HUTCH தனது புதிய வர்த்தகநாம பெறுமான நிலைத்தோற்றமான “Be. Anywhere.” இனை அறிமுகப்படுத்தும், புத்துணர்வான நிகழ்வினை அதன் ஊழியர்கள் முன்னிலையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முழு அளவிலான – வலையமைப்பு பிரச்சாரமானது, HUTCH தற்போது எவ்வாறு ஒரு பாரிய மற்றும் சிறந்த வலையமைப்பு வழங்குநராக உருமாறியுள்ளது என்பதனை எடுத்துக்காட்டியது. விரிவாக்கப்பட்ட 2G, 3G மற்றும் புத்தம் புதிய 4G வலையமைப்பு செயற்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், HUTCH இப்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் 95% வலையமைப்பை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களை “எங்கும் இருக்க” (be anywhere) வலுவூட்டுவது மட்டுமன்றி, HUTCH இன் தனித்துவமான சலுகைகளை அணுகக்கூடியதாக இருக்க வழிசெய்கின்றது. இந்த நடவடிக்கைகளுக்கு HUTCH நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி, திருக்குமார் நடராசா, அவரது சிரேஷ்ட முகாமைத்துவத்தினருடன் இணைந்து தலைமை தாங்கினார். நாடு முழுவதும் 4G வலையமைப்பை விரிவுபடுத்தியதன் மூலம், HUTCH நிறுவனமானது வாடிக்கையாளர்கள் தங்களது சிக்கல்களை தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை, சிக்கனமான கட்டணங்களில் பெறும் வகையில் வலுவாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந் நிறுவனமானது, வெறும் 12 மாதங்களுக்குள் அடைந்த சாதனைகளை பணியாளர்களுடன் தொடர்புகொள்வதிலும், இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றின் எதிர்காலத் திட்டங்களில் ஈடுபட, அறிவினைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது.