தனது முதல் சில்லறை விற்பனை நிலையத்தை பஞ்சிகாவத்தையில் திறக்கும் Spectrum Trading

Stafford குழுமத்தின் அங்கமான Spectrum Trading Company (Pvt) Limited நிறுவனமானது, இலங்கையில் உதிரிப் பாகங்கள் மற்றும் வாகன உபகரணங்களின் அங்கீகரிக்கப்பட்ட, மிக விரும்பப்படும் விநியோகஸ்தரும் விற்பனை முகவருமாகும். அது தனது முதலாவது சில்லறை விற்பனை நிலையத்தை, குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி காலிங்க கலுபெருமவின் தலைமையின் கீழ், கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி பஞ்சிகாவத்தையில் திறந்து வைத்தது.

இல 01, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10 இல் அமைந்துள்ள இவ்விற்பனை நிலையமானது, நிறுவனத்தின் முதலாவது சில்லறை விற்பனை நிலையமாக தனது சேவையை வழங்கும். நாடு முழுவதும் உள்ள 300 இற்கும் மேற்பட்ட முகவர் வலையமைப்பிற்கு மேலதிகமாக, பல்வேறு தயாரிப்புகளின் வகைகளை, ஒரு அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளராக செயற்பட்டு விநியோகிப்பதுடன், நிறுவனத்தினால் வழங்கப்படும் அனைத்து வகையான சேவைகளுக்கும் ஒரு தொடுபுள்ளியாகவும் இவ்விற்பனை நிலையம் செயற்படும்.

Spectrum Trading Company நிறுவனமானது, MOTUL Lubricants, TORCH Filters, Spark Plugs, SHAKO Riding Helmets & PUMA டயர்களுக்கான இலங்கையில் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகும். Spectrum ஆனது, Honda வாகனங்களின் அசல் உதிரிப் பாகங்கள், மின்சக்தி பிறப்பாக்கிகள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவராகவும் உள்ளது.

இத்திறப்பு விழா குறித்து கருத்து தெரிவித்த கலாநிதி காலிங்க கலுபெரும, “எமது முதல் விற்பனை நிலையத்தை திறந்து வைப்பது தொடர்பான அறிவிப்பை மேற்கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது வளர்ந்து வரும் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வலையமைப்பு ஆகியன, Spectrum குழுவினரால் வழங்கப்படும் சேவையின் தரத்திற்கு ஒரு சான்றாகும் என்பதுடன், இது பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். நாடு முழுவதிலும் உள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பயனுள்ள தொடுபுள்ளியாக செயற்படும் பல விற்பனை நிலையங்களில் இதுவே முதன்மையானதாக விளங்குமென நாம் நம்புகிறோம்.” என்றார்

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கொவிட் தொற்று காரணமான எதிர்பாராத சிரமங்கள், பாரிய பொருளாதார அழுத்தங்கள், மக்களின் வாழ்க்கை முறையின் அடுத்தடுத்த மாற்றங்களுக்கு மத்தியில், தனது தயாரிப்பு வகைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியன, நிறுவனத்தின் நிதானமான பாதையின் பிரதிபலிப்பாகும் என்பதைக் சுட்டிக்காட்டுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

கடந்த கால வளர்ச்சி வேகமானது, Spectrum அதன் சேவைகளை மேற்கொண்டு வரும் சந்தைகளில் ஸ்பெக்ட்ரத்தை ஒரு சமதளத்தை நோக்கி உயர்வடையச் செய்துள்ள அதே நேரத்தில், அதன் தாய் நிறுவனமான Stafford Group உடன் இணைந்து வாகனத் துறையில் அதன் மதிப்பிடமுடியாத மீளெழுச்சியானது, அதன் நம்பகத்தன்மை, வாடிக்கையாளர் மையத்தன்மை ஆகியவற்றை காண்பிக்கிறது.

2007ஆம் ஆண்டில் கூட்டிணைக்கப்பட்ட இந்நிறுவனம், Stafford Group நிறுவனங்களின் கீழ் உள்ள அதன் சகோதர நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் உற்பத்திகள், தீர்வுகள், அனுமதி பெற்ற தரகு சேவைகள், வளங்களை பகிர்தல் உள்ளிட்ட ஆதரவை வழங்கி வருகிறது. நிறுவனம் தொடர்ந்தும் வளர்ந்து விரிவடைந்து வருவதுடன், பல்வேறு நிறுவனங்கள், உலகளாவிய மற்றும் உள்ளூர் வர்த்தக நாமங்களுடன் அதன் நம்பிக்கையை விருத்தி செய்து வருகிறது. கடந்த வருடங்களில் இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அது தொடர்பான நிறுவனங்களுடனான இணையற்ற மற்றும் மதிப்பிட முடியாத உறவின் மூலம், Spectrum தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *