பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும் உதவி மூலம் உள்ளூர் தொடக்க தொகுதியை விருத்தி செய்தல்

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனை நிறுவனமான Startup Genome உடன் இணைந்து, தற்போதைய உள்ளூர் தொடக்க தொகுதியின் நிலைப்பாடு மற்றும் அதனை முன்னோக்கி வழிநடத்துதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக “Accelerating the Sri Lankan Startup Ecosystem” (இலங்கையின் தொடக்க தொகுதியை விரைவுபடுத்துதல்) எனும் தலைப்பின் கீழ் சமீபத்தில் ஒரு இணைய வழி கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. 111 தொடக்க நிறுவுனர்கள் மற்றும் தொடக்க ஆரம்பிப்பாளர்களின் ஆதரவுடன், Startup Genome மற்றும் ICTA ஆகியன இணைந்து தொகுத்த மதிப்பீட்டு அறிக்கையின் முக்கிய கண்டறிதல்களை ஆராய்வதில் இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது. உள்ளூர் தொடக்க தொகுதியின் விரிவான கண்ணோட்டத்தை வழங்கும் அதே வேளையில், தொடக்க நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க ஒரு கூட்டு அணுகுமுறையின் அவசியத்தை இக்கலந்துரையாடல் வலியுறுத்தியது.

Startup Genome நிறுவனத்தின் Head of Ecosystem Strategy and Equity Partner (தொகுதி மூலோபாய தலைவரும் பங்கு பங்காளருமான) ஸ்டீபன் குயெஸ்டர் மதிப்பீட்டு அறிக்கையை வழங்கினார். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு குழுக்களை உருவாக்குதலை வேகப்படுத்தல் தொடர்பில், அரச மற்றும் தனியார் துறைகளுக்கு ஆலோசகராக செயற்பட்டு வரும் இவர் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவருடன் Startup Genome ஆராய்ச்சி முகாமையாளர் அக்சத் அகர்வாலும் இணைந்திருந்தார். இவர் தொகுதி மதிப்பீடு, உள்ளீடுகளின் உருவாக்கம் மற்றும் Startup Genome வாடிக்கையாளர்களுக்கான மூலோபாய பரிந்துரைகளை வழங்குபவராக செயற்படுகின்றார். ஸ்டீபன் மற்றும் அக்சத் ஆகியோருடன் ICTA இனது, தொடக்க தொகுதி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளரான, சசிந்திர சமரரத்னவும் இணைந்திருந்தார். அவர் உலகளாவிய தொகுதி அமைப்புகளுடன் இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பின் ஒப்பீடு உள்ளிட்ட பெறுமதியான பல உள்ளீடுகளை பார்வையாளர்களுக்கு விளக்கினார். குறிப்பாக, தொடக்கங்களின் நிதி மற்றும் அவற்றின் விரிவாக்கம், புதிய வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் காணப்படும் இடைவெளிகள் அத்துடன் தொகுதிகளின் வளர்ச்சிக்கான நீண்ட கால அடிப்படையிலான பாதை ஆகியவற்றை அவர் விளக்கினார்.

இக்கலந்துரையாடலில் பேசப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பார்ப்போமானால், இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பிற்கான மூன்று முக்கியமான அம்சங்களை ஸ்டீபன் கோடிட்டு காட்டினார். இது Startup Genome இனால் பயன்படுத்தும் அளவீடுகளின்படி செயல்படுத்தும் கட்டங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டிருந்தது. தொடக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தொடக்கத்தின் தரத்தை அதிகரிக்கவும், ஆரம்ப கட்ட நிதியை செயல்படுத்தும் கட்டத்தில் ஒரு தொடக்க அமைப்பிற்கு அவசியமான கட்டாயத் தேவைகளை ஸ்டீபன் எடுத்துரைத்தார். ஒரு தொடக்க தொகுதி அமைப்பின் செயல்திறனானது, தொடக்கங்களின் எண்ணிக்கையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். அத்துடன் உரிய ஆதாரங்களை முன்வைத்து, இலங்கையில் உள்நாட்டு தொழில் முனைவோரின் வளர்ச்சியின் சாத்தியத்தை நிரூபித்தார். அத்துடன் தொடக்க தொகுதியின் விரிவாக்க முயற்சிகளில் பல்கலைக்கழகங்கள் வகிக்கும் பங்கு தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டினார். தொடக்கத் தொகுதி அமைப்பை வளர்ப்பதற்கு தொடக்க நிறுவுனர்கள், தொழில்முனைவோர், ஆரம்பிப்பாளர்கள் (Enablers), முதலீட்டாளர்களிடையேயான ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தொடக்கத்தின் தரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதோடு, ​​உயர் தொழில்நுட்பங்கள், வணிக மாதிரிகள், தொழில் நிபுணத்துவம், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கான அணுகல், போதுமான தொழில்நுட்ப திறமை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளிகளையும் இக்கலந்துரையாடல் ஆராய்ந்தது. இதில் முன்வைக்கப்பட்ட அறிக்கையானது, நிதியுதவி அம்சம் தொடர்பிலும் கவனம் செலுத்தியதுடன், குறிப்பாக நிதி இடைவெளிகள் மற்றும் ஆரம்ப கட்ட நிதியை அதிகரிப்பதற்கான சாத்தியமான தீர்வுகள் பற்றிய விரிவான தகவல்களையும் அது வழங்கியுள்ளது. இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பின் நிதி இடைவெளிகள், அது கொண்டுள்ள அதன் நிலையிலும் மிக பெரியவை என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டீபன், நிதி இடைவெளிகளை தீர்க்க நீண்ட கால தீர்வின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்த மதிப்பீடானது ஒரு தொகுதி அமைப்பானது முன்னோக்கி செல்லும் வழியைக் கண்டறிவதற்காக, அது தற்போது எங்குள்ளது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்ற உண்மையை ஸ்டீபன் மீண்டும் வலியுறுத்தினார். “தொகுதி அமைப்பை துரிதப்படுத்துவது தொடர்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மதிப்பீட்டை தொகுக்க தங்கள் உள்ளார்ந்த விடயங்களையும் ஆதரவையும் வழங்கிய அனைத்து தொடக்க நிறுவுனர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சந்தையின் அளவின் அடிப்படையில் இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பு ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், தொடக்கத்திற்கான நட்பு ரீதியான கொள்கைகளை உருவாக்கவும், உலகளாவிய தொடக்க அமைப்புகளுடன் கூட்டாண்மையை உருவாக்கவும், உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் எனும் பல்வேறு விடயங்களின் அடிப்படையில், ஒரு கூட்டு அணுகுமுறையிலான வளர்ச்சி சாத்தியமாகும் என்பதை நாம் அவதானிக்கிறோம்.” என ஸ்டீபன் தெரிவித்தார்.

இந்த இணையவழி கலந்துரையாடலின் முடிவு வரை, 2025 ஆம் ஆண்டு வரை தொடக்க தொகுதி அமைப்பின் வளர்ச்சிக்கான பாதையின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டிலும் முன்னுரிமையளிக்க வேண்டிய பரிந்துரைகளின் தொகுப்பை ஸ்டீபன் வழங்கினார்.

இக்கலந்துரையாடலின் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் தொடக்க தொகுதி அமைப்பை வளர்ப்பதற்கான ICTA இன் ஒட்டுமொத்த முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த, ICTA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி, பொறியியலாளர் மஹிந்த பி. ஹேரத், “இத்திட்டத்தின் பொருட்டு எம்முடன் இணைந்தமைக்காக Startup Genome இற்கு நன்றி தெரிவிப்பதோடு, இலங்கையிலுள்ள தொடக்க தொகுதி அமைப்பை மேம்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளை நாம் மிகவும் பாராட்டுகிறோம். ஸ்டீபன் குயெஸ்டர், அக்சத் அகர்வால் மற்றும் தொடக்க தொகுதி அமைப்பு மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்க உதவிய அனைவருக்கும், மற்றும் இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள ICTA குழுவுக்குத் துணைபுரிந்த அனைவருக்கும் ICTA சார்பாக நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தொகுதி அமைப்பாக நாம் எங்கு நிற்கிறோம் என்பது பற்றிய தெளிவான கண்ணோட்டம், பரிந்துரைகளுடன் தொகுதிகளின் மேம்பாட்டுக்கான எதிர்கால பாதை உள்ளிட்ட, அறிக்கையில் வழங்கப்பட்ட ஆழமான உள்ளடக்கங்கள் எமது முன்னோக்கிய பயணத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும். தொகுதி அமைப்புகளை விருத்தி செய்யும் வகையில், அனைத்து தொடக்க நிறுவுனர்கள், ஆரம்பிப்பாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிக்க நாம் விரும்புகிறோம்.” என்றார்.

Startup Genome உடனான ICTA இனது கூட்டிணைவு 2017ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருகின்றது. 2017 இல் ICTA Startup Genome உடன் இணைந்து முதலாவது உலகளாவிய தொடக்க தொகுதி அறிக்கையை வெளியிட்டதுடன், அதனைத் தொடர்ந்து மீண்டும் 2020ஆம் ஆண்டில் அறிக்கையின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டது. இந்த அனைத்து முயற்சிகளும் ICTA வின் தேசிய டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்துடன் இணைகின்றன. அது 2024ஆம் ஆண்டிற்குள் 1,000 தொழில்நுட்ப தொடக்கங்களை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடக்க நிறுவுனர்கள், தொடக்க ஆரம்பிப்பாளர்கள், ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரையும் இலங்கையில் தொடக்க தொகுதி அமைப்பை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு ICTA அழைப்பு விடுக்கிறது. இது தொடர்பான மேலதிக தகவலுக்கு, [email protected] இனை தொடர்பு கொள்ளவும்.

ICTA பற்றி

இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் நிறுவனமான ICTA, இலங்கையின் தொடக்க தொகுதி அமைப்பை உரிய வகையில் உருவாக்குவதில் ஊக்கியாக செயல்படுகிறது. ICTA அதன் டிஜிட்டல் பொருளாதார தூணின் கீழ், தொடக்க தொகுதி மேம்பாடான SBU இல் Spiralation உள்ளிட்ட அனைத்து தொடக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளுக்கும் உதவியளிப்பதில் முன்னோடியாக திகழ்கின்றது. நாட்டில் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான வணிக முயற்சிகளை அபிவிருத்தி செய்தல், தொடக்கங்களினால் வெளியிடப்படும் இறுதி வெளியீடுகளை அதிகரித்தல், தொடக்கங்களின் தரம், ஆரம்ப கட்ட நிதி, தேவையான அறிவு உள்ளிட்ட விடயங்கள் மூலம் ஒரு வெற்றிகரமான வணிகத்தை நடத்துவதற்குத் தேவையான அனைத்தையும் வழங்கும் நோக்கில் தொடக்க தொகுதி மேம்பாட்டு திட்டமானது, ஆரம்பிக்கப்பட்டது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *