அமானா தகாஃபுல் ஜென்ரல் இன்சூரன்ஸ் நிறுவனமானது 2021ஆண்டின் முதற் காலாண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளது

இலங்கையின் பொது காப்புறுதி துறையில் 2021 ஆண்டுக்கான முதற்காலாண்டில் சிறப்பான செயற்திறனை அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் வெளிப்படுத்தியுள்ளதுடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த காப்பீட்டு தொகையில் (Gross written Premium – GWP) 27% க்கும் அதிகமான முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளது. காப்பீட்டு துறையில் விற்பனை செயல்திறன் குறித்த சந்தையிலுள்ள நிறுவனங்கள் முனைப்புடன் செயலாற்றுகின்ற நிலையில் இதுபோன்ற முன்னேற்றம் அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.

முதற் காலாண்டில் அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இந்த பாராட்டத்தக்க முன்னேற்றம் குறித்து கருத்து வெளியிட்ட அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஜென்ரல் (General) பிரிவுக்கு பொறுப்பான பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) திரு. ஷெஹான் ஃபைஸால் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில் : 2021 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் இலங்கையின் காப்புறுதி துறையின் முனனேற்றம் அடைந்த ஒன்றாக அமானா தகாஃபுல இன்சூரன்ஸ் முன்னேறியுள்ளதை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பொதுமக்களில் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் நுன்னிய பொருளாதார அழுத்தங்கள்ரூபவ் காப்புறுதி துறையில் காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் தொற்றுநோயினால் மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள பாரிய தாக்கம் ஆகிய பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் இதுபோன்றதொரு படியினை காப்புறுதி துறையில் தகாஃபுல் இன்சூரன்ஸ் முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாக பார்க்கப்படுகிறது.

முதல் காலாண்டில் அனைத்து காப்பீட்டு வகுப்புகளிலும் வலுவான வளர்ச்சியை அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மோட்டார் பிரிவு அல்லாத மிகப்பெரிய காப்பீட்டு வகுப்பான மரெய்ன (Marine insurance) இன்சூரன்ஸ் விற்பனையில் அமானா காப்புறுதி நிறுவனம் முன்னேற்றம் கண்டுள்ளதுடன்ரூபவ் கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறித்த பிரிவின் வளர்ச்சியானது 69% ஆக பதிவாகியியுள்ளது. அமானா காப்புறுதி நிறுவனத்தின் தீவிபத்து மற்றும் பொறியியல் காப்புறுதி பிரிவானது 2021 ஆண்டின் – முதற்காலாண்டில் (Q1) பெரும் வளர்ச்சி கண்ட பகுதிகளில் இரண்டாவதாக விளங்குகின்றது. இந்த வளர்ச்சியானது 38% ஆக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் மருத்துவ காப்புறுதியின் வளர்ச்சியானது 35% ஆக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கையின் காப்புறுதி துறையின் மோட்டார் காப்புறுதி விற்பனையில் கூட அமானா காப்புறுதி நிறுவனம் 19% ஆல் முன்னேற்றம் அடைந்துள்ளது.

2021 ஆண்டின் முதற்காலாண்டின் (Q1) நிதி செயல்திறன் குறித்து கருத்து வெளியிட்ட முகாமைத்துவ பணிப்பாளர் திரு ஹசன் காசிம் மேலும் கூறுகையில் 2021 ஆம் ஆண்டில் அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நாம் கண்டுகொண்டிருக்கும் விரைவான வளர்ச்சிக்கு 2020 ஆம் ஆண்டில் புதுமையான சிந்தனை மற்றும் நவீன செயல்முறைகளை மையப்படுத்தி நாம் மேற்கொண்ட மூலோபாய ரீதியிலான மாற்றங்கள் முக்கிய காரணிகளாக அறிப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த முன்னேற்றத்துக்காக ஓர் அணியாக செயலாற்றிய நம் சக ஊழியர்களை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அத்தோடு இலங்கையின் காப்புறுதி நிறுவனங்களுள் வாடிக்கையாளர்களுடனான நட்பினை பேணிவரும் காப்பீட்டு நிறுவனமாக நாம் அடையாளப்படுத்தப் பட்டுள்ளதுடன் அத்தன்மையை நாம் தொடர்ந்து பேணுவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். இலங்கையின் காப்பீட்டுக்கான புதுமைகள் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் அதன் புதுப்பிக்கப்பட்ட வர்த்தக அடையாளத்துடன் அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனமானது ஜனவரி 2021 இல் புதுப்பொலிவுடன் மீண்டும் ஆரம்பமானது. நாட்டில் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சுகாதார ரீதியிலான சவால்கள் நம் முன்னால் இருந்தபோதிலும் இந்த ஆரம்பமானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நிறுவனத்துக்கு ஈட்டித்தந்துள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *