பிரிட்டிஷ் கவுன்சில் FISD உடன் இணைந்து பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக ‘வன்முறை இல்லா எதிர்காலம்’ எனும் திட்டத்தின் மூலம் பதிலளிக்கிறது

பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புதுமையான சமூக மேம்பாட்டுக்கான அறக்கட்டளை (FISD), இணைந்து பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) மற்றும் இணைய பாலியல் வன்முறைக்கு வழிவகுக்கும், தீங்கு விளைவிக்கும் பாலின விதிமுறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன், ‘வன்முறை இல்லாத எதிர்காலம்’ என்ற திட்டத்தை சிறுமிகள் மற்றும் பெண்களுக்காக முன்னெடுத்தது.

யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC), Janathakshan மற்றும் Hashtag Generation ஆகியவற்றுடன் இணைந்து கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை FISD மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலால் முன்னெடுக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்துவதன் மூலம் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை அடையாளப்படுத்தல்’ திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய வெளியீடாக  இலங்கை இளைஞர்களிடையே இணைய வன்முறை பற்றிய ஒரு கணக்கெடுப்பு அமைந்ததுடன், வெளியான ஆய்வு முடிவின் அடிப்படையிலும் பரிந்துரைகளின் அடிப்படையிலும் இனங் காணப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க ஒரு செயல் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 யாழ்ப்பாணம்,மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் FISD ஆகியன இணைந்து இரண்டு திட்டங்களின் கீழ் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தின.

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளில் இருந்து மீண்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், உரிய தரப்புக்களுடன் தகவல் தொடர்புகளை முன்னெடுப்பது மற்றும் இதுபோன்ற வன்முறை சம்பவங்களை நியாயப்படுத்தும் பாலின விதிமுறைகளை தெரிவிப்பதன் மூலம் சட்ட நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை உருவாக்குதல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை நீண்ட காலமாக மறைக்கப்பட்ட “தொற்றுநோயாக” இருந்தபோதிலும், கொவிட் -19 தொற்றுநோய் பரவலால் இந்த பிரச்சினை மேலும் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், வீட்டு வன்முறை மற்றும் உறவுகளுக்கிடையிலான வன்முறைகளும் அதிகரித்துள்ளது.

கற்றல் மற்றும் தொடர்புகளுக்கு இணைய பயன்பாடுகள் அதிகரித்தமையே இணையவழி வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகும். பாலியல்  துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான நபர்களும் அதிலிருந்து மீண்டவர்களும் நாடு முடக்கப்பட்டதால் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலையில், துஷ்பிரயோகம் மேற்கொள்பவர்களால் மேலும் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

பல பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள் தங்களை  துஷ்பிரயோகம் செய்பவர்களால் வீட்டில் சிக்கிக்கொள்ளும் அதிக பாதிப்பை எதிர்கொண்டு நாடு பூட்டப்பட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. பயணம் மற்றும் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்று உதவிகளைப் பெற்றுக்கொள்ள மேலும் தடையாக அமைந்தது.

FISD, வன்முறையைத் தூண்டும் பாலின விதிமுறைகளைப் அறிந்துகொள்ளும் நோக்குடன், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அனுராதபுரத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களில் சமூகங்களை அடையாளம் கண்டு, இணைய வன்முறை தொடர்பான அறிவு மற்றும் அணுகுமுறைகளை அளவிடுவதற்காக இளைஞர்களிடையே இணைய வன்முறை பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது. இணைய வன்முறையைக் குறைப்பதற்காக, சாத்தியமான இணைய வன்முறை சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இளைஞர்கள் எவ்வாறு முறையிடுவது மற்றும் ஒட்டுமொத்த அளவில் டிஜிட்டல் கல்வியறிவை அதிகரித்தல் ஆகிய விழிப்புணர்வு திட்டங்களை FISD பரிந்துரைத்தது.

பிரிட்டிஷ் கவுன்சில் சமூக அடிப்படையிலான முன்முயற்சிகளை ஆதரிப்பதுடன் பாலின உணர்திறன் மேம்படுத்துதல் திட்டங்களை அதன் ஆங்கில மொழியறிவு, கல்வி, கலை மற்றும் கலாசார பிரிவின் வேலைகள் மூலம் அனைத்து சமூகங்களுக்கும் திறந்த உள்ளடங்களாகும் வகையில் முன்னுரிமை அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில் மற்றும் சிவில் சமூகப் பங்காளிகள் இணைந்து இளைஞர்ளுடனான தொடர்புகளுடன் பெண்கள் மற்றும் சிறுமிகளின் திறமைகளை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஆதரித்து, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாக தொடர்புகளை உருவாக்கியது.

பிரிட்டிஷ் கவுன்ஸில் பொது, தனியார், இலாப நோக்கற்ற மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பரந்த செயற்பாடுகளுடன் தொடர்ந்தும் சமூக தாக்கத்துடனான திட்டங்களில் ஒத்துழைக்கிறது. இன்றுவரை, FISD மற்றும் அதன் பங்காளி நிறுவங்களின் ஒத்துழைப்பில் ‘பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ள சமூகங்களுக்கு அதிகாரம் அளித்தல்’ (VAWG)  ‘வன்முறை இல்லா எதிர்காலம்’ எனும் திட்டங்களின் மூலம் இணைந்து 20 க்கும் மேற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து வன்முறை இல்லாத எதிர்காலம் என்ற திட்டத்தில் ஆர்வமாக பங்குபற்றியதுடன் பிரச்சினைகளை ஆராய்ந்ததுடன் தமது சமூகங்களில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்த திட்டத்தை உருவாகியுள்ளனர்.

தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்கள் மூலம் வன்முறையைக் குறைத்தல், முன்மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் சமூக அடிப்படையிலான தலையீடுகள் மூலம் சமூக ஊடக துன்புறுத்தல்களைக் கையாள்வதில் கவனம் செலுத்துவதுடன் விழிப்புணர்வு மற்றும் தூண்டுதல் அணுகுமுறை மாற்றத்தின் மூலம் பெண்களுக்கு குரல் கொடுப்பதற்கான அதிகாரத்தை வழங்குகின்றன.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *