வின் PESHA தகைமை IHK ஜேர்மனி மற்றும் AHK Sri Lanka இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

Nuremberg Chamber of Commerce and Industry (IHK) மற்றும் ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் குழு (AHK Sri Lanka) ஆகியன, Diploma in Plant Engineering for Sanitary Heating and Air Conditioning (PESHA) எனும் இலங்கையின் தொழிற்சாலை பொறியியல் டிப்ளோமாவை அங்கீகரித்துள்ளதன் மூலம், இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, மற்றுமொரு மைல்கல்லை அடைந்துள்ளது. DIMO Academy for Technical Skills (DATS) மூலம் வழங்கப்படும் “வெளிநாட்டில் ஜேர்மன் இரட்டை தொழிற்பயிற்சி” (A வகை தகைமை) எனும் மட்டத்தை இது கொண்டுள்ளது.

IHK Nuremberg ஆனது, ஜேர்மனியில் உள்ள 79 வர்த்தக சபைகள் மற்றும் தொழில்துறை வலையமைப்பின் ஒரு பகுதியாகும். வணிகத்தை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறையை ஆதரித்தல், உயர் தரநிலைகளை உறுதி செய்தல் மற்றும் ஜேர்மன் இரட்டை தொழிற்பயிற்சிக்கு சான்றளித்தல் ஆகிய நோக்கங்களை வர்த்தக சபைகள் கொண்டுள்ளன. AHK Sri Lanka, இலங்கையில் ஜேர்மன் IHK வலையமைப்பின் பிரதிநிதி அமைப்பு எனும் வகையில், PESHA பயிற்சியின் தர உத்தரவாதம், பரீட்சை நடைமுறை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றிற்கு அது பொறுப்பாகவுள்ளது. IHK அங்கீகாரம் மற்றும் AHK Sri Lanka சான்றிதழானது, பாடநெறிக் காலம், உள்ளடக்கம் மற்றும் பரீட்சைகள் ஆகியன ஜேர்மன் தரநிலைகளுடன் ஒத்திருப்பதை உறுதி செய்கிறது. இந்த சமீபத்திய அங்கீகாரத்திற்கு அமைய, ஜேர்மனியில் வழங்கப்படும் இதே போன்ற கட்டட நிர்வாகத் தகைமைகளுடன் PESHA சான்றிதழும் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு கட்டட முகாமைத்துவத் துறையில் அதிக வாய்ப்புகளை PESHA ஏற்படுத்தவுள்ளது.

DIMOவின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “நாட்டிலுள்ள இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதற்கு DIMO எப்போதும் உறுதுணையாக நிற்கிறது. தொழிற்கல்வி என்பது DIMO வின் நிலைபேறானதன்மை நிகழ்ச்சி நிரலில் உள்ள மிக முக்கிய பண்புகளில் ஒன்றாகும். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, நாட்டின் தொழில்சார் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென நாம் உறுதியாக நம்புகிறோம். அத்துடன் ஒரு பொறுப்புள்ள பெருநிறுவனம் எனும் வகையில், நாட்டில் தொழில்சார் கல்வியின் தரத்தை மேம்படுத்த DIMO நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அங்கீகாரம் நாட்டின் தொழிற்கல்வி பல்வகைமையை வளர்ப்பதில் DIMO வின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.” என்றார்.

மின்சாரம், நீர்க் குழாய், தீயணைப்பு, வெப்பமாக்கலுக்கான அணுகல் கட்டுப்பாடு, வாயுச் சீராக்கி, ஒருங்கிணைந்த கட்டட முகாமைத்துவ தொகுதிகள், சூரிய சக்தி உள்ளிட்ட நவீன கட்டட அம்சங்களின் முழு வகைகளையும் PESHA உள்ளடக்கியுள்ளது. ஜேர்மனியில் வேலை தேடும் உள்ளூர் மாணவர்களுக்கு ஆதரவளிக்க இந்த சான்றிதழின் மூலம் ஜேர்மன் மொழித் திட்டமும் வழங்கப்படுகிறது. கட்டட முகாமைத்துவ தொகுதிகள் துறையானது உலகம் முழுவதும் வேகமாக பரவலடைந்து வருகின்றதும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றதுமான துறையாக வளரந்து வருவதோடு, PESHA போன்ற தகைமைளுக்கான தேவையையும் அது அதிகரித்துள்ளது.

AHK Sri Lanka தொழில் பயிற்சித் தலைவர் ஜோசப் ஸ்கோப் தெரிவிக்கையில், “DIMO உடன் இணைந்து இலங்கையில் உயர்தர, செயன்முறை சார்ந்த மற்றும் தொழில் சார்ந்த தொழிற்பயிற்சிகளுக்கு ஆதரவளித்து சான்றளிப்பது தொடர்பில் AHK Sri Lanka பெருமகிழ்ச்சியடைகிறது” என்றார்.

PESHA பாடத்திட்டத்தின் உள்ளடக்கமானது இயந்திர செயலாக்கம், உபகரணங்களை பராமரித்தல், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தொகுதிகளின் பராமரிப்பு உள்ளிட்ட பரந்த அளவிலான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த மூன்றரை வருட பாடநெறியை வழங்கும் இலங்கையில் உள்ள ஒரே நிறுவனமாக DATS காணப்படுகின்றது. பொறியியல் துறையில் உலகளாவிய ஜாம்பவான்களை மேலோங்கியுள்ள DIMO இன் பரந்த நிபுணத்துவமானது இதில் முக்கிய பங்கு வகிப்பதன் காரணமாக, PESHA போன்ற நவீன கட்டட சேவைகளில் உலகத்தரம் வாய்ந்த தொழிற்கல்வித் தகுதியை வழங்குவதற்கு, இலங்கையிலுள்ள ஒரே நிறுவனம் DATS மட்டுமே  என்பதற்கு அது சான்றாக அமைகின்றது. IHK ஜேர்மனி மற்றும் AHK Sri Lanka வின் இந்த அங்கீகாரம் மூலம், PESHA தகைமை சர்வதேச தரத்துடன் ஒப்பிடப்படுவதை பிரதிபலிப்பதுடன், அதன் உலகளாவிய அங்கீகாரத்தையும் மேம்படுத்துகிறது. PESHA மற்றும் DATS பற்றிய மேலதிக தகவல்களை dimoacademy.lk ஊடாக பெறலாம்.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *