வினைத்திறனான வாழ்க்கைக்கு Huawei Nova 7 SE உடன் இணைக்கக்கூடிய மூன்று Huawei ஸ்மார்ட் சாதனங்கள்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, உலகின் முதலவாது மத்திய ரக 5G ஸ்மார்ட்போனை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியதன் மூலம் 5G தொழில்நுட்பத்துக்கான அணுகலை ஒவ்வொருவருக்கும் வழங்கியது. இந்த ஸ்மார்ட்போன் 5G மற்றும் அதன் திறன்களைப் பற்றி அதிக எதிர்பார்ப்பு ஏற்பட் நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Huawei Nova 7 SE ஏற்கனவே மத்திய ரக ஸ்மார்ட்போன் பிரிவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Nova 7 SE இன் மிக முக்கியமான அம்சம் அதன் 5G தொழில்நுட்பமாகும், இது புத்துணர்ச்சியூட்டும் ஸ்மார்ட்போன் அனுபவத்தை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஒப்பிடமுடியாத செயல்திறனை வழங்குகிறது. Nova 7 SE மிகவும் சக்திவாய்ந்த Kirin 820 5G SoC chipset உதவியுடன் இதை அடைகிறது. Nova 7 SE அதன் விலை பிரிவில் 5G மூலம் இயங்கும் ஒரே ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த காரணத்திற்காக, பல தொழில்நுட்ப ஆர்வலர்கள் Nova 7 SE ஐ ஏற்று, அதன் உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்களைப் பற்றி பாராட்டினர்.

Nova 7 SE இன் குவாட் கெமரா அமைப்பானது, அதன் அதிக பிரபலத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. Nova 7 SE ஆனது, 64 MP அல்ட்ரா உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கெமரா, 2 MP Bokeh கெமரா மற்றும் 2MP மெக்ரோ கெமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது அடுத்த நிலை புகைப்பட அனுபவத்தைக் கொண்டுவரும் அதே நேரத்தில், 4K High definition வீடியோ, Dual View வீடியோ போன்ற படைப்பாற்றல் தெரிவு அம்சங்கள் கொண்ட வீடியோ பதிவிடல், Super Slow-Motion, Time Lapse போன்ற கையடக்கத் தொலைபேசி வீடியோ பதிவிடல் அம்சத்திற்கு மேலும் மதிப்பை கொண்டு வருகின்றன. இதன் செல்பி கெமரா 16MP வில்லையுடன், Super night mode செல்பி தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன் BM3D denoising algorithm குறைவான ஒளி நிலையிலும் சிறப்பான படங்களை எடுக்க வழி செய்கின்றது.

Nova 7 SE ஆனது, 4,000 mAh திறன் கொண்ட பெரும் மின்கலத்தை கொண்டுள்ளதன் மூலம், இது ஒரு முழு நாள் பயன்பாட்டை எவ்வித தடையுமின்றி வழங்குகிறது. அத்துடன், Huawei Super Charge தொழில்நுட்பத்துடன் வருவதன் காரணமாக, 30 நிமிடங்களுக்குள் மின்கலத்தை 70% வரை சார்ஜ் செய்ய வழிவகுக்கிறது.

Nova 7 SE இன் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சம் அதன் சேமிப்பகமாகும். இதன் 8GB RAM ஆனது, அதன் மிக விரைவான செயல்திறன் மட்டங்களில் பெரிய பங்கு வகிப்பதுடன், 128GB சேமிப்பகம் மூலம் அனைத்து பயனர்களும் அவர்களின் அனைத்து வீடியோக்கள், புகைப்படங்கள், விளையாட்டுகள், செயலிகள், கோப்புகளை சேமிப்பதற்கான வசதிகளையும் வழங்குவதுடன், தடையற்ற செயற்பாட்டையும் உறுதி செய்கின்றது.

Nova 7 SE, தற்போது இடம்பெற்று வரும் Novaவின் வடிவமைப்பு சார்ந்த பரிணாம வளர்ச்சிக்கான புதிய வருகையாகும். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இதன் 3D கண்ணாடி மேற்பரப்பானது அதனை கையில் வைத்திருக்கும் போது மிகவும் மென்மையான உணர்வை ஏற்படுத்துவதுடன், Novaவின் பசுமையான வண்ண வகைகளான ஸ்பேஸ் சில்வர், க்ரஷ் கிரீன் மற்றும் மிட்சம்மர் பேர்ப்பில் போன்றன அதன் வடிவமைப்பின் கவர்ச்சியை பல மடங்கு உயர்த்துகிறது. Nova 7 SE இன் 2400×1080 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் கூடிய 6.5 அங்குல LTPS Full HD திரையானது பாவனையாளர்களுக்கு முழுமையான காட்சி அனுபவத்தை வழங்குகின்றது. இதேவேளை, மெல்லிய Punch Full View உடன் கூடிய திரையானது (90% screen to body ratio) திரைப்படங்கள் மற்றும் கேம்ஸ்களுக்கு ஏற்ற எல்லையற்ற காட்சிக்கான இடவசதியைக் கொண்டுள்ளது.

ஒன்றுடன் ஒன்று இணைக்கும்போது Huawei சாதனங்கள் அதிக செயல்திறனையும், வாழ்க்கையை வழிநடத்த ஒரு சிறந்த வழியையும் தருகின்றன என்பதில் சந்தேகமில்லை. Huawei Nova 7 SE இனை Huawei இன் முதற்தர ஓடியோ சாதனங்களான Huawei FreeLace Pro , Huawei FreeBuds Studio மற்றும் Huawei Sound X உடன் இணைக்க முடியும்.

Huawei இன் நவீன wireless earphone தயாரிப்பே FreeLace Pro ஆகும். இதன் Active Noise Cancellation இதன் குறிப்பிடத்தக்க அம்சமென்பதுடன், சுற்றுச் சூழல் இரைச்சலை வெகுவாகக் குறைக்கின்றது. அதன் 14mm dynamic driver, சுயாதீனமான குறைந்த அதிர்வெண் ஒலி குழாயுடன் இணைந்து அதிர்வு விளைவை அடைய செயல்படுகின்றமையானது வலுவான மற்றும் ஆழமான bass இற்குவழிவகுக்கிறது. FreeLace Pro அதன் சக்தி வாய்ந்த ஓடியோ தரத்துக்கு மேலதிகமாக அழைப்பு இரைச்சல் இரத்துச் செய்யும் அமைப்புடன் (call noise cancellation system) வருவதுடன், இது அழைப்புகளின் போது வெளிப்புற சூழல் சத்தத்தின் குறுக்கீட்டை திறம்பட குறைக்கிறது. ஒரே சார்ஜுடன் ஒரு நாள் முழுவதும் தொடர்ச்சியாக இசையை கேட்டு இரசிக்கும் வாய்ப்பினை Huawei FreeLace Pro வழங்குகின்றது.

Active Noise Cancellation என்றழைக்கப்படும் சக்தி வாய்ந்த இரைச்சலை நீக்கும் அமைப்புடன் கூடிய ஹெட்போனே Huawei FreeBuds Studio ஆகும். எட்டுத் திசையும் நோக்கி அமைந்த 8 மைக்ரோபோன் அமைப்பு, இருபுறமும் இயங்கும் 4 உயர் உணர்திறன் ஒலிவாங்கிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எட்போன்கள் மேம்பட்ட ஒலி நீக்கத்துக்காக சூழல் ஒலியை மிகவும் துல்லியமாக கண்டறிகின்றது. இதன் Tee Audio Tube (TAT) அமைப்பானது அணிவதற்கு மிகவும் சௌகரியத்தை வழங்குவதுடன், காதுகளுக்கான காற்றழுத்தத்தை சமநிலைப்படுத்துகின்றது. Huawei FreeBuds Studio, அதன் 6 mic அழைப்பு இரைச்சல் நீக்கும் அமைப்புடன் சத்தமான சூழலில் கூட அழைப்பு மேற்கொள்வதை இலகுவாக்குகின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த ஒரு சார்ஜ் சுழற்சியானது 24 மணிநேரம் வரை செவிமடுப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.

இரட்டை dual sub woofers உடன் கூடிய Huawei Sound X கொண்டு செல்வதற்கு இலகுவான ஸ்பீக்கர் ஆகும். இது Devialetஇன் Active Matching (SAM) தொழில்நுட்பத்துடன் கூடியதென்பதால் உயர் தரமான ஓடியோவை உருவாக்க நிகழ்நேர ஒலி சமிக்ஞைகளை கொண்டு வருகின்றது. இதன் HD ஒலியானது சான்றளிக்கப்பட்டதுடன் இதனுடைய dual sub woofers காந்த அரிய பூகோள கூறுகளிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளன. Sound X bass 40hz வரையான மட்டத்தை அடையக் கூடியது. Huawei Share அம்சத்தை Sound X கொண்டிருக்கின்றமையானது பாவனையாளர்கள் இதனை உடனடியாக இணைக்க முடியும். இது ஸ்டைலானது மற்றும் வண்ணமயமானது, எனவே பார்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

இந்த ஓடியோ சாதனங்கள் அனைத்தும் உயர்ந்த தரமான தொழில்நுட்பம் மற்றும் ஒப்பிடமுடியாத அம்சங்கள் போன்ற பொதுவான அம்சங்களை கொண்டுள்ளதுடன், அவை இந்த சாதனங்களின் பிரபலத்திற்கு வழிவகுத்தன.

Huawei Nova 7 SE ரூபா 68,999/-, Huawei FreeLace Pro ரூபா 21,999/-, Huawei FreeBuds Studio ரூபா 59,999.00, Huawei Sound X ரூபா 57,999.00  எனவும் விலையிடப்பட்டுள்ளன. இந்த சாதனங்கள்  நாடுபூராகவும் உள்ள Huawei experience centers, சிங்கர் காட்சியறைகள், Daraz.lk மற்றும் Wow.lk ஆகிய இணையத்தளங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *