இலங்கையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பை வழங்க கைகோர்க்கும் பேபி செரமி

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி, இலங்கையில் முதன்முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இலங்கையின் முதற் தர குழந்தை பராமரிப்பு தரக்குறியீடான பேபி செரமி (Baby Cheramy), தனது அனைத்து வகையான குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளையும், குறித்த குழந்தைகளின் ஒரு வருடம் முழுவதிற்கும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் முன்வந்துள்ளது.

பெற்றோரின் அங்கலாய்ப்பை உறுதியாகப் புரிந்துகொள்ளும் ஒரு தரக்குறியீடு எனும் வகையில் பேபி செரமி அக்குடும்பத்திற்கு அத்தியாவசியமான குழந்தை பராமரிப்புப் பொருட்கள், டயபர்கள், ஷம்பு, சவர்க்காரம், க்ரீம், கொலோன், எண்ணெய், சலவை பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இதன் முதல் தொகுதிப் பொருட்கள், குறித்த ஆறு குழந்தைகளின் தந்தையான உதயங்க மரவனகொடவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் தனது அனுபவத்தையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்ட உதயங்க, “எனது மனைவி திலிணிக்கும் எனக்கும் ஆறு குழந்தைகள் கிடைத்திருப்பது முற்றிலும் எதிர்பாராத ஒன்றாகும். இதில் பல்வேறு உடல் ரீதியான, உணர்வு ரீதியான, நிதி ரீதியான சவால்கள் இருக்கும் என்பதை நாம் அறிவோம். அனைத்து தாய்மார்களைப் போலவே, திலிணியும் கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பின்னரும் கூட பலவிதமான உடல் ரீதியான சிரமங்களை அனுபவித்தார். நான் அவளுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். நான் எங்கள் குழந்தைகளை ஒன்றாக வளர்க்க விரும்புகிறேன். ஆறு குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது குறித்து எல்லாவற்றையும் மீள் மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது. பேபி செரமி அதன் பரந்த அளவிலான உயர்தர குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதற்கு உறுதியளித்தமை தொடர்பில் நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எமக்கு ஆதரவளித்த மற்றும் எதிர்வரும் வருடங்களில் ஆதரவளிப்பதாக உறுதியளித்த அனைவரையும் நாம் பாராட்டுகின்றோம்” என்றார்.

இந்த வரலாற்று ரீதியான தருணம் குறித்து பேபி செரமியின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தனுஷ்க சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “குறிப்பாக சிறந்த தரம் வாய்ந்த குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்க உறுதிபூண்டுள்ள தயாரிப்பு எனும் வகையில், இந்த 6 குழந்தைகளின் பிறப்பு எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் அளித்தது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மிகுந்த ஆறுதலையும் பராமரிப்பையும் உறுதி செய்யும் அதே வேளையில், எமது தரக்குறியீட்டின் நோக்கம், சிறந்த பெற்றோர் பரமாரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகும். இதில் பெற்றோராகிய இருவரும் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று நாம் நம்புகிறோம். உதயங்கவும் அவரது மனைவியும் ஒவ்வொரு சவாலையும் ஒன்றாகச் சந்திக்க வேண்டியுள்ளதால், முழு ஈடுபாடு கொண்ட தந்தையாக உதயங்கவின் அர்ப்பணிப்பைப் பார்ப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இது தொடர்பில் எம்முடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி இந்த இளம் தந்தைக்கு பெறுமதியான அறிவுரைகளை வழங்கிய, தேசிய ஆரம்ப குழந்தைப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பிரிவுக்கு (ECCD) நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் குழந்தைகளுக்கு சிறந்ததை வழங்குவதை உறுதி செய்வதற்காக இப்பெற்றோருடன் கைகோர்க்க முடிந்ததில் நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.” என்றார்.

பேபி செரமி, ஆறு தசாப்தங்களுக்கும் மேலான செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதோடு, குழந்தைகளின் ஆரம்ப குழந்தைப் பருவ வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, ‘தரு பெட்டியாகே லோகய’ (சிறு குழந்தையின் உலகம்) எனும் பெற்றோர் கிளினிக்குகள் போன்ற நாடு முழுவதும் உள்ள அதன் சமூக நலத்திட்டங்கள் மூலம், சரியான பெற்றோர் பராமரிப்பு மற்றும் உரிய குழந்தைப் பருவ மேம்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அதனை ஊக்குவிப்பதிலும் பேபி செரமி எப்போதும் முன்னணியில் உள்ளது.

Hemas Consumer Brands இனது ஒரு அங்கமான பேபி செரமி, soap, shampoo, baby cologne, baby cream, lotion, baby diapers, wipes, laundry wash liquid & powder, bottle wash, cotton buds, baby gift boxes போன்ற பல்வேறு குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகள் மற்றும் துணைப் பொருட்களை இலங்கையில் வழங்கி வருகிறது. பேபி செரமியின் உயர்தர தயாரிப்புகள் மற்றும் அதிநவீன உற்பத்திச் செயன்முறைகளை அங்கீகரிக்கும் வகையில், குழந்தை சோப்புகளுக்கான SLS சான்றிதழைப் பெற்ற முதலாவது இலங்கை வர்த்தக நாமம் எனும் அங்கீகாரத்தையும் அது கொண்டுள்ளது. பேபி செரமி தயாரிப்புகள் குழந்தைகளின் சருமத்தில் மென்மையாகவும் இதமாகவும் இருக்குமென தோலியல் ரீதியாக பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், அவை IFRA (சர்வதேச நறுமண சங்கம்) சான்றளிக்கப்பட்ட வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. அனைத்து பேபி செரமி தயாரிப்புகளையும் www.hemasestore.com ஹேமாஸ் இணைய வர்த்தகத் தளத்தில் பார்வையிடுவதன் மூலம் கொள்வனவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

END

Photo Caption:

இடமிருந்து வலம்: செவின் மண்டவல, பேபி செரமி உதவி வர்த்தக குறியீட்டு முகாமையாளர்; ஜானகி கருணாரத்ன, Lead – Corporate Affairs of Hemas Consumer Brands; தனுஷ்க சில்வா, பேபி செரமியின் சந்தைப்படுத்தல் முகாமையாளர்; உதயங்க மரவனகொட, ஆறு குழந்தைகளின் தந்தை; திருமதி புஷ்பா வல்பிட்ட, மாவட்ட அதிகாரி – ECCD

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *