4ஆவது PropertyGuru Asia Property Awards (இலங்கை) நாட்டின் முதன்மையான ரியல் எஸ்டேட் மேம்பாட்டளார்கள், திட்டங்களின் தேடல்

இலங்கையின் மிகவும் ஈர்க்கக்கூடிய சொகுசான மற்றும் வாழ்க்கை முறை மேம்பாட்டாளர்களுக்கான கௌரவத்துடன் முன்னணி ரியல் எஸ்டேட் விருதுகள் திட்டம் மீண்டும் ஆரம்பம்

  • சிறந்த மேம்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் சிறந்த விருதுகள் உள்ளிட்ட ஏழு விருதுகளுடன் Home Lands Skyline (Pvt) Ltd 2021 திட்டத்தில் ஆதிக்கம்
  • Kelsey Developments PLC ஆனது, Best Lifestyle Developer விருதையும், Central Park ஜா-எல மற்றும் Ja-Ela and Urban Gateway கொட்டாவ திட்டங்கள் பாராட்டுகளையும் வென்றுள்ளது.

PropertyGuru Asia Property Awards ஏற்பாட்டாளர்கள் இன்று (09) 4ஆவது வருடாந்த PropertyGuru Asia Property விருதுகளின் (இலங்கை) வெற்றியாளர்கள் மற்றும் பாராட்டுக்குரியவர்களின் விருது பெற்றவர்கள் விபரங்களை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் விருதுகள் நிகழ்ச்சித் திட்டம், நாட்டிலுள்ள முதன்மையான அபிவிருத்தி நிறுவனங்களுக்கான பாராட்டுகளுடன் இவ்வருடமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலிப்பை வழங்கியுள்ளது. முக்கிய இடங்களில் உயர்தர, ஆடம்பரமான குடியிருப்பு மேம்படுத்தல்களில் முன்னணியில் உள்ள பெயர் பெற்ற நிறுவனமான Home Lands Skyline (Pvt) Ltd நிறுவனம் இவ்வருடம் பெற்ற ஏழு விருதுகளில் Best Developer எனும் பட்டத்தை வென்றது. நாட்டில் முன்னணி சமூக மற்றும் வாழ்க்கை முறை குடியிருப்பு சமூகக் கருத்துகளின் முன்னோடியான Kelsey Developments PLC, இவ்வருடம் முதல் முறையாக வழங்கப்பட்ட Best Lifestyle Developer எனும் பட்டத்தை வென்றது.

Home Lands Skyline (Pvt) Ltd நிறுவனத்தின் திட்டங்கள் இலங்கையின் சிறந்த விருதுகள் பலவற்றில் ஆதிக்கம் செலுத்தியது. Canterbury Golf Resort Apartments ஆனது, Best Condo Development – இலங்கை, Best Condo Development – கொழும்பு பெருநகரப் பகுதி ஆகிய பட்டங்களை பெற்றது. Canterbury Golf Villas ஆனது Best Housing Development (இலங்கை) பட்டத்தையும், Best Housing Development (கொழும்பு) மற்றும் Best Townhouse Architectural Design விருதுகளையும் பெற்றுள்ளது.

Kelsey Developments PLCயின் Central Park ஜா-எல ஆனது Best Housing Architectural Design மற்றும் Best Housing Development (கொழும்பு) எனும் மிகப் பாராட்டுக்குரிய விருதையும் வென்றது. Kelsey Developments PLC ஆனது, Urban Gateway Kottawa இற்காக Best Condo Development  (கொழும்பு பெருநகரப் பகுதி) பிரிவில் மிகப் பாராட்டுக்குரிய விருதையும் பெற்றது.

Home Lands Skyline (Pvt) Ltd ஆனது, சூழல் விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் சூரிய சக்தி பயன்பாடு மற்றும் கழிவுப் பிரிப்பு போன்ற நிலைபேறானன முயற்சிகளை பேணியமை மற்றும் பரந்துபட்ட சமூகத்திற்கான தாராளமான பங்களிப்பையும் வழங்கியமை தொடர்பில் ESG இல் விசேட அங்கீகாரத்தைப் பெற்றது.

PropertyGuru Group பிரதான நிறைவேற்று அதிகாரி ஹரி வி. கிருஷ்ணன் இது தொடர்பில் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டுக்கான PropertyGuru Asia Property Awards (Sri Lanka) விருதுகளை பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். உங்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வீடுகள், அமைதியான கோல்ஃப் சமூகங்கள் மற்றும் ஊக்கமளிக்கும் வாழ்க்கை முறை மேம்பாடுகள் ஆகியன உண்மையிலேயே நம்பிக்கைக்குரிய ரியல் எஸ்டேன் சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன. உங்களது அற்புதமான திட்டங்களின் அடிப்படையில் இலங்கையின் ரியல் எஸ்டேட்டின் எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது.” என்றார்.

PropertyGuru Asia Property Awards and Events இன் நிர்வாக பணிப்பாளர் Jules Kay தெரிவிக்கையில், “நேரடியான மற்றும் இணைய வழியிலான விளக்க தொகுப்புகளின் கலவைகளின் மூலம், பிராந்தியம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான டெவலப்பர்கள், முகவர்கள், முதலீட்டாளர்களை நாம் மீண்டும் அடைந்துள்ளோம். ரியல் எஸ்டேட் சந்தை மீண்டு வளர்ந்து வருவதால், இலங்கையில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் வருவதைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

4ஆவது PropertyGuru Asia Property Awards (Sri Lanka) வின் ஒன்லைன் விருது வழங்கல் நிகழ்வு, AsiaPropertyAwards.com தளம் மற்றும் நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள ஊடகங்களான Facebook, YouTube, LinkedIn ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய பகுதிகள் History Channel ஊடாக ஒளிபரப்பப்படவுள்ளது.

விருதுகள் தலைவர் மற்றும் பணிப்பாளரம் மற்றும் CEO, Paramount Realty Dr. நிர்மல்  டி சில்வா; QServe Pte Ltd நிர்வாக பணிப்பாளர் பிரபல பேராசிரியர் சித்ரா வெடிக்கார; பட்டய கட்டடக் கலைஞர், AIA (SL) நந்திகே டி. சமரநாயக்க; Pendi PVT Ltd நிறுவுனர் மற்றும் பணிப்பாளர் நட்டாலி பெண்டிகிரஸ்ட்; பட்டய கட்டடக் கலைஞர் மற்றும் Kahawita De Silva & Associates Pvt Ltd (KDS) பணிப்பாளர் நிலேஷ் டி சில்வா; RIU Real-Estate Intelligence Unit ஸ்தாபகப் பணிப்பாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ரொஷான் மடவெல; Homes N Spaces Lanka Properties (Pvt) Ltd பணிப்பாளர் ஸ்டெபானி பாலேந்திர; Institute of Project Managers (Sri Lanka) நிறுவனத்தின் வில்லியம் வின்சென்ட் அசோக திலகவர்தன ஆகியோரைக் கொண்ட ஒரு சுயாதீன நீதிபதிகள் குழுவால் PropertyGuru Asia Property Awards (Sri Lanka) விருது பெற்றவர்களின் பட்டியல் தீர்மானிக்கப்பட்டது

இலங்கையில் வழங்கப்படும் விருதுகளின் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை, Nihal Hettiarachchi & Company, பட்டயக் கணக்காளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட HLB Sri Lankaவின் முகாமைத்துவப் பங்காளர் தினுக் ஹெட்டியாராச்சியின் குழு உறுதிப்படுத்தியது.

சொத்து தொடர்பான முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 4ஆவது PropertyGuru Asia Property Awards விருதுகள் (Sri Lanka) நிகழ்வின் உத்தியோகபூர்வ கேபிள் டிவி பங்காளராக History Channel திகழ்வதுடன், தொழில்துறையின் முன்னணி தரக்குறியீடுகளின் ஆதரவுடன் இடம்பெறவுள்ளன. உத்தியோகபூர்வ சஞ்சிகை PropertyGuru Property Report, உத்தியோகபூர்வ பொதுமக்கள் தொடர்பு கூட்டாளர் PR Wire Consultancy, உத்தியோகபூர்வ தொண்டு பங்காளர் Right To Play, உத்தியோகபூர்வ ESG கூட்டாளர் Baan Dek Foundation, உதவியாளர் Ceylon Institute of Builders, மற்றும் உத்தியோகபூர்வ மேற்பார்வையாளராக HLB Sri Lanka ஆகியனவும் இந்நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, email: [email protected], உத்தியோகபூர்வ இணையத்தளம் : AsiaPropertyAwards.com

வெற்றியாளர்கள் மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட விருது பெற்றவர்களின் பட்டியல்

4ஆவது PropertyGuru Asia Property Awards (Sri Lanka)

DEVELOPER AWARDS

Best Developer

வெற்றியாளர்: Home Lands Skyline (Pvt) Ltd

Best Lifestyle Developer

வெற்றியாளர்: Kelsey Developments PLC

DEVELOPMENT AWARDS

Best Condo Development (கொழும்பு பெருநகரப் பகுதி)

வெற்றியாளர்: Home Lands Skyline (Pvt) Ltd இனது Canterbury Golf Resort Apartments

மிகவும் பாராட்டப்பட்டது: Kelsey Developments PLC இனது Urban Gateway Kottawa

Best Housing Development (கொழும்பு)

வெற்றியாளர்: Home Lands Skyline (Pvt) Ltd இனது Canterbury Golf Villas

மிகவும் பாராட்டப்பட்டது: Kelsey Developments PLC இனது Central Park Ja-Ela

DESIGN AWARDS

சிறந்த வீட்டு கட்டடக்கலை வடிவமைப்பு

வெற்றியாளர்:  Kelsey Developments PLC இனது Central Park Ja-Ela

Best Townhouse Architectural Design

வெற்றியாளர்: Home Lands Skyline (Pvt) Ltd இனது Canterbury Golf Villas

BEST OF SRI LANKA AWARDS

Best Condo Development (இலங்கை)

வெற்றியாளர்: Home Lands Skyline (Pvt) Ltd இனது Canterbury Golf Resort Apartments

Best Housing Development (இலங்கை)

வெற்றியாளர்: Home Lands Skyline (Pvt) Ltd இனது Canterbury Golf Villas

SPECIAL AWARD

ESG இல் விசேட அங்கீகாரம்

வெற்றியாளர்: Home Lands Skyline (Pvt) Ltd

–END–

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *