பல்வகையான பொழுதுபோக்கு தெரிவுகள் மூலம் மத்தியதர ஸ்மார்ட்போன்களுக்கான புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் Huawei Nova 7i

Huawei Nova தொடரின் கவர்ச்சியான ஸ்மார்ட்போனான Huawei Nova 7i, பாவனையாளர்கள் தமது வீடுகளில் அடைபட்டுள்ள நிலையில் அனுகூலமான பொழுதுபோக்கினை வழங்கும் பல வகையான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சிறப்பம்சங்களால் நிரம்பிய இச் சாதனமானது பாவனையாளர்கள் தமது புகைப்படமெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்வது போன்ற புதிய வழிகளை ஆராய்வதற்கும், அன்பானவர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கும், அழகான நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கும் வழிகோலுகின்றது. பலவிதமான புகைப்படக்கலை அம்சங்களை அனுபவித்து மகிழ்வது முதல், உயர்தர கேமிங் அனுபவம், முழுமையான ஓடியோ அனுபவம் மற்றும் அற்புதமான வீடியோக்கள் வரை, Nova 7i ஒவ்வொரு அம்சத்திலும் உறுதியான செயல்திறனை வழங்குவதற்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது.

அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி நீண்ட காலத்தை செலவிடுவது இலகுவானதல்ல. Nova 7i  இன் Quad கெமரா அமைப்பானது பாவனையாளர்கள் அற்புதமான படங்களை எடுத்து, சமூக ஊடக வலையமைப்புகளில் தரவேற்றவும், தனிப்பட்ட தகவலனுப்பும் அப்ளிகேஷன்கள் ஊடாக மற்றவர்களுடன் பகிரவும் உதவுகின்றது. இதன் 48MP கெமரா, 8MP  Ultra wide வில்லை, 2MP Bokeh வில்லை மற்றும் 2 MP Macro வில்லை ஆகியவற்றைக் கொண்ட மிரளவைக்கும் கெமரா அமைப்பின் காரணமாக தற்போது பாவனையாளர்கள் வெளிச்சம் நிறைந்த இடத்தை தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களால் Portrait, Pro, Low light, Panaroma, HDR, Slow motion, Time lapse  என வெவ்வேறு அம்சங்களின் கீழ் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கவும் முடியுமென்பதுடன், மொபைல் புகைப்படக்கலை நுட்பங்களையும் ஆராய முடியும். Huawei AppGallery இல் உள்ள வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் மூலம் பாவனையாளர்கள் சில படிமுறைகளிலேயே வீடியோக்களை எடிட் செய்துகொள்ள முடியும். இந்த நாட்களில் பல சவால்கள் மற்றும் நட்புரீதியான சீண்டல்கள் சமூக ஊடகங்களில் வலம் வருவதுடன், Nova 7i  இல் காணப்படும் அற்புதமான கெமரா அமைப்பு மற்றும் AppGallery இல் உள்ள எடிட்டிங் அப்ளிகேஷன்கள் உங்களை இதில் முன்னணியில் வைத்திருக்கும்.

‘’ Nova 7i என்பது Nova தொடரில் மிகவும் சிறந்ததாக கருதப்படும் சாதனங்களில் ஒன்றாகும். இது நவீன தொழில்நுட்ப அம்சங்களை ஆச்சர்யமளிக்கும் கட்டுப்படியாகும் விலையில் வழங்குகின்றது. அதன் வடிவமைப்பும் விரும்பத்தக்கதாக Nova 5T  ஐ நினைவூட்டுவதாக உள்ளதுடன், இப்போது நாம் அனுபவித்து வருவதைப் போன்ற வீட்டுக்குள் இருக்கும் காலப்பகுதியில் ஒருவர் தம்மிடம் வைத்திருப்பதற்கு உகந்த பங்காளராகும். இது சலிப்புத் தன்மையை மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு மிக்கதாக மாற்றக்கூடிய திறனைக் கொண்டதுடன், பாவனையாளர்கள் வீட்டில் மிகவும் சௌகரியமாக உணர முடியும்,” என Huawei Devices Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான, பீட்டர் லியு தெரிவித்தார்.

Nova 7i ஸ்மார்ட்போனானது Kirin 810 chipset, 8GB Ram இனால் வலுவூட்டப்படுகின்றமையால் மிகவும் உயர் தொழில்நுட்ப அம்சங்கள் தேவைப்படும் கேம்மிங்களின் போதும் சிறப்பான தடையற்ற அனுபவத்தை தருகின்றது. புதிய தலைமுறை GPU Turbo தொழில்நுட்பமானது HD கிராபிக்ஸை வழங்குவதுடன், எவ்வித பின்னடைவுகளும் இன்றி உயர் frame rates ஐ வழங்குவது மட்டுமன்றி குறைந்த சக்தியையே பயன்படுத்துவதுடன், நீண்ட நேர விளையாட்டு மணித்தியாலங்களை வழங்குகின்றது. Nova 7i இன் Histen sound தொழில்நுட்பமானது, முழுமையான ஓடியோ அனுபவத்தைத் தருவதுடன், பாவனையாளர்கள் auto, 3D audio, natural, standard மற்றும் headset என தமது விருப்பத் தெரிவுகளை மேற்கொள்ள முடியும். மேலும், உள்ளமைக்கப்பட்ட equalizer, ஒலியின் தரத்தை மெருகேற்றுகின்றது.

இதன் குறுகலான bezels உடன் கூடிய 6.4 அங்குல full HD திரையானது, கண்களுக்கு இதமானதுடன் எல்லையற்ற வீடியோ அனுபவத்தை தருகின்றது.  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், டிவி தொடர்கள் ஆகியவற்றைப் பார்க்க இதைவிட சிறந்த நேரம் இல்லை என்பதுடன், இப்போது Nova 7i இன் நீடித்த மின்கல ஆயுளின் மூலம் பாவனையாளர்கள் யூடியுப் வீடியோக்களையும், திரைப்படங்களையும் பார்த்து மகிழ முடியும்.

பாவனையாளர்கள் இந்த இடைவெளியை புதிய மொழியைக் கற்றல், தானே செய்தல் (DIY) டிப்ஸ்கள், life hacks  போன்ற புதிய திறன்களை Huawei AppGallery இல் காணப்படும் பல வகையான அப்ளிகேஷன்களில் இருந்து கற்றுக்கொள்வதற்கு பயன்படுத்த முடியும். இந்த அம்சங்கள் அனைத்தும் மிகவும் இதனை மிகவும் இன்றியமையாத சாதனமாக்குவதுடன்,  வீட்டில் நீண்ட காலம் தங்கியிருப்பதனை கொண்டாட்டமாக மாற்றும் சாதனமும் இதுவே.

Nova 7i அனைத்து Huawei Experience விற்பனை நிலையங்கள், Singer விற்பனை நிலையங்கள் மற்றும் Daraz.lk  ஊடாக ஓடர் செய்வதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *