IdeaHub இனை அரச துறைக்கு அறிமுகப்படுத்த State Trading Corporation உடன் கைகோர்க்கும் Huawei

முன்னணி பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் இலங்கையின் அரச வர்த்தக விநியோக நிறுவனமான -State Trading (General) Corporation, அறிவார்ந்த எழுதுதல், உயர் வரையறை (HD) வீடியோ கொன்பரன்சிங் மற்றும் வயர்லெஸ் பகிர்வுடன் கூடிய ஸ்மார்ட் அலுவலகத்திற்கான உற்பத்தித்திறன் கருவியை Huawei IdeaHub  இனை அறிமுகப்படுத்த உலகின் முன்னணி ஐசிடி தீர்வுகள் வழங்குநரான Huawei உடன் கைகோர்த்தது.

Red Dot Award 2020 வெற்றியாளரான IdeaHub, எந்த சூழலுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிரமமின்றி மாநாட்டு அறைகள், நிர்வாக அலுவலகங்கள் மற்றும் திறந்த பரப்புகளை ஸ்மார்ட் இடங்களாக மாற்றுகிறது.

வர்த்தக அமைச்சர் கௌரவ (Dr.) பந்துல குணவர்தன புதிய பங்குடமை தொடர்பில் உரையாற்றுகையில், “இன்றைய உலகில் தொழில்நுட்பம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. நாங்கள் எங்கள் அலுவலகங்களில் செயல்படும் விதம் முதல் வீடுகள் வரை, அரசு துறை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்கள் மற்றும் எங்கள் தொழில்முறை வேலை சூழல்களில் கூட. குறிப்பாக இயக்கம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளுடன், நேரடி மற்றும் மெய்நிகர் விளக்கக்காட்சிகள் மற்றும் கூட்டங்களை நடத்த எங்களுக்கு உதவும் தொழில்நுட்பங்களை அரச துறை ஆராய்வது முக்கியமாகும். இந்த பங்குடமை, Huawei IdeaHub போன்ற டிஜிட்டல் புத்தாக்கங்களின் உதவியுடன் அரச துறையானது நாளாந்த செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகளை சுமூகமாகவும் திறமையாகவும் செயல்படுத்த உதவும் இந்த நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த State Trading (General) நிறுவனத்திற்கு உதவும் என்று நான் நம்புகிறேன், என்றார்.

“புதிய இயல்புநிலையின் தற்போதைய சூழ்நிலையில், அலுவலக சூழலில் ஒரு வேகமான மாற்றத்துக்கு முகங்கொடுத்து வரும் ஒரு பகுதி கொன்பரன்சிங் மற்றும் விளக்கக்காட்சி அம்சங்களாகும்.எனவே, அவை அலுவலக செயல்பாடுகளை துரிதமாக்கும் திறன்கள் இணைக்கப்பட்ட அலுவலகங்களாக மாற்றும் அரச துறை மற்றும் தனியார் துறை மற்றும் பொது நிறுவனங்கள் ஆகிய இரண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். அவை அலுவலக செயல்பாடுகளை துரிதமாக்கும் “என்று  State Trading (General) Corporation (STC) இன் தலைவர் யோகா பெரேரா கூறினார்.

உலகளாவிய போட்டித்திறன் கொண்ட ஒரு நாடாக இலங்கையை உருவாக்க முயற்சிக்கும் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக, புதிய இயல்பு நிலையான இந்த காலகட்டத்தில் பொதுத் துறையின் அன்றாட செயல்பாடுகளை விரைந்து கண்காணிக்கும் இணைக்கப்பட்ட அலுவலகங்களுக்கு வசதியளிக்கும் அரசாங்கத் துறை நிறுவனங்களுக்கு Huawei IdeaHub தீர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். Huawei மற்றும் STCக்கு இடையேயான இந்த புதிய பங்குடமை இரு நிறுவனங்களும் பொதுத்துறை டிஜிட்டல் மாற்றத்திற்கு உதவக்கூடிய அதிக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஆராய வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த பங்குடமை குறித்து, Huawei Sri Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “Huawei IdeaHub போன்ற எங்கள் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில், State Trading (General) Corporation உடன் பங்குடமையில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நவீன, இணைக்கப்பட்ட அலுவலகத்தில், தடையற்ற பாவனையாளரை பிரதானமாகக் கொண்ட அனுபவத்தை வழங்க, அணிகள் எங்கிருந்து வேலை செய்கிறார்களோ அவற்றை ஒன்றாகச் செயல்படுத்துவதை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

லுவாங் யி, Huawei தனது இலங்கை தலைமை அலுவலகத்தில் ஏற்கனவே பல  IdeaHub டெர்மினல்களை நிறுவியுள்ளதாகவும், இலங்கையின் முன்னணி தனியார் துறை அலுவலகங்களில் உள்ளூர் வணிகங்களை வெற்றிகரமாக தங்கள் டிஜிட்டல் மாற்றப் பயணத்தை மேற்கொள்ள வைப்பதாகவும் தெரிவித்தார்.

“இந்த சேவைகள் டிஜிட்டல் மாற்ற செயல்முறையின் ஒவ்வொரு படிமுறையையும் உள்ளடக்கியதென்பதுடன், அதற்கு அப்பால் – மூலோபாய வளர்ச்சி மற்றும் செயல்படுத்தல் முதல் செயல்பாட்டு ஆதரவு வரை, இப்போது மற்றும் எதிர்காலத்திலும் டிஜிட்டல் மாற்றத்தை வெற்றிகரமாக உணர அரச துறைக்கு உதவுகிறது, ” என லியாங் யி மேலும் தெரிவித்தார்.

Huawei இன் IdeaHub ஒரு சரியான குழு ஒத்துழைப்பு சபை ஆகும், இது ஒரு கொன்பரன்சிங் அல்லது அலுவலக அறை  மல்டிமீடியா தீர்வின் அனைத்து கூறுகளையும் எடுத்து அவற்றை ஒரு ஸ்மார்ட் சாதனமாக மாற்றுகிறது.

இந்த அல்ட்ரா-ஸ்மார்ட் போர்ட் ஐந்து முக்கிய ஒருங்கிணைந்த திறன்களை உள்ளடக்கியது: இது முழுமையாக செயல்படும் ஸ்மார்ட் போர்ட் ஆகும்; இது ஒரு உள்ளமைக்கப்பட்ட 4K கெமராவைக் கொண்டுள்ளது; உள்ளமைக்கப்பட்ட உயர் வரையறை மைக்ரோஃபோன் வரிசை; விருப்பமான உள்ளமைக்கப்பட்ட அண்ட்ரோய்ட் சிஸ்டம்/விண்டோஸ் ஓபிஎஸ், சரவுண்ட் ஸ்பீக்கர் சிஸ்டம்; மற்றும் சுவர் அல்லது ஒரு மொபைல் ஸ்டாண்டில் இணைக்க முடியும்.

நிறுவன மற்றும் அரசாங்கத் துறையில், வெவ்வேறு இடங்களில் இருக்கும் ஆர்வமுள்ள தரப்பினரையும், தொலைதூரப் பயிற்சியையும் உள்ளடக்கிய கொள்கை மேம்பாட்டு காட்சிகளுக்கு இது பொருத்தமானதாக இருக்கும். கல்வி பரப்பில், இது தொலைதூர கற்றலுக்கும் பயன்படுத்தப்படலாம் மற்றும் தொலைதூர பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட அல்லது குறிப்பிட்ட இடங்களில் விரிவுரைகளில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு நேரடி வீடியோ மாநாட்டில் ஈடுபட உதவும்.மற்றொரு மாகாணத்திலிருந்தோ அல்லது நாட்டிலிருந்தோ விருந்தினர் விரிவுரையாளரை ஈடுபடுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். மேலும், குழு விவாதங்களை எளிதாக்க இது பயன்படுத்தப்படலாம். சுகாதார பராமரிப்பு வெளியில், மருத்துவர்கள் இரண்டாவது கருத்துக்களை வழங்க பயணிக்க இயலாத தொலைநிலை நோயறிதல் போன்ற பல டெலிமெடிசின் சேவைகளுக்கும், நிபுணர் ஒரு செயல்முறைக்கு உடல் ரீதியாக பிரசன்னமாகி இருக்க இயலாத நிலையில் சத்திரசிகிச்சை கற்பித்தலுக்காகவும் மருத்துவ நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *