16ஆவது PropertyGuru Asia Property விருதுகள் இறுதிப் போட்டி ரியல் எஸ்டேட்டின் தங்க விருது வென்றவர்களை கொண்டாடுகிறது

  • இந்தோனேசியாவிற்கான ஏழு பிராந்திய வெற்றிகளில் ஒன்றான, Best Developer (ஆசியா) எனும் வெளிநாட்டு பட்டத்தினை, பிராந்தியம் முழுவதிலும் உள்ள ஒன்பது நிறுவனங்களுடன் சிறந்து விளங்கும் Sinar Mas Land பெற்றத
  • வியட்நாம், சீனா, ஹொங்கொங், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கம்போடியா, கிரேட்டர் நிசெகோ (ஜப்பான்) ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெற்றியாளர்கள், இப்புதுமையான ஒன்லைன் கொண்டாட்டத்தில் மிக விரும்பத்தக்க பிராந்திய பாராட்டுகளை பெற்றனர்
  • UOL Group Limited குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Liam Wee Sin, 2021 PropertyGuru Icon  விருதை பெற்றார்

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சொத்துகள் தொடர்பான தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru Group நிறுவனம், Kohler இனால் வழங்கப்பட்ட, உலகின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்ட 16ஆவது வருடாந்த PropertyGuru Asia Property Awards மாபெரும் இறுதிப்போட்டியின் வெற்றியாளர்களை வெளியிட்டுள்ளது.

2021 PropertyGuru Asia Property Awards தொடர், 31 பிரிவுகளில் ஆசியா பசிபிக்கின் மிகச் சிறந்த, முன்மாதிரியான டெவலப்பர்கள், அபிவிருத்திகள் மற்றும் வடிவமைப்புகளை பாராட்டும் கொண்டாட்டமான ஒன்லைன் மூலமான இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்தது. தற்போதைய சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய படமாக்கப்பட்ட புத்தாக்கம் கொண்டாட்டம், விருதுகள் நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ வலைத்தளமான AsiaPropertyAwards.com, மற்றும் YouTube, Facebook, LinkedIn உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டுக்கான பிராந்திய விருதுகளுக்காக சுமார் 135 நிறுவனங்கள் போட்டியிட்டன. hybrid மற்றும் ஒன்லைன் மூலம் இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான PropertyGuru Asia Property விருதுகள் தொடருக்கு தெரிவு செய்யப்ப்ட விருது பெற்ற நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள், உயர் வகை குழுக்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டன.

PropertyGuru குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஹரி வி. கிருஷ்ணன் இது தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த ஆண்டு விருது பெற்றவர்கள், அவர்களது வெற்றியைக் கொண்டாடுவதில், சமீபத்தில் ஏற்பட்ட கொவிட் நிலைமை  உள்ளிட்ட பின்னடைவுகள் தடுக்கவில்லை அல்லது குறைக்கவில்லை என்பதை இது நினைவூட்டுகின்றது. 2021 ஆம் ஆண்டில், PropertyGuru Asia Property விருதுகளானவை, டெவலப்பர்கள், பெரிய அளவிலான முதலீட்டாளர்கள், வடிவமைப்பாளர்கள் ஆகியோரை அவர்களது சிறந்த வெளிப்படுத்தலை பெற ஊக்குவித்துள்ளதுடன், இது அடுத்த தலைமுறை ரியல் எஸ்டேட் வளர்ச்சியை உருவாக்குவதுடன், தொழில்துறை பங்குதாரர்களுக்கு முன்னெப்போதையும் விட உயர்தரத்திலான முடிவுகளை எடுக்க உதவியுள்ளது. எமது வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!” என்றார்.

PropertyGuru Asia Property Awards and Events இன் நிர்வாக பணிப்பாளர் Jules Kay தெரிவிக்கையில், “PropertyGuru Asia Property Awards ஆனது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் மதிக்கப்படுகின்றதும் விரும்பப்படுகின்றதுமான ரியல் எஸ்டேட் விருதுத் தொடராக மாறியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. கடந்த வருடம் பல நாடுகளில் நாம் ஒன்லைன் தளத்திற்கு மாறியபோது, ​​எமது டிஜிட்டல் மற்றும் ஹைப்ரிட் கொண்டாட்ட நிகழ்வுகள் 11 பிராந்திய சந்தைகளில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்வையிடப்பட்டிருந்தன. டெவலப்பர்களின் பல்வேறு சாதனைகளுக்காக வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரத்தின் மூலம், அபிவிருத்திகள் மற்றும் வடிவமைப்பின் எல்லைகளைத் தொடர்ந்தும் தகர்த்து, ரியல் எஸ்டேட்டில் தங்க தரத்தை நிலைநிறுத்துவதற்கான நோக்கத்தில் உறுதியுடன் இருப்பதால், முன்னணி தொழில்துறையாளர்களை ஊக்குவிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

விருதுகளின் மாபெரும் இறுதிப் போட்டியின் தலைவரும் Transform Architecture நிர்வாக பணிப்பாளருமான (வியட்நாம்) Thien Duong; Phoenix Advisers (இந்தியா) நிர்வாக பணிப்பாளர், அமித் கன்னா;  C9 Hotelworks (நிசெகோ); Bill Barnett நிறுவுனரும் நிர்வாக பணிப்பாளருமான, Jones Lang LaSalle Philippines (பிலிப்பைன்ஸ்) நிறுவனத்தின் நாட்டிற்கான தலைவர், Christophe Vicic; PTI Architects (இந்தோனேசியா) நிர்வாக பணிப்பாளர் Doddy A. Tjahjadi,  B.S.C Group (மெயின்லேண்ட் சீனா) சந்தைப்படுத்தல் குழுத் தலைவரும் உதவி பொது முகாமையாளருமான  Ken Ip; Head of Partnerships – SEA, IWG PLC (சிங்கப்பூர்)  நிறுவனத்தின் Kristin Thorsteins; Inhabit Group (Australia) மேற்கு ஆஸ்திரேலியாவின் பிராந்திய முகாமையாளர் Lui Violanti; Paramount Realty (Sri Lanka) பணிப்பாளரும் பிரதான நிறைவேற்றதிகாரியுமான Dr. நிர்மல் டி சில்வா; Macao Association of Building Contractors and Developers (ஹாங்காங் மற்றும் மக்காவ்) தலைவரும் பணிப்பாளர் சபை உறுப்பினருமான Paul Tse; Jones Lang Wootton (மலேசியா) பிரதி நிர்வாக பணிப்பாளர் பிரேம் குமார்; Cambodian Valuers and Estate Agents Association (கம்போடியா) நிர்வாக பிரதித் தலைவர் Sorn Seap; JLL Thailand (தாய்லாந்து) தலைவர் Suphin Mechuchep ஆகியோரைக் கொண்ட, பல்வேறு விருது வழங்கும் நிகழ்வுகளில் பங்குபற்றுகின்ற துறைசார் நடுவர்களை இந்த ஆண்டுக்கான மாபெரும் இறுதிப்போட்டிக்கான சுயாதீன நடுவர் குழு அமைந்திருந்தது.

PropertyGuru குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, 16ஆவது PropertyGuru Asia Property Awards மாபெரும் இறுதிப் போட்டியின் பிளாட்டினம் அனுசரணையாளர் Kohler; தங்க அனுசரணையாளர் Leading Real Estate Companies of the World®; உத்தியோகபூர்வ தள கூட்டாளர்கள் Batdongsan.com.vn, DDProperty.com, PropertyGuru.com.my, PropertyGuru.com.sg, Rumah.com; உத்தியோகபூர்வ கேபிள் டிவி கூட்டாளர் History Channel; உத்தியோகபூர்வ பத்திரிகை PropertyGuru Property Report; உத்தியோகபூர்வ தொண்டு பங்குதாரர் Right To Play; உத்தியோகபூர்வ ESG பங்குதாரர் Baan Dek Foundation; Foundation, British Chamber of Commerce Thailand, Ceylon Institute of Builders, Design Epoch, Global Design Awards Lab, Green Building Consulting & Engineering, Singapore Estate Agents Association ஆகியன உதவியளிக்கும் நிறுவனங்களாக செயற்பட்டதோடு, உத்தியோகபூர்வ மேற்பார்வையாளராக HLB செயற்பட்டது.

2021 பிராந்திய மற்றும் நாடுகள் ரீதியான வெற்றியாளர்களின் முழுப் பட்டியலுக்கு, AsiaPropertyAwards.com எனும் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *